Author Topic: பால் கவர்கள்....ஒரு எச்சரிக்கை  (Read 3444 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பால் கவர்கள்....ஒரு எச்சரிக்கை
 
பல வீடுகளில் பழைய பொருட்க்களை விற்கும் பழக்கம் இருந்து வருகிறது, அயல் நாடுகளில் எந்த பொருளானாலும் அவற்றை குப்பையில் போடுவதும் குப்பையை எடுத்துச் செல்பவர்கள் அவற்றை வகைப்படுத்தி தனித்தனியே குப்பைகளில் கொண்டு போய் சேர்த்து விடுவர்.

அங்கே பழைய பொருள்கள் பெரும்பாலும் திரும்பவும் பயன்படுத்துவது கிடையாது. இதற்க்கு முக்கிய காரணம், ஒரு பொருள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட நாள்வரை தான் உபயோகப் படுத்தப் பட வேண்டும் என்பது சுகாதாரத்திற்காக விதிக்கப் பட்டிருக்கும் விதி.

இத்தகைய விதிகளை மீறி அந்த பொருளை பயன் படுத்துவோம் என்றால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதற்காக சொல்லப்பட்டுள்ளது. நமது நாட்டில் உதாரணத்திற்கு பால் இப்போதெல்லாம் பிளாஸ்டிக் உரைகளில் கிடைக்கிறது, இதிலிருக்கும் பால் எப்படி குறிப்பிட்ட நாளுக்குள் பயன் படுத்தப்படவில்லை என்றால் கெட்டுப் போகிறதோ அதே போல அந்த பாலை கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதற்காக தயாரிக்கப் பட்டது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.

பல படித்தவர்கள் வீடுகளில் கூட பாலை உபயோகப் படுத்திவிட்ட பின்னர் அந்த பிளாஸ்டிக் உரையை சேர்த்து வைத்து விற்ப்பனை செய்கின்றனர், அப்படி வாங்கி செல்லும் பிளாஸ்டிக் உரைகளை என்ன செய்கிறார்கள் என்பது பற்றி யாரும் யோசிப்பது இல்லை. சமூக விரோதிகள் அந்த பிளாஸ்டிக் உரைகளை அரைகுறையாக கழுவி அவர்கள் தயாரிக்கும் பாலை நிரப்பி மறுபடியும் விற்ப்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

பழைய செய்தித்தாள்களை விற்ப்பனை செய்யும்போது அது மனிதனின் சுகாதாரத்திற்கு எந்த விதத்திலும் கேடு விளைவிப்பதில்லை. மருந்து குப்பிகள் போன்ற மனிதனால் உட்கொள்ளப்படும் எந்த பொருளும் திரும்பவும் போலிகளை விற்ப்பனைக்கு கொண்டுவர நாமே உறுதுணையாகி வருகிறோம் என்பதை யாருமே நினைவு கூறுவது கிடையாது.

எந்த பொருளை பயன் படுத்தினாலும் குப்பையில் போடும் போது அதனை நன்றாக சிதைத்தப் பின்னரே போடவேண்டும், இல்லையென்றால் அவை மறுபடியும் போலிகளை உருவாக்க மிகப் பெரிய உதவியாக இருந்துவிடும்.

போலிகளை கண்டு பிடிப்பது எளிதல்ல, இதனால் இத்தகைய பயன்படுத்தப் பட்ட பாடில்கலையோ, பிளாஸ்டிக் உரைகளையோ, தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களோ வேறெந்த பொருளானாலும் உபயோகபடுத்தியப் பின்னர் அதனை அப்படியே குப்பையில் எறிவதை நிறுத்தி விடுங்கள், அப்படி செய்வதால் நாம் போலிகளுக்கு இடம் தருவதை ஓரளவு குறைக்க முடியும்

Offline RemO

Nala pathivu angel
elorum therunchuka vendiya info