அடர்ந்த சோலை நடுவே,
கரிய நிற நீண்ட பாதையில்..
சின்ன சின்னதாய் சிதறி கிடைக்கும்..
பழுப்பு நிற சருகுகள் நடுவில்..
முல்லை அரும்பென ஜொலிக்கும்..
வெண் முத்து பற்கள் மின்னிட ..
அவ்விருவர் கண்களிலும் பெரும் ..
மகிழ்ச்சி பொங்கி வழிந்திட..
ஒருவர் தோள் மீது ஒருவர்..
கைகளை போட்டு கொண்டே....
இந்த புண்ணிய பூமியே.. என்..
ஸ்வர்ணபுரி.. என இறுமாப்புடனே
அழகு நடைபோடும் குறும்தளிர்,
அதிகாலை சூரிய கீற்றொளி..
தன் உடையின் நிறம் அறியாது..
சிரிக்கும் சின்னசிறு உள்ளங்கள்..
தான் எங்கு பிறந்தோம்...,
எங்கனம் எப்படி வளர்கிறோம்
சிறிதும் யோசிக்காத..
வெள்ளை உள்ளங்கள்..
நண்பர்களாய் தோழமையோடு துள்ளி
நடைபோடும் பிஞ்சு மனங்களில் ..
நாம்... பிறப்பு, குலம், நாடு, மதங்கள்..
என நஞ்சினை கலந்திட வேண்டாமே..
மதங்கள்.. பெரிதாக ஏதுமில்லை..
நம் தமிழரின் நிலத்திணைகள் போலவே.., (குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல்)
நம் முப்பாட்டனும் நம் அப்பனும்.. நமக்கு
கற்றுக்கொடுத்த வாழ்வியலின் சூட்சமமே...
கடலோரம் இருப்பவன் கடலில்
வாழ்வை தேடுகிறான்...
மலையோரம் இருப்பவன்
மலைகளில் வாழ்வை தேடுகிறான்..
காடுகளில் இருப்பவர்கள்
காடுகளில் வாழ்வை தேடுகிறான்..
பாழ் நிலத்தில் இருப்பவன்
பாலையில் வாழ்வை தேடுகிறான்..
சமவெளியில் இருப்பவன்
வயலில் வாழ்வை தேடுகிறான்..
நம் தேடி செல்லும் செயல் ஒன்றே..
இவ்வுலகில் வாழ வழி தேடுகிறோம்.
இதில் மதங்கள் என்ற பெயரில்.. ஏன்?
மனித உள்ளங்களை பிரிக்கும் வேலி?..
நாமும்.. மொழி மறந்து.. குலம் மறந்து.. பிறந்த இடம் மறந்து..
அச்சிறார் போல்.. மனம் மட்டும் பார்த்து வாழ பழகலாமே..