தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 338

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 338

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Lakshya:
நேசிப்பவர்கள் எல்லாம் கூடவே இருந்துவிட்டால் இசையின் அர்த்தம் தெரிவதில்லை....விட்டு விலகிசென்ற பின் அதன் வலிகள் புரிகிறது ஏனோ...

மனிதர்களால் தரமுடியாத ஆறுதலை கூட இசை தருகிறது மருந்தாக...
செவிகளின் வழியாக புண்பட்ட மனதிற்கு தரும் மருந்து இசை... மகிழ்ச்சியாக இருக்கும்போது பாடல்களை  ரசிக்கிறேன்...வருத்தத்தில் மட்டுமே அதன் வரிகள் புரிகின்றது...

மகிழ்ச்சி, சோகம், கோபம்,வலி அனைத்திற்கும் தீர்வு இசை மட்டுமே !!இசைக்கு நினைவுகளை தூண்டும் சக்தி உண்டு சமயங்களில் வலியும் சேர்த்து...

இசையே நமது வாழ்க்கை...சில நேரங்களில் அதில் வரும் வரிகளே நமது வாழ்க்கை கதை...போதை மருந்தாக கருதப்படுகிறது ஏனெனில் மறப்பது எளிதல்ல...!!!

தனிமையை நாமே எடுத்து கொண்டால் இனிக்கும், மற்றவர்கள் அதை கொடுத்தால் வலி பெரிது... இசை இரண்டிலும் நம்முடன் பயணிக்கிறது..எதற்கு???

இசையை போதையாக கருதுவதற்கு காரணம், வரிகளின் வலி, குரளின் இனிமை, இசை கருவிகளின் தனித்துவம் என அனைத்தும் உள்ளடங்கிய காவியம் இசை...

என் தனிமையில் துணையாக இருந்தது இன்னிசை மட்டுமே...மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள் அனைத்திற்கும் பின்னே நீ இருப்பதை அறிவாயாக...

Sun FloweR:
கிறங்க வைக்கும் போதையாய் இருப்பதும் இசையே..
உற்சாகமூட்டும் ஊக்கமாய் இருப்பதும் சங்கீதமே..
பிணி தீர்க்கும் மருந்தாய் இருப்பதும் நாதமே..
அரவணைக்கும் பந்தமாய்
இருப்பதும் கீர்த்தனையே..

தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரி வரை தொடரும் இது..
தனியே சிரிப்பதற்கும் தனியே அழுவதற்கும் தலைசாய்க்கும் தலையணையாய் இருப்பதும் இதுவே...

பிறப்பு முதல் இறப்பு வரை
தொடர்ந்திடும் பேரொளியும் இதுவே..
பழமையாய் இருந்தாலும் நித்தம் புதுமை செய்வதும் இதுவே..

அன்னையின் தாலாட்டில் ஆரம்பிக்கும் இசை,
பிண்டமாய் நம்மை கரைக்கும் வரை தொடர்ந்து வருவது
மானுடத்தின் வரம்..

நாடு கடந்து, மொழி கடந்து ரசிக்க வைக்கும் இசை, நமக்குள் கரைந்து போகவும், அதற்குள் நாம் கரைந்து போகவும் செய்வது மானுடத்தின் அட்சய பாத்திரம்..

அன்னை சொல்லாத மொழியைக் கற்றுத் தரும் இன்னிசை..
நண்பன் தராத, ஆறுதலைப் பரிமாறுவது ஏழிசை ..

கணவன், மனைவி தராத மயக்கத்தை மல்குவது மெல்லிசை..
உறவுகளில் மட்டுமல்ல இயற்கையிலும் படர்ந்திருக்கும் பண்ணிசை..
நினைப்பதற்கு மட்டுமல்ல மறப்பதற்கும் யாழிசை..

ஆழி சூழ் உலகினைப் போல
இசை சூழ் உலகாய் என்றும் நம்மை விருந்தாய், மருந்தாய் இருந்து உயிர்ப்பூட்டுவது ராகமும் தாளமும் தானே...

NiYa:
நானும் அவனும் இருந்த நாளில்
இசையின் இனிமை அறிந்தேன்
அவன்  இல்லாமல் நான் வாழும் நாளில் -தான்
இசையில் துணை அறிந்தேன்

இசை என்பது வெறுமனே
இனிமை மட்டும் அல்ல 
தனிமையில் நண்பன்
வெறுமையில் தோழன்

சிரிப்பில் சகோதரன்
அழுகையில் அன்பன்
எத்தனையோ ஏமாற்றத்தின்
மத்தியில் ஆறுதல்
 
இப்படி எப்பொழுதும்
இசை என் உடன் இருப்பு
யார் என்னை விட்டு நீங்கினாலும்
நீங்காமல் காக்கும் காவல்

பலர் சொல்லி அறிந்தேன்
இசை என்பது தோழன் என்று
நான் உணர்ந்தது இசை
என்பது போதை  என்று

அவன் இருந்த போது
என் போதை அவன்
அவன் இல்லாத போது
என் போதை இசை தான்

VenMaThI:



கருவறை முதல் கல்லறை வரை
எங்கும் இசை எதிலும் இசை..
புரியாத மொழியாயினும்..மனதில்
பதிய வைப்பது இந்த இசை...

சந்தத்தில் உள்ள ஏற்றமும் இறக்கமும்
கேட்கும் மனதில் உண்டாக்குமே சாந்தம்...
ஏற்றம் இறக்கம் நிறைந்ததே வாழ்க்கை..என்பதை
சொல்லாமல் சொல்லுதோ இவ்விசை....

என்றோ நடந்த நிகழ்வுகள் கூட
காலப்போக்கில் அழிந்து விடுகையில் ..
என்றோ எங்கோ கேட்ட பாடலை மட்டும்.. ஆழ்மனதில் அழியாமல் பதித்தது இந்த இசை....

காலத்தால் அழிக்க முடியாமல்
எந்த மருந்தாலும் நீக்க முடியாமல்
ரணமாய்ப்போன மனதை அரவணைக்கும் மருந்தாய்...
என்றுமே இருப்பதும் இந்த இசையே...

இசையானது....

காதலில் விழுந்தோரை
கற்பனையில் மிதக்கவிடும்
காணாமல் போனவரை
நம் கருத்தினில் நிறைத்துவிடும்...

கடும் பாறையாய் உள்ள இதயத்தையும்
கனப்பொழுதில் கரைத்துவிடும்..
தொலைவில் உள்ள தலைவனவன்
தொடுதலையும் உணர வைக்கும்...

கூட்டத்தில் குத்தாட்டம் போட வைக்கும்
தனிமையிலோ இனிமை காண வைக்கும்
தன்னையே மறந்து மயங்கும் நிலை கூட
இந்த இசையால் மட்டுமே சாத்தியம் ஆகும்...

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
முகமும் முகவரியும் அறியா நாமும் கூட ...இன்று
நண்பர்களாய் இங்கு இருப்பது
ஒரு வகையில் இந்த இசையால் தானே??

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️



Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version