Author Topic: புதியதாய் வாழ்வது எப்படி  (Read 2568 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


யாராலும் பின்னோக்கி சென்று புதிய வாழ்கையை தொடங்க முடியாது. ஆனால் யார் நினைத்தாலும் இன்று தொடங்கி நாளை ஒரு புதிய வாழ்கையை அமைத்துக்கொள்ள முடியும். நாம் புதியதாய் வாழ சில வழிமுறைகள் கீழே.

01.பழைய நினைவுகளிலிருந்து விடுபடுங்கள்
பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் வாழ்க்கை ஆகையால் மீண்டும் பழையவற்றினை நினைத்து அதற்கு உயிர் கொடுக்காதீர்கள்.

02. வாழ்க்கை பாடத்தை கற்று கொள்ளுங்கள்
நம் வாழ்வில் நடப்பவை அனைத்துமே நமக்கு ஒரு பாடத்தை போதிக்கின்றன, நீங்கள் பழகிய, சந்தித்த, எதிர்நோக்கிய விஷயங்கள் அனைத்தும் உங்கள் வாழ்வின் நீங்கள் சந்தித்த வாழ்க்கை பாடங்களே. அதில் நீங்கள் நிறைய ஏமாற்றங்களும், ஏற்றங்களும் சந்தித்து இருக்கலாம். அவற்றில் நல்லனவற்றை மைல்கல்லாக எடுத்துக்கொண்டு. தீயவற்றினை அனுபவமாக ஏற்று கொள்ளுங்கள்.

03. எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்.
எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்,
நேர்மறை எண்ணங்கள் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகையால் எப்போதும் நேர்மறையாக சிந்திக்கவும் நினைக்கவும் பழகிக் கொள்ளுங்கள், அது உங்களை மட்டும் அல்லாது உங்களை சார்ந்தவர்களையும் உயர்ந்தவர்களாகும்.

04.பொறுப்பேற்று கொள்ளுங்கள்

உங்கள் வாழ்வில் ஏற்றம் ஏற்பட்டாலும் சரி அல்லது  இறக்கம் ஏற்பட்டாலும் சரி அதற்கு முழு பொறுப்பாளர் நீங்களே , எந்த ஒரு விஷயமும் உங்களை மீறி நடைப்பெறாது. அவ்வாறு நடைப்பெற்றால் அதற்கு உங்கள் கவனமின்மையே காரணமேயன்றி வேறு யாரும் அல்லர்.

௦5.எதற்காக வாழ்கிறீர்கள் என்பதனை கண்டறியுங்கள்.
வாழ்க்கை பந்தயத்தில் எதற்காக ஓடுகிறோம் என்பதனை அறிந்து கொண்டு ஓடுங்கள். சிலர் சிறந்த இசையமைப்பாளர் ஆவதற்கும், தொழிலதிபர் ஆவதற்கும் ஓடுகின்றனர், நீங்கள் எந்த இலக்கை நோக்கி ஓடுகின்றீர்கள் என்பதை தெரிந்து கொண்டு ஓடுங்கள்.

06. தேவையில்லாவற்றை ஒதுக்குங்கள்
நீங்கள் என்னவாக போகின்றீர்கள் என்பதை உணர்ந்து அதற்கு உங்களை தயார்படுத்தி அதற்கான சந்தர்பங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள், தேவையில்லாவற்றினை அறவே ஒதுக்கிவிடுங்கள்.

07. எப்பொழுதும் யதார்த்தமாய் இருங்கள்.
ஒரு செயலையோ, விஷயத்தையோ கடினமாகவும், கண்மூடித்தனமாகவும் பின்பற்றாதீர்கள், யதார்த்தமாய் அதனை உங்கள் வழியில் பழக்கிக்கொள்ளுங்கள், இப்படி செய்வதன் மூலம் ஒரு செயலை நாம் செம்மையாகவும் முழுமையாகவும்  கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் முடியும்.


08. திட்டமிடுங்கள்
நாள் அட்டவணை ஒன்றை உருவாக்கி அதில் நீங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எதை முடிக்க வேண்டும் என்பதனை எழுதி அதன்படி அதனை செம்மையாய் பின்பற்றுங்கள், அது உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தவும், உங்கள் இலக்கினை சீராக அடையவும் உதவும்.

o9. சுற்றத்தாரை கவர எண்ணாதீர்கள்.
அது உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயலாகும், நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் இருங்கள் அதுவே அவர்களை கவரும், மாறாக நீங்கள் அவர்களை கவர எண்ணினால் பின்னர் அவர்களை கவரவே சிந்திக்கவும், செயல்படவும் தோன்றும்.

10. பெரிதாய் சிந்தியுங்கள்.
சிறிதாய் சிந்திப்பதை போலத்தான் பெரிதாய் சிந்திப்பதும், அதற்கு நாம் சற்று கூடுதலாக உழைக்க வேண்டும் அவ்வளவே, ஆகையால் எதனையும் பெரிதாய் சிந்தித்து உறுதியாய் செயல்படுங்கள். வெற்றி உறுதி.



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்