தமிழ்ப் பூங்கா > திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)

இளையராஜா ஹிட்ஸ்

(1/30) > >>

Global Angel:
     
திரைப்படம்    உதய கீதம்
கதாநாயகன்    மோஹன்    கதாநாயகி     
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    S.ஜானகி



பெண்     :  ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......

பெண்     :  பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
                 பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
                 உன் பாடலை நான் தேடினேன்
                 கேட்காமலே நான் வாடினேன்
                 பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர 

              (இசை)                         சரணம் - 1

பெண்     :  நீ போகும் பாதை என் பூங்காவனம்
                 நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்...
                 ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
                 என் வீடு வாராமல் ஏன் போகுமோ

பெண்     :  கைதான போதும் கை சேர வேண்டும்
                உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
                என் ஜென்மமே ஈடேறவே

ஆண்     :  பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
                உன் பாடலை நான் கேட்கிறேன்
                பாமாலையை நான் கோர்க்கிறேன்
                பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

                  (இசை)                         சரணம் - 2

ஆண்      :  ஊரெங்கும் போகும் என் ராகங்களே
                 உன் வீடு தேடும் என் மேகங்களே
                 பூ மீது தேன் தூவும் காதல் வரம்
                 என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
                 காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்
                 ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
                 காதல் நிலா தூதாகுமே

ஆண்      :  பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

பெண்     :  உன் பாடலை நான் கேட்கிறேன்

ஆண்      :  பாமாலையை நான் கோர்க்கிறேன்

பெண்     :  பாடும் நிலாவே     ஆண்  :  தேன் கவிதை

பெண்     :  பூ மலரே...

Global Angel:
ஆண்   : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல

              (இசை)          சரணம் - 1

ஆண்   : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே ஓ ஓ
          இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
          நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல
          பெருகி வரும் மனித குலம் உலகிலே ஹேஹே
          பெருகி வரும் மனித குலம் உலகிலே
          எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல ஓ ஓ ஓ

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல 

              (இசை)          சரணம் - 2

ஆண்   : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
          நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
          பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
          நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
          உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
          உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
          இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல 
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
 

Global Angel:
திரைப்படம் :   தீபம்
கதாநாயகன் :   சிவாஜி கணேசன்    கதாநாயகி    சுஜாதா
பாடகர்கள்    :கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்    S.ஜானகி

ஆண்   : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          அங்கு வரவா தனியே
          மெல்ல தொடவா கனியே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

          பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          அங்கு வரவா தனியே
          மெல்ல தொடவா கனியே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

          (இசை)         சரணம் - 1

பெண்    : அரும்பான காதல் பூவானது
          அனுபவ சுகங்களை தேடுது
          நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
          நெருங்கவும் மயங்கவும் ஓடுது
          மோகம் வரும் ஒரு வேளையில்
          நாணம் வரும் மறு வேளையில்
          இரண்டும் போரடுது
          துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

ஆண்   : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே

பெண்    : ஆஹா

ஆண்   : இளங்கிளியே கிளியே

பெண்    : ஆஹா

ஆண்   : அங்கு வரவா தனியே

பெண்    : ஆஹா 

ஆண்   : மெல்ல தொடவா கனியே

பெண்    : ஆஹா

ஆண்   : இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

பெண்    : ஆஹஹா

          (இசை)          சரணம் - 2

ஆண்   : இள மாலைத்தென்றல் தாலாட்டுது
          இளமையின் கனவுகள் ஆடுது
          மலை வாழை கால்கள் தள்ளாடுது
          மரகத இலை திரை போடுது
          கார்மேகமோ குழலானது
          ஊர்கோலமாய் அது போகுது
          நாளை கல்யாணமோ
          எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

பெண்    : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          இங்கு வரலாம் தனியே
          மெல்ல தொடலாம் எனையே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது உனையே

          (இசை)          சரணம் - 3

ஆண்   : கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ

பெண்    : கலை இது அறிமுகம் வேண்டுமா

ஆண்   : அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ

பெண்    : நவரச நினைவுகள் போதுமா

ஆண்   : பூமேனியோ மலர் மாளிகை

பெண்    : பொன்மாலையில் ஒரு நாழிகை

ஆண்   : நாளும் நான் ஆடவோ

பெண்    : அணைக்கும்

ஆண்   : துடிக்கும்

பெண்    : சிலிர்க்கும் மேனி
          பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே

ஆண்   : ஆஹா

பெண்    : இளங்கிளியே கிளியே

ஆண்   : ஆஹா

பெண்    : இங்கு வரலாம் தனியே

ஆண்   : ஆஹா 

பெண்    : மெல்ல தொடலாம் எனையே

ஆண்   : ஆஹா

பெண்    : இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

ஆண்   : ஆஹஹா

Global Angel:
திரைப்படம்    நீதியின் மறுபக்கம்
கதாநாயகன்    சத்யராஜ்    கதாநாயகி     
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    வைரமுத்து


ஆண்    :  ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

                  (இசை)                         சரணம் - 1

ஆண்    :  உன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு உலகத்தக் கண்டு கொண்டேன்
                உன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு உறவொண்ணு கொண்டு வந்தேன்
                நீ சிரித்தால் பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும்
                செவ்வந்தி பூவுக்கு சோகம் என்ன சிங்கார கண்ணுக்குள் மேகம் என்ன- நீ சொல்லடி

                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ

                  (இசை)                         சரணம் - 2

ஆண்    :  மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணீரில் வந்ததம்மா
                உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி உயிரொண்ணு வாழுதம்மா
                நீ அழவோ பொன்மணியே நீர் விழவோ கண் வழியே
                கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீர தாங்காது இந்த மனம் - வா தேவியே

                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
 
 
 

Global Angel:
திரைப்படம்    உழைப்பாளி
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ரோஜா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    கவிதா கிருஷ்ணமூர்த்தி
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    பி.வாசு     

பெண்குழு       :   ததத் தத்தா...ததத்தா...  ததத் தத்தா...ததத்தா...
                         தா..ததத்தா.. ததத் தத்தா... தா..ததத்தா.. ததத்தா... (இசை)
 
பெ&பெ குழு    : முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்             :  ஹேய்...

பெ&பெ குழு    :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா

பெண்             :  அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ....

ஆண்             :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா..
                        ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

                         (இசை)                         சரணம் - 1

ஆண்             :  ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
                        ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண்            :  பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
                        உன்னையும் விடாது இந்த மனம்
                        பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
                        கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண்            :  என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
                        விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு  :  முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்           :  ஹேய்...

பெ&பெ குழு  :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா (இசை)

பெண்குழு     :  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..
                       துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..

பெண்குழு     : ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...
                      ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...

                                 சரணம் - 2

பெண்           :  பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும் வாங்கும்     பெ&பெ குழு :  உனையே விரும்பும்

பெண்           :  ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை     பெ&பெ குழு   :  மனதில் அரும்பும்

ஆண்           :  ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
                      ஏழைகள் ஏறிட விட்டதில்லை
                      உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
                      என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண்          :  என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
                      பிடிவாதம் கூடாதே...

ஆண்           :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
                      விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ...ஓ..ஹோ...

பெண்          :  ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version