காலையில் நானும் கண்விழித்து,
நடை பயிற்சிக்கு தானே செல்லுகிறேன்..
சாலையில் இறங்கி நடக்கையிலே,
பூங்காற்றும் என் மீது மோதியதே!
சுற்றிலும் கூட்டமாய் பறவைகளும்
என் கூடவே சேந்து வருவது போல்..
கீச்சிடும் சத்தத்தை கேட்டதுமே
என் மனம் மென்மையாய் கூசிடுதே!
வானிலே மேகங்கள் சூழ்ந்திருக்க
சூரியன் மெல்லவே எட்டி பார்க்கும்..
சூழலில் கொஞ்சமே வெளிச்சம் வர
சூழ்ந்திட்ட இருளுமே நீங்கி போகும்..
பாதையை மாற்றி நீரோடை பக்கம்
என் பயணத்தை சற்றே தொடருகிறேன்..
பச்சை நிறத்தில் நீருமது எங்கோ
பாய்ந்து செல்கிறது வேகத்துடன்..
எங்கும் அமைதி நிறைந்திருக்க
நீர் பாய்கிற சத்தம் என் காதினிலே..
கேட்டதும் என்னுள்ளே மாற்றம் வர
என் குழப்பங்கள் யாவுமே தீர்கிறதே!!
கரைகளில் இருபுறம் புற்களுமே
அதன் நுனிதனில் சிறு சிறு நீர்த்துளிகள்..
பார்க்கையில் என் மனம் மெய் சிலிர்க்க
என் பயணத்தை தொடருகிறேன்..
மீன்களும் நீரிலே துள்ளி துள்ளி
நீரிணை எதிர்த்து நீந்திடவே ..
நானும் அது போல துன்பங்களை
கடந்து செல்லவே கற்று கொண்டேன்!!
எத்தனை விந்தை நம் மண்ணிலுண்டு
என எண்ணித்தான் நானும் அதிசயித்தேன்!!
இத்தனை ஆச்சர்யம் நானும் காண
என் இரு கண்கள் போதாதென்பேன்!!!
அன்புடன் திருவாளர் பீன்