Author Topic: வாருங்கள் கவிதைகள் பற்றி பேசலாம்...  (Read 7539 times)

Offline Anu

பெரியவங்க எல்லாம் பேசுறிங்க.
இந்த சின்னவ என் மனசுல பட்ட பெரிய விசயத்த 
சின்னதா சொல்லிடு போய்டறேன்
அற்புதம் அபாரம் உங்க தொடர் கவிதை.
மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


இந்த கவிதையில் நான் உணர்ந்து கொண்டது என்ன வென்று சொல்ல விழைகிறேன்..

அவரவர் மனநிலைக்கேற்ப கருத்துக்கள், கோணங்கள் மாறும்..

என் புரிதல் இதுதான்..

இந்த கவிதை ஹைகூ கவிதையின் பேராசான் பாஷோவால் எழுதப்பட்ட கவிதை, பாஷோவுக்கு பிறகு ஹைகூ கவிதைகளே எழுதப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.. காரணம் ஹைகூவி இலக்கணத்தை யாரும் முழுதாக பின் பற்றவில்லை என்பது ஒரு வாதமானாலும், ஹைகூ கவிதைக்காக வீச்சும் இல்லை என்பது இன்னொரு வாதம்..

தமிழில் ஹைகூ குறித்து எண்ணற்ற ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்கின்றன.. ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரி இருக்கின்றது.. ஆதாவது ஹைகூவை ஆய்வு செய்தவர்களின் ஹைகூ குறித்த புரித்தல்கள் ஒரு பட்டில்லை..

ஆனாலும் அவர்களின் ஆய்வு நூல்களில் இருந்து பல அரிய தகவல்களை பெற இயல்கிறது..

சரி இந்த பாஷோவின் கவிதையை பற்றி பார்ப்போம்..

ஹைகூ விதிப்படி ஒரு காட்சியை பாஷோ அப்படியே பதிவு செய்திருக்கிறார்.. இந்த கவிதைக்கான உண்மையான பொருள் இந்த கவிதையை அவர் வடிக்கும் போது அவரின் பக்கத்தில் இருந்திருந்தாலோ, அல்லது பாஷோவாக இருந்திருந்தாலோ மட்டுமே அறிந்திருக்க முடியும்.. மற்றப்படி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் நம் மனதுக்கு தோன்றும் கருத்துக்களே....

பழைய குளம் என்பதை நான் வாழ்க்கையாக எடுத்துக் கொள்கிறேன்..

இந்த வாழ்க்கை பழையதுதானே பலர் வாழ்ந்தது, பலர் வாழ்ந்து கொண்டிருப்பது, பலர் வாழவிருப்பது..


குளத்தில் தவளை குதித்தது தண்ணீர் சத்தம் என்பதன் மூலம், குளம் முன்பு அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

அமைதியான ஒரு வாழ்வில் திடீரென்று ஒரு பெரும் துயரோ, சோதனையோ, மகிழ்ச்சியோ உண்டாகும் போது வாழ்வும் இந்த குளம் மாதிரித்தான் அமைதி இழக்கிறது, ஆர்ப்பறிக்கிறது..

பிறகு அந்த குளம் அமைதியாகி இருக்க வேண்டும்..

குளத்தோடு தவளையும் ஒன்றாகி இருக்க வேண்டும்.. அப்புறம் தவளை குளத்துக்குண்டானதாய் மாறிவிடுகிறது..

நம் வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளும் அப்படித்தான் நம்முடையதாய் ஆகிவிடுகிறது, அந்த நேர்ச்சியை, அந்த நிகழ்வை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அது நமக்குண்டானது, நம்முடையது என்றாகிவிடுகிறது.. மீண்டும் அந்த தவளை குளத்தில் இருந்து வெளியேறவும் செய்யலாம், அப்போதும் அந்த குளம் கொஞ்சம் அமைதி இழக்கலாம், மீண்டும் தவளை குதிக்கலாம், குளம் சபத்திக்கலாம்.. குளத்திலும், வாழ்விலும் இது தொடரும் நிகழ்வுதான்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஹஹா இப்போது பல அர்த்தங்களில் இந்த கவிதை புரிகின்றது .... உண்மைதான் ஆதி ஹைக்கூ கவிதைகளில் மட்டுமல்ல மற்றைய கவிதைகளில் கூட இலக்கணம் அதன் மரபு இதெல்லாம் அதிகம் பின்பற்றபடுவதில்லைதானே ... நான் கூட பின்பற்றிநேனோ இலையோ ... 
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இலக்கணம் என்று நான் யாப்பை குறிப்பிடவில்லை

புதுக்கவிதையும், நவீனக்கவிதையும் இயங்கி கொண்டிருக்கும் காலத்தில் அயல்நாட்டு கவிதை வடிவத்தின் இலக்கணங்களை பின்பற்ற சொல்வது அபத்தமில்லையா

இலக்கணம் என்று சொன்னது ஜென் தத்துவத்தை, ஹைகூ ஜென்களால் பயன்படுத்தப்பட்ட வடிவம், அவர்கள் அதனை ஜென் மனநிலையை பதிவு செய்ய பயன்ப்டுத்தினார்

ஏ துடைப்பமே
உனக்கு யார் கற்று தந்தது
கூட்டலும் பெறுக்கலும்

குண்டு ச‌ட்டிக்குள்
குதிரை
இந்தியா

அட‌டே
ஒரு ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட் சாப்புடுகிற‌தே!!!

என்று வாரமலரில் எழுதி அதற்கு ஹைகூ என்று தலைப்பு வைத்து எழுதுவதை பார்க்கும் போது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை


அன்புடன் ஆதி

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
வணக்கம், எனக்கு தமிழறிவு பள்ளி பாடத்தோடு முடிந்தாயிற்று இபொழுதுதான் தமிழின் மீதுள்ள ஈர்ப்பினால் புத்தங்கங்களை வாசிக்க துவங்கி இருக்கிறேன். அதுவும் உரைநடை பகுதிகள், இலக்கன இலக்கியங்களை கற்று தேறுவேனா என்பது கேள்விக்குறிதான், இந்த திரியில் (கவிதை விளையாட்டு) குறுகிய காலத்திற்கு முன்புவரை எதையாவது எழுதி கவிதை என்கிற போர்வையில் போட்டு, அதை கவிதை என்று நினைத்தே பல நாட்களை கடத்திவிட்டேன், இந்த பகுதிகளை படித்த பின்பு தெரிகிறது அது முட்டாள்தனம் என்பது, இந்த பகுதியில் விளக்கம் அருமையாக தந்துளீர்கள், மேலும் தொடருவீர்கள் எனில் என்னை போன்ற தமிழ் ஆர்வம் உள்ளோருக்கு பயனுள்ளதாக இருக்கும்,

"கண்டறியா உலகில்
 கன்கட்டிய வித்தை
 கவிதை"
 
இலக்கணம் என்பது கடுமையான சவால்தான் அதை எளிதில் விளங்க வைக்க உங்களால் முடியும் என நம்புகிறேன் அதை தனி திரியில் துவங்கி இலக்கன விளக்கம் அளிப்பீர்கள் எனில் இணையத்தில் இலக்கணம் அறிய தேடும் மாணவ செல்வங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. சிறு சிறு உதாரணங்களோடு விளக்கினால் நன்றாக இருக்கும்
உவமை, உருவகம், உவமேயம் இவை யாவையும் வேறுபடுத்தி காட்டினால் நன்றாக இருக்கும்.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நன்றி சுதர்சன்

எப்போது நாம் சுய பரிசோதனைக்கு உட்படுகிறோமோ, அப்போதே நாம் அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை தயார் படுத்த ஆரம்பித்துவிட்டோம் என்று பொருள், அந்த வகையில் தங்களின் பதிவும் தங்களை அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதையே வெளிப்படுத்துகிறது

இந்த தேடல் இருக்கும் வரை நாம் அடுத்த அடுத்தக் கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருப்போம், இருக்கும் இடத்தில் சிறப்பாய் இருக்கிறோம் என்று எப்போது எண்ணம் வருகிறதோ, அப்போதே நம் வளர்ச்சியும், முதிர்ச்சியும் நின்றுவிடுகிறது

ஜென் சொன்னதுதான் "உன் கோப்பையை காலி செய்", இதை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும் காலமுழுக்க கற்று கொண்டே இருக்கலாம்

நீங்கள் சொன்னவைகளை கருத்தில் கொண்டு செய்ய முயற்சிக்கிறேன் சுதர்சன்
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
உன் பூவிதழ்
வடித்த தேனை
என் வண்டிதழ்
குடித்தது

ஒரு காதலன் காதலி முத்தமிட்டுக் கொள்வதை பற்றிய கவிதையாக பார்த்தோமில்லையா

இதே கவிதையை
உன் பூவிதழ்
வடித்த தேவை
என் மனவண்டு
குடித்தது

என்று ஒரு வார்த்தையை மட்டும் மாற்றினால் இக்கவிதை பல்வேறு அடுக்குகளை உள்ளடக்கியதாக மாறிவிடுகிறது

பூவிதழ் வடித்த தேன் புன்னகையாகவும், அதனை அவன் மன வண்டு பருகுவதாகவும் மாறுகிறது

அந்த புன்னகை காதலியால் வழங்கப்படும் போது அது அவன் மனதை காதலின் போதையில் மிகக்கவிடுகிறது

அந்த புன்னகை ஒரு பெண்ணின் சரசபுன்னகையாக இருக்கும் போது, அது அவன் மனதை விரக ரசத்தில் தோய்கிறது

இப்படி காதலையும், காமத்தை பேசும் ஒரு வார்த்தையாகிறது

இத்தோடு மட்டும் இக்கவிதை இன்றுவிடவில்லை

பூவிதழ் வடித்த தேன்

புத்தனின், ரமணரின், ராமகிருஸ்ணரின், ஏசுவின், நபியின், கண்ணனின் உபதேசங்களாக கொள்ளப்படும்போது, மன வண்டு குடித்த தேன் ஆன்மீகமாக விடுகிறது

சூஃபிகளின் பார்வையில் படிக்கப்படுகையில்

இறைவனுக்கும் நமக்கும் உள்ள காதலை பற்றி பேசுவதாகிறது

ஜெஃ பார்வையில் பார்க்கும் போது, மன வண்டு குடித்தத்தேன் ஞானமாகிறது

ஒரு ஆசிரியன் கற்று தரும் பாடத்தை மாணவன் ருசியொடு படிப்பதாகவும் இந்த கவிதை அமைகிறது

மாற்றப்பட்டது ஒரு வார்த்தைதான் ஆனால் அது பொதித்து வைத்திருக்கும் பொருள் மிக விசாலமானது, பல்வேறு தளங்கள் கொண்டது

அதனால்தான் ஒரு படைப்பில் இடம் பெருகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாகிறது

தேவையற்ற வார்த்தைகள் அழகுற இருந்தாலும் அதை படைப்பில் இருந்து நீக்கிவிடும் போது அந்த படைப்பு சிறப்பானதாக அமைகிறது

இதைத்தான் இஸ்லாதின் சட்டங்கள் கூட சொல்கிறன போலும், உன் உடலில் உள்ள உறுப்பு பிறர்க்கு கேடுள்ளதாய் இருந்தால் அதனை நீக்கி சுத்தமானவனாக நீ வாழ்தல் நலம் என்று..

தொடரும்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
இதைத்தான் இஸ்லாதின் சட்டங்கள் கூட சொல்கிறன போலும், உன் உடலில் உள்ள உறுப்பு பிறர்க்கு கேடுள்ளதாய் இருந்தால் அதனை நீக்கி சுத்தமானவனாக நீ வாழ்தல் நலம் என்று..


ஹஹஹா ... அப்போ மனிதனே இருக்க வாய்ப்பில்லையே .. எதோ ஒரு விதத்தில் அடுத்தவருக்கு தெங்கு செய்யும் உறுப்புக்கள் இருக்கத்தானே செய்கின்றது
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஆரம்ப காலத்தில் கவிதை எழுத முயலும் பலருக்கு

கவிதைக்கும் வசனத்துக்கும் வித்யாசங்கள் புரிவதில்லை

உதாரணமாக‌

தமிழர்களே தமிழர்களே
நீங்கள் என்னை கடலில்
தூக்கி போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்
அதில் நீங்கள் ஏறி
பயணம் செய்து கொள்ளலாம்
கவிழ்ந்துவிட மாட்டேன்

இது ஒரு வசனம் இது கவிதையன்று, இதனை எழுதிய கலைஞர் அவர்கள் இது கவிதையாக மாற வேண்டிய இடத்தில் தெரிந்தே தவிர்த்திருக்கிறார்

அவரின் நோக்கம் கவிதை எழுதுவது அன்று, தமிழர்களை கவர்வது, இதே வசனத்தை

தமிழர்களே தமிழர்களே
நீங்கள் என்னை கடலில்
தூக்கி போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்
கவிழ்ந்துவிட மாட்டேன்


என்று சொல்லியிருந்தாலே அவர் சொல்ல வந்ததின் பொருள் சரியாகவே அமைந்திருக்கும்

அல்லது கட்டுமரம் என்பதற்கு பதிலாக கப்பல் என்று சொல்லியிருந்தாலும் போதும்

ஆனால் அவரின் நோக்கம் கவிதை போல பேசுதல், தன் நிலைப்பட்டையும், தன் தன்மையையும், தான் தமிழர்களுக்காகவே வாழ விரும்புவதையும் போல பற்றி பேச நினைத்ததால்


அதில் நீங்கள் ஏறி பயணம் செய்து கொள்ளலாம் எனும் வரியை சேர்த்திருக்கிறார்

ஒரு வேளை அவர், இப்ப‌டி எழுதியிருந்தால்

தமிழர்களே தமிழர்களே
நீங்கள் என்னை கடலில்
தூக்கி போட்டாலும்
கப்பலாக‌த்தான் மிதப்பேன்
கவிழ்ந்துவிட மாட்டேன்

இது இரு அர்த்தமுடைய கவிதையாக இருந்திருக்கும், அன்றிருந்த சூழலில், இன்றிருக்கும் சூழலில் பலருக்கும் புரிய வாய்ப்பில்லை, கவிதையை எதிர்திசையில் பலரும் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் அதிகம்

கடலில் கூட கப்பலாக மிதக்கும் வல்லமை பெற்றவன் நான் என்று சுயப்புகழ்ச்சி பாடும் கவிதையாக இது அமைந்துவிடும் அபாயம் நிறைந்ததாலேயே கலைஞர் தெரிந்தே அந்த வரியை சேர்த்திருக்கிறார்

ஒரு கவிதைக்கும் இருக்கும் தேவையான வேதையற்ற வரிகளை, வார்த்தைகளை, கண்டறிந்து கவிதைகளை ரசிக்கும் போது கவிதை நுட்பம் மேலும் வளர்கிறது

அந்த வசனங்களில் ஈர்ப்பு கொண்டு அப்படியே வார்ததைகளை கோர்ப்பது கவிதைகளாகிவிடுவதில்லை, அவை உரைநடையாக மட்டுமே கருதப்படும், அது எந்த‌ வ‌ள‌ர்ச்சியையும் எழுதுப‌வ‌ர்க்கு கொடுப்ப‌தில்லை, வ‌ள‌ர‌வே வ‌ள‌ராத‌ ஒரு க‌ன்றாய் ஆகி ப‌ட்டு போகும்

உரைநடையாக கருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்றே கலைஞர் அந்த வரிகளை சேர்த்திருக்கிறார், ஏனெனில் அதில் தப்பாக இன்னொரு அர்த்தம் உள்ளதை அறிந்து கொண்டு அவரை ஜம்பம் பேசுகிறவர் என்று சாட கூடும் என்பதை புரிந்து அந்த வார்த்தையை இணைத்திருக்கிறார்

ஒரு ந‌ல்ல‌ ப‌டைப்பாளி த‌ன‌க்கு தானே நேர்மையான‌ விம‌ர்ச‌க‌னாக‌ இருக்க‌ வேண்டும், அப்போதுதான் அவ‌ன் ந‌ல்ல‌ ப‌டைப்பாளி/ழி


தொடரும்
« Last Edit: September 17, 2012, 05:56:35 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உணமைதான் ஆதி அது அந்த காலமல்ல இந்த காலத்திலும் ... பேசுவதை ஓர் நினைப்பதை சுத்த தமிழில் கூறிவிட்டால் அது கவிதை என்று நினைத்து கொள்கின்றார்கள் ... கவிதைக்கும் பேசுக்கும் நிரம்ப வித்தியாசம் உள்ளது என்பது உங்கள் பதிவில் படித்து அறிந்திருப்பார்கள் ...

கவி அரசு கண்ணதாசன் பாடல்கள்  பாமரர்களுக்கும் புரியக்கூடிய கவிதைகளாய் பெரும்பாலும் அமைந்திருக்கும் .. ஆனால் கற்றவரையும் பொருள்மயக்கம் கொள்ள செயும் வல்லமை மிக்க கருது பொதிந்த பல பொருள் தழுவிய ஒரு கவிதை பாடலை அண்மையில் கேட்க கிடைத்தது .. இதை பற்றி கடந்த இரவு அரட்டை அரங்கத்தில் அளவளாவினோம் ஆதி ... இருந்தாலும் இது இங்கே அளவளாவுவதற்கு உரிய விடயமாக பட்டதால் இங்கு எனக்கு என் அறிவுக்கு எட்டிய வரையில் இதை பகிர விளைகிறேன் ..


அத்திக்காய்  காய்காய்  ஆலங்காய்  வெண்ணிலவே 
இத்திக்காய்  காயாதே  என்னைப்போல்  பெண்ணல்லவோ ...
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே 
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
கன்னிக்காய்  ஆசைக்காய்  காதல்கொண்ட  பாவைக்காய்   
அங்கேகாய்  அவரைக்காய்  மங்கை  எந்தன்  கோவைக்காய்
மாதுளங்காய்  ஆனாலும்  என்னுளம்  காய்  ஆகுமோ   
என்னை  நீ   காயாதே  என்னுயிரும்  நீயல்லவோ   
இரவுக்காய்  உறவுக்காய்  எங்கும்  இந்த  ஏழைக்காய்   
நீயும்  காய்  நிதமும்  காய்  நேரில்  நிற்கும்  இவளைக்காய்
உருவம்  காய்  ஆனாலும்  பருவம்  காய்  ஆகுமோ 
என்னை  நீ  காயாதே  என்னுயிரும் நீயல்லவோ ..   
ஏலக்காய்  வாசனைபோல்  எங்கள்  உள்ளம்  வாழக்காய்
ஜாதிக்காய்  பெட்டகம் போல்   தனிமை  இன்பம்  கனியக்காய் 
சொன்னதெல்லாம்  விளங்காயோ  தூதுவிளங்காய்  வெண்ணிலா   
என்னை  நீ  காயாதே  என்னுயிரும்  நீயல்லவோ ...
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவோருபேர் குறைகயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ
கோதையை நீ காயதே கொற்றவரை காய் வெண்ணிலா
இருவரையும் காயதே தனிமையில் ஏங்காய் வெண்ணிலா ..

 

இதுதான் அந்த பாடல் மேலோட்டமாக இந்த கவிதை பாடலின் அர்த்தத்தை ஆய்வு கண்டால் ஒரு காதலன் காதலி சந்திக்கும் இடத்தில காய்கின்ற வெண்ணிலவை காதலியை இன்பபடுதும் முகமாக காதலன் வெண்ணிலவை போன்றவள் இங்கு இருக்கிறாள் எனவே வேற திக்கில் காய்ந்துகொள்... அந்த தோப்பில் தொங்கும் காய் கனிகளை உவமான உவமேயங்களுக்கு உட்படுத்தி பாடியதாய் பொருள் கொள்ள முடிகின்றது... ஆனால் இதன் காட்சி பதிவு ஒளி வடிவில் பார்த்தால்  தோன்றும்  கரு வேறு பாருங்கள் 

<a href="http://www.youtube.com/v/muWBARd3oAk" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/muWBARd3oAk</a>

இதன் படி பொருள் பார்த்தல் ... திருமண இரவில் ஒளிரும் வெண்ணிலா .. ஒளியை அதிகமாக உமிழ்கின்றது ... இதனால் நாணம் கொள்ளும் பெண் நிலவை பார்த்து ... இங்கே இருக்காதே போய்விடு நீயும் பெண் தானே உனக்கும் புரியும் என்ற ரீதியில் பாடுகின்றாள் .. தலைவனும் அவள் எண்ணத்துடன் ஒத்து போய் என் உயிரானவள் சொல்வதை போல் வேறு திக்கில் போய் காய்ந்து கொள்ள சொல்கின்றாள் ...


கன்னிக்காக  அவள் கொண்ட காதலுக்காக ...  காதலுற்ற  பாவைக்காக .. அவள் இதழ் களுக்காக அவரிடம் சொல் அதாவது முத்தம் வேண்டும் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் வேநிலவிடம் சொல்வது போல் சொல்கிறாள் மங்கை ... மாது உள்ளம் காய் ஆனாலும் அதாவது மாது உள்ளம் கனியாது இருந்தாலும் என் உள்ளம் கனியாது இருப்பேனோ .. என்னை நீ காயதே .. அதாவது என்னை வாட்டாதே என் உயிரானவள் நீதானே .. இப்படி பொருள் கொள்ள முடிகின்றது


இரவுக்காக உறவுக்காக எங்கும் இந்த ஏழை காக  நிதமும் நீ வந்து இவளிடம் தேவைகளை சொல்லி ... இவளை இன்பதில் ஏக்கத்தில் காய வை என்பது பொருளாகின்றது ...

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ ... உருவம் இன்னும் கனியாது போனாலும் ... காரணம் முதல் இரவு ... இன்னும் உறவு கொள்ளாத நிலை ... பருவம் காய் ஆகுமோ ... பருவம் .. ரொம்ப நாளாய் அது எதிர்பார்ப்பில் கனிந்து விட்டது என்பதை மறை முகமாய் சொல்கின்றதாக பொருள கொள்ளலாம் ..

ஏலக்காய் வாசனை போல் எண்கள்  உள்ளம் வாழக்காய் ...ஏலக்காய். போல எப்பவும் எங்கள் உள்ளம் நறுமணமாய் வாழ வேண்டும் ... என்று பொருள் கொள்ள படுகின்றது சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனிய காய் ... சாதிக்காய் உயர் சுவை தர கூடியது .. அதே போல் நம் தனிமையும் உயர் இன்பம் அமைய வேண்டும் என்று பொருள் ஆகின்றது ..


சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா.... சொனது எல்லாவற்றையும் துணைக்கு தூது சொல் வெண்ணிலா என்று பொருள் கொள்கின்றது ..

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவோருபேர் குறைகயோ- உள்ளம் எல்லாம் இளகாயோ ... ஒவொரு பேர்கொண்டு  அதை சொல்வாயோ .... அதாவது உளத்தில் எழுகின்ற எனணங்கள் ஆசைகளை உரைகசொல்வதாய் பொருள் கொள்க .

வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ - வெள்ளரிக்காய் அதுவாக கனிந்தால் வெடித்து அது கனிந்துவிட்டத்தை காட்டும் அதுபோல் நீஉம் சிரித்து உன் சமைத்ததை சொளிவிட்டாய் என்பது பொருள் ...

கோதையை நீ காயதே கொற்றவரை காய் வெண்ணிலா - பெண் என்னை காயதே .. என் கொற்றவன் என் மன்னன் என் கணவரை காய் வெண்ணிலா என்று பொருள் கொள்ள



இறுதியாய்



இருவரையும் காயதே தனிமையில் ஏங்காய் வெண்ணிலா ..- இருவரையும் நீ காயதே ... எங்கள் உளத்தை நாம் புரிந்து கொண்டோம் .. இனி இங்கு உனக்கு தேவை இல்லை எனவே நீ தன்மையில் போய் ஏக்கம் கொள் உன் காதலனை நினைத்து என்று பொருள் கொள்ள வைகின்றது பாடல் ...



அதாவது வெண்ணிலவை வைத்து அதனை தூது சொல்வது போல் உள்ள கிடக்கைகள் பரிமாறப்பட்டு புரிந்து கொள்ள பட்ட உள்ளங்கள் என்று கவிதைப்பாடல் முற்று பெறுகின்றது ....



அட இதற்குள் இதனை அர்த்தங்களா  என்று இபொழுது நீங்கள் ஆச்சரியபடுகிண்றீர்களா இல்லையா ...?
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
மிக அற்புதமான பாடல்

கண்ணதாசன் இது போன்ற பாடல் எழுதுவதில் வல்லவர்

ரொம்ப சிறப்பா அதனை உள்வாங்கி விளக்கம் தந்திருக்கீங்க, பாராட்டுக்கள் குளோபல் ஏஞ்சல்

எத்தனை முறைக்கேட்டாலும் சலிக்காத மற்றும் புதிதாகவே இருக்கும் பாடல், மீண்டும் ரசிக்க வாய்ப்பு உண்டாக்கி தந்தமைக்கு நன்றி

பின்றீங்க போங்க‌
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பூவோடு சேர்ந்த நாரும் மனகும்னு சொல்லுவாங்க ... உங்க கூட சேர்ந்து விடயங்கள் பல பகிர்ந்து கொண்டமையின் விளைவுதன இது   ;D
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தாமதமாய் ஒரு பின்னோட்டம்...

மிகவும் அருமையான திரி..
என்னை போன்ற கத்துக்குட்டி "கவி"க்கு  உபயோகமான பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

இலக்கியம் நடை , சந்தம் ,, இது எல்லாம் எனக்கு என்ன என்றே தெரியாது,,,,
எளிய நடையில் எழுதியே பழகி விட்டது...
சொல்லி தரவும் ஆட்கள் இல்லை....சந்தேகம் தீர்க்கவும் ஆட்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும் .
இந்த திரியை தொடர்ந்து படித்து வருகிறேன்.. கவிதைக்குள் இவ்வளவு விஷயமா? வியக்க வாய்த்த திரி..

ஆராய்ந்து கூறும் அளவிற்கு எனக்கு எதுவும் தெரியாது...இந்த திரியில் நிறைய விஷயங்களை கற்று வருகிறேன்

நன்றிகள் ஆதி...

தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
சொற்பல்லக்கில் பொருள் சவாரி செய்ய வேண்டும், அவ்வளவுதான் கவிதை

சந்தம், நயம் எல்லாம் அடுத்த பட்சம்  ஸ்ருதி

வார்த்தைகள் வசப்படும் போது, நயம் வந்துவிடும், ஒரு வார்த்தையை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் எவ்வ‌ள‌வு கோண‌ம், எத்த‌னை பொருந்த‌ம் இருக்கிற‌து என்ப‌தை க‌விதையை வ‌டித்த‌ பின் ஆராய்ந்தால் போதும்

சிரிப்பு ப‌ற்றி சொல்லும் போது, குறைந்த‌து நாலுவித‌மாய் சொல்லிப்பார்ப்பேன் அதில் எது திரும்ப்தியாய் உள்ள‌தோ அதையே க‌விதையில் ப‌ய‌ன்ப‌டுத்துவேன், ம‌ற்றதையும் வேறொரு ச‌ம‌ய‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்வேன், எனினும் அந்த‌ ச‌மய‌த்தில் அந்த‌ க‌விதைக்கு எது பொருந்தும் என்ப‌து அத்தருண‌த்தில் தீர்மானித்து கொள்ள‌ வேண்டும்

வேறு வேறு வித‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்ப்ப‌த‌ன் மூல‌ம், அடுத்த‌ முறை எழுத‌ போகிட‌ க‌விதைக‌ளுக்கு கைவ‌ச‌ம் உள்ள‌ வ‌ரிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்வேன்

மாலை சூரிய‌னை பார்க்கும் போதும், ம‌ழை மேக‌த்தை பார்க்கும் போதும், க‌ட‌ல‌லையை காணும் போதும், ம‌லையின் பிர‌ம்மாண்ட‌த்தில் பிர‌ம்மித்திருக்கும் போதும் சில‌ ப‌டிம‌ங்க‌ளை உருவாக்கி வைத்துக் கொள்வேன், அத‌னை தேவையான‌ இட‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்வேன்


கவிதைகளில் சில சோதனைகள் செய்து பார்ப்பேன், நேரம் கிடைக்கும் போது, பெரும்பாலும் பலவும் தோல்வியை தழுவும் இன்றுவரை அதற்காக சலித்ததில்லை, தேடிக் கொண்டே இருக்கிறேன் என் கவிதைக்கான மொழியை

நீங்களும் தேடுங்கள் ஒரு நாள் அகப்படும் எனும் நம்பிக்கையில்

போக வேண்டிய தூரமும் கற்று கொள்ள வேண்டியதின் துருவமும் நிறைய இருக்கு

தாம் தாந்த தாம் தாந்த தாந்தா
தாம் தாந்த தாம் தாந்த தாந்தா

இந்த சந்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள் சும்மா வார்ததையை போட்டுப்பாருங்கள்

இப்படி எழுதி பார்க்க எழுதி பார்க்க வார்ததைகள் வசப்படும்

தயக்கத்தை அச்சத்தையும் விடுங்கள்
« Last Edit: September 24, 2012, 03:21:37 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இம்முறை நம் லீ எழுதிய "இன்று என்னிடம் கவிதை இல்லை" எனும் கவிதையின் முதல் பத்தியை எடுத்து, அதில் சில சோதனைகளை ஆராய்ச்சிகளை செய்து பார்ப்போம்

//எனக்கு அவள் கொஞ்சமும் பரிட்சயம் இல்லாதவள்
அவளை நான் பார்த்தது இல்லை
முயன்றால் அவளை உன் வசமாக்கி
விடலாம் என்று சிலர் கூற
நானும் முயற்சிகளை முடிக்கி விட்டேன்
//

இதே பத்தியை வேறு வேறு வடிவில் எப்படி எல்லாம் எழுதலாம் என்று பார்ப்போம்

1)
கொஞ்சமும் எனக்கு அவள்
பரிட்சயம் இல்லாதவள்
அவளை நான் பார்த‌த‌தும் இல்லை
முய‌ன்றால்
வச‌மாக்கிவிட‌லாமென‌ சீல‌ர் கூற
முடுக்கி விடுகிறேன்
முய‌ற்சிக‌ளை


2)

அவளிடம் எனக்கு
கொஞ்சமும் பரிட்சயமில்லை
அவளை நான் பார்தததுமில்லை
முயன்றால் வசமாவாள்
என்று சிலர் கூற‌
முடுக்கிவிட்டேன் தன் முயற்சிகளை

3)

எப்பரிட்சயமுமில்லை எனக்கு அவளிடம்
எப்படியிருப்பாள் அறிந்திருக்கவில்லை
மெனக்கெட்டால் இணக்கமாவளென சிலர் கூற‌
முடுக்கிவிடுகிறேன் தன் மெய்வருத்தலை

4)

எந்த பரிட்சயமுமில்லை அவளிடம்
எங்ஙனமிருப்பாள் பார்த்ததில்லை
எனினும் மெனக்கெட கைவருவாள்
என்று சிலர் சொல‌
எங்கினும் தேட முயல்கிறேன் அவளை

இன்னும் பல வகையில் எழுத முடியும்

5)

அறியாத ஒருத்தியை
அடைய மெனக்கெடுகிறேன்
சரியாவென‌ தெரியாத பாதையில்
 
6)
 
அறியாத ஒருத்தியை
அடைய மெனக்கெடுகிறேன்
சரியவென தெரியாத பாதையில்
செல்ல முயல்கிறேன்
பிரயத்தனமே அவளுக்கு என்மேல்
பிரேமத்தை உண்டாக்குமாம்
 

எண்ணற்ற வகையில் எண்ணத்தை எழுத முடியும், எப்படி எழுதலாம் எனும் செப்படி வித்தை தெரிந்தால் போதும்

இப்படி எழுதலாமா என்று வடிவ சோதனை செய்வதன் மூலம், செப்படி வித்தை செம்மையாய் கைவரும்

மேலும் பேசுவோம்
« Last Edit: September 26, 2012, 01:47:31 PM by ஆதி »
அன்புடன் ஆதி