Author Topic: அழிந்து வரும் நீலத் திமிங்கலம்  (Read 2897 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அழிந்து வரும் நீலத் திமிங்கலம்



நீலத் திமிங்கலம் பாலூட்டி வகையை சேர்ந்த உலகிலேயே மிகப் பெரிய உயிரினம், இதன் எடை 150 டன், இதன் நீளம் 100 அடி. இது ஒரு பெரிய போயிங் விமானத்தின் அளவில் காணப்படுகிறது. இதன் இருதயம் ஒரு காரின் அளவு. இதன் நாக்கில் சுமார் 50 பேர் உட்காரும் அளவு கொண்டது.

நீலத் திமிங்கலங்கள் சுவாசிப்பதற்கு அதன் தலையின் மீது இரண்டு பெரிய துவாரங்கள் காணப்படுகின்றன, சில திமிங்கலங்களுக்கு ஒரு துவாரம் இருப்பதும் உண்டு. மனிதனை போல தானாக சுவாசிப்பது கிடையாது, இவை தனக்கு தேவையான போது மட்டும் சுவாசிக்கின்றன. இதற்க்கு காரணம் திமிங்கலங்கள் சுவாசிப்பதற்காக நீரின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. சில நிமிடங்கள் நீரின் மேல்மட்டத்திற்கு வந்து காற்றையும் நீரையும் வெளியேற்றி விட்டு தூய்மையான காற்றை உள்ளிழுத்து கொண்டு மறுபடியும் நீரினுள் மூழ்கி விடுகின்றன.

நீலத் திமிங்கலங்களை மீன் என்று சொல்வது கிடையாது இது பாலூட்டி வகையை சேர்ந்தது என்ற காரணம் மட்டுமில்லை, இவற்றிக்கு மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதில்கள் கிடையாது மனிதர்களைப் போல நுரையீரல்கள் உள்ளன. இதன் குட்டிகளுக்கு இவை பாலூட்டுகின்றன. இதன் பால் மீன்எண்ணெயை போன்ற சுவை கொண்டது.

மங்கனிச ஆக்சைடு நிரம்பியுள்ள இதன் பாலை இதன் குட்டிகள் ஒரு நாளைக்கு 50 கேலன் வரை குடிக்கின்றன. ஒரு நாளைக்கு 10 பவுண்ட் வளர்ச்சியடையும் இதன் குட்டிகள் பின்னர் ஒரு <!--[if !vml]--><!--[endif]-->நாளைக்கு 200 பவுண்ட் வரை வளர்ச்சியடைகின்றன. சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இதன் குட்டிகள் க்ரில் ( krill ) என்று சொல்லக் கூடிய இறால் வடிவத்தில் உள்ள கடல் வாழ் உயிரினத்தை சாப்பிட தொடங்குகின்றன. நல்ல வளர்ச்சியடைந்த பின் ஒரு நாளைக்கு 4 லிருந்து 6 டன் க்ரில்களை சாப்பிடுகின்றது.

இவ்வளவு அதிகமான க்ரில்களை விழுங்குவதற்காக 50 டன் நீரையும் சேர்த்து விழுங்கி பின்னர் அதன் தாடையிலிருக்கும் சீப்பை போன்ற எலும்புகளின் வழியே நீரை வெளியேற்றி க்ரில்களை சாப்பிடுகின்றன.

திமிங்கலங்களுக்கு இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றார் போல தன்னை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால் சமுத்திரத்தில் இயல்பாக வாழ முடிகிறது. திமிங்கலங்கள் ஆழ்ந்த உறக்கம் கொள்வது கிடையாது, அப்படி உறங்கினால் இவை வாழ்வது அரிதாகி விடும் என்பதால் நீரின் மேல் மட்டத்தில் சிறிது இளைபாற்றிக் கொள்ளும்.

இதன் தோலின் மீதுள்ள ஒருவகை அடுக்கிய திசுக்களைப் போன்ற அமைப்பு கடுமையான குளிர்ச்சியிலிருந்து மிதமான சூடான வெப்ப நிலையை இதன் உடல் பராமரிக்க உதவுகிறது. போலார் கடல் பகுதியில் கடும் குளிரிலிருந்து தன்னையும் தனது குட்டிகளையும் பாதுகாத்து கொள்வதற்காக திமிங்கலங்கள் மிதமான வெட்ப்பம் நிலவும் கடல் பகுதியை நோக்கி பயணிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இவை எப்படி பயணிக்கின்றன என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, திமிங்கலங்கள் ஒரு வகை சப்தம் எழுப்புகின்றன, அப்படி சப்தம் எழுப்பும் போது அதன் எதிரொலியைக் ( echo ) கொண்டு தரை மட்டத்தை உணருகின்றன என்று கூறுகிறார்கள். ஆனாலும் பல அதிசயங்களை பற்றிய கண்டு பிடிப்புகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த சப்தங்களைக் கொண்டு தனது ஜோடி திமிங்கலத்திடமும் தனது குட்டிகளுடனும் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது.

எப்படி இந்த பிருமாண்டமான உயிரினத்தை அழிவிலிருந்து மீட்டு எடுக்கப் போகிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.