FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on February 04, 2022, 12:09:20 AM

Title: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: Forum on February 04, 2022, 12:09:20 AM
காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்


எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 08.02.2022  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....


(https://cache.desktopnexus.com/thumbseg/1675/1675163-bigthumbnail.jpg)
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: Loki on February 04, 2022, 03:05:40 PM
அன்புள்ள தோழி,

கனவு காணத்  தெரியாமல்,
காதல் என்றால்  என்னவென்று புரியாமல் இருந்த எனக்கு,
காதலின் அர்த்தம் மட்டும் அல்ல,
கிடைக்காவிட்டால் கிடைக்கும்
வலியையும் காட்டினாய்,
என்னை உயிர்த்துவிட்டு நீ உயர உயர பறக்கிறாய்,
கை பிடிக்க நினைத்தால்,
கல்லயறையில் அமர்ந்து சிரிக்கிறாய்,
எழுத்தாளன் பல வாழ்க்கை வாழ்வான் என்பார்கள்,
நான் ஒரு வாழ்க்கையை பல முறை வாழ்கிறேன்,
வாழ முடியாத வாழ்க்கை,

உன்னால், உனக்காக, உன்னுடன்.

ஆனால்  நான் முட்டாள் தான்,
உன்னை நேசிக்க முயன்று என்னை
வெறுக்கத்  துடங்கினேன்,
உன்  சிரிப்பில் என் சிரிப்பைத்  தொலைத்தேன்,
மீண்டும் பெறுவதற்குள் மறைத்துவிட்டாய்.

இருப்பினும், கோவம் வரவில்லை,
நீயா என் வாழ்க்கையின் முதல் தோல்வி?
வருத்தம் தான், என் வாழ்வில்
ஒளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்
என்று நினைத்தேன்,
என் வாழ்வே ஒளிந்து நின்று
என் கவலையை வேடிக்கை பார்த்தது.

மீண்டும் முட்டாள் ஆனேன், மறக்க முயன்று,
ஏன் முயன்றேன் என்று புரியவில்லை,
ஆனால்  அது முடியாது என்று விரைவே புரிந்தது.
கதறலை கவிதையை எழுதும் கவிஞன் ஆக்கின நீயே,

வார்த்தையால் ஏன் மனதினை நிரப்பிச்  சென்றாய்?
இன்று மீண்டும் சிரிக்கிறேன், நீ கொடுத்துச்  சென்ற
நொடிகளை வார்த்தையாய் எழுதி.

உனக்காக எழுதத்  தொடங்கிய  நான்,
இன்று உணர்வுகளுக்காக  எழுதுகிறேன்,
இது கடிதமோ கவிதையோ கற்பனையோ,
எழுதுவதில் ஒரு நிம்மதி.
கண்ணீர்த்  துளிகளில் துடைங்கிய என்  வார்த்தைகள்,
இன்று காதலில் முடிகிறது,
அடடா, காதலில் நான் தோற்றாலும்,

காதல் தோற்கவில்லை பார்த்தாயா?

நீ இறந்தும் வாழ்கிறாய் என் மனதில்,
நான் இருந்தும் இறக்கிறேன் உன் மடியில்.

- Loki❤️
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: Tee_Jy on February 04, 2022, 04:26:47 PM
என்னவளே மியாவ்....

விட்டு விட்டு நினைக்கிறேன்...
விட்டு விட தான் நினைக்கிறேன்...
ஆனாலும் நிழல் போல் உடன் வருகிறது
உன் அழகான நினைவுகள்...

மை தீட்டி வந்தவளே...
என் மனதை களவாடி சென்றவளே...
மதி மயங்கி நின்றவனை...
உன் மாய விழியால் வென்றவளே...
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...
நீ இமை அசைத்து  பேசியதால்...
என் இளமை சிதைந்து போனதடி...
இத்தனை அழகு உன்னிடம்...
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!

ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை - நீ...

நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும் என்று ...

அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்...
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்...

 இருட்டிலும்
பயமின்றி
முன் நகர்கின்றேன்.நினைவுகளாக
உடன் வருகிறாய் என்று ...
உன் நினைவுகளால் அந்த மை இருட்டிலும் என் நிழலை காண்கிறேன்...

விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றன கனவுகளாக  உன்  நினைவுகள்  ..

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது...

நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு...
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு...!

அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ...
 அதுபோல தான்
உன் முகமும் நினைவுகள்
என் இதயம் சூடிக்கொண்டது...

உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது...!

உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.

உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்...!
கேட்பவர்கள் அதனை கவிதை  என்கிறார்கள்...!

ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்...

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...

என்றும் நீங்க நினைவுகளுடன்......
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: அனோத் on February 04, 2022, 11:45:41 PM
(https://i.postimg.cc/N02xjYBK/1.png) (https://postimages.org/)
(https://i.postimg.cc/W3RwDK1X/2.png) (https://postimages.org/)
(https://i.postimg.cc/Kj7bXdRV/image.png) (https://postimages.org/)
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: TiNu on February 05, 2022, 12:16:13 PM

உன்னை முதல்..  முதலாய்
சந்தித்து சிந்தித்த.. நாள் முதலே..
உன்னோடு  நான்  கொண்ட..
பாசமும்... நேசமும்...
நட்பா? இல்லை காதலா?
சொல் அன்பே... சொல்...

முன்பெல்லாம் உன் பெயரை..
உச்சரிக்கும் வேளையிலே..
இல்லாத வெட்கமும் நாணமும்..
இப்பொழுதெல்லாம்  என்னை ..
கவ்விக்கொல்கிறதே ... இது..
நட்பா? இல்லை காதலா?
சொல் அன்பே... சொல்...
 
நீ இல்லா தருணங்களிலும்..
உன் விரல் நுனிகள்.. விளையாடி..
அனுப்பிய குறுந்செய்திகள்..
என் விழியோடும்.. மனதோடும்..
செல்லமாய் உறவாடுதே... இது..
நட்பா? இல்லை காதலா?
சொல் அன்பே... சொல்...

காதல் மொழி பேசினாலே
எள்ளி நகைத்து.. கைகொட்டி
கேலியாக சிரித்த என்னை..
உன் மென்னிதழ் சிந்தும்.
சின்ன புன்னகையோடு..
நீ பேசிய வார்ததைகளில்
கட்டுண்டு சிலையானேனே.. இது..
நட்பா? இல்லை காதலா?
சொல் அன்பே... சொல்...

நீ என்னோட பேச மறந்த..
நேரங்களில் எல்லாமே..
முகமறியா ஒருவளுடன்
நீயும்.. அவளும்.. ஆசை மொழிகள்
பேசி.. பேசி கழிக்கின்றாயோ.. என
என் ஆழ் மனதின்... குழப்பங்கள்.
எரிமலையென கொப்பளித்த
வெடித்து சிதறுகிறதே.. இது..
நட்பா? இல்லை காதலா?
சொல் அன்பே... சொல்...

உழைத்து.. களைத்து.. ஓய்ந்து..
நடு நிசியில்.. நீ வந்தாலுமே 
உனக்காக நான் காத்திருக்கும் ..
பொழுதுகளில்..சுகமானது...
அந்த காத்திருப்பு..  தருணங்களில்
என் மனம் முழுதும்.. உன் சுந்தர
நினைவுகளில் குளிர்கின்றதே.. இது..
நட்பா? இல்லை காதலா?
சொல் அன்பே... சொல்...

உன் விழி தீண்டலோ...
உன் விரல் தீண்டலோ
அறியாத என் தேகம்..
உன் மொழி தீண்டலால்..
வீசும் குளிர் காற்றின்.. 
ஸ்பரிசம் கூட அறியாதது..
மயங்கி கிடக்கின்றதே.. இது..
நட்பா? இல்லை காதலா?
சொல் அன்பே... சொல்...

உன்னை மனதினில் நினைத்து.. 
நான் வடிக்கும்..  கவிதையும்..
முடிவின்றி தவிக்கின்றதே..
சொல் ஆருயிரே..சொல்..
தடுமாறி தத்தளிக்கும்..
என் மனதையும்.. கவிதையையும்
உன் கைகளில் தருகின்றேன்..
நீயே..  தீர்ப்பெழுது... என் உயிரே..
இது..  நட்பா? இல்லை காதலா?

Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: KS Saravanan on February 06, 2022, 12:32:31 AM
அன்பே..

காதலிக்க தெரியாமல்
காணாமல் போகிறேன்

காத்திருக்க முடியாமல்
கடிகாரத்தை உடைக்கின்றேன்

அழ கூட முடியாமல்
அடி மனதை அழிக்கிறேன்

இருக்க கூட முடியாம
இருளின் மூழ்கி கிடக்கிறேன்

உன் நினைவை அழிகாம
உரிழிழைக்க நினைக்கிறேன்

எட்டு திக்கும் உனை பற்றி பேசி
எட்டா கணியாக்க பார்க்கிறேன்

ஐந்தெழுத்து மந்திரமாய் உன் பெயரை சொல்கிறேன்..

ஒரு முறை உனை காண
ஓராயிரம் இரவுகளை கடக்கிறேன்


இவன்,
உன்னவன்..
kss..💕

Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: SweeTie on February 06, 2022, 08:24:53 AM
மணி நானும்  நிமி நீயும்
சந்தித்த ஒவொரு மணித்துளியும்
சிந்திக்க வைத்த  தேன்துளிகள்
தேனும்  தினைமாவும் போல்
தெவிட்டாத  சுவைத்துளிகள் 

தேன்நிலவு  நானாக 
சீண்டும்  துகில்  நீ முகிலாக
இரவெல்லாம்   இனிதாக
உறவாடி   உறங்காமல்........?
தனிமையில் வடித்த ஓவியம் 

படர்கொடி யான்  படரவும் 
 பற்றவும் சுற்றவும் 
கொழுகொம்பு  நீயாக
 அணைத்து உறவாடும் 
பருவத்தின்  பசுமையில் நாம் 


சித்திரை மாத வெயில்  நீ
சிவந்த மேனியில் 
முத்திரை பதிக்க வந்தவன் 
பத்தியம் காக்கும்  நான்
பழரசம்   அருந்தமாட்டேன்
தள்ளியே போய்விடுடா

மாலையில்  வந்த மையல்
மகரந்தம்  தேடி வந்து
ரோஜா  இதழ்களில்  சிக்கி
முக்கி  திக்குமுக்காடி போன
சாணக்கியனும்   நீயடா

காதலா !!   என்  காதலா !!
மோதலில்  வந்த  காதலா? இது
காலமும்  வரும்  ஊடலா?
காதலா!!  என்  காதலா!!
மௌனங்கள்  பேசும் காதலா? இல்லை
இதயங்கள் பரிமாறும் பாஷையா? 

அனைவர்க்கும்  எனது காதலர் தின  வாழ்த்துக்கள்.

 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: Sun FloweR on February 08, 2022, 06:04:41 PM

நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை
நிலா மேலும் அழகூட்டுவதைப் போல
என் வாழ்வை மேலும் அழகூட்டுகிறது
என் மேல் நீ கொண்ட காதல்....

நீர் நிரம்பிய குளத்தை
பூக்கள் மேலும் அழகூட்டுவதைப் போல
என் வாழ்வை மேலும் அழகூட்டுகிறது
உன் மேல் நான் கொண்ட காதல்...

சிதறிக்கிடக்கும் புள்ளிகளாய் தனித்து கிடந்த என் வாழ்வை  உன் காதலால் இணைத்து வண்ணங்கள் தெளித்து பூக்கோலமாக்கிய மாயக்காரன் நீ...

சூரியனை நோக்கியே தன்னைத்
திருப்பிக் கொள்ளும் சூரியகாந்தியைப் போல உன்னை நோக்கியே என் பார்வையும் வாழ்க்கையும் சுழன்று கொண்டிருக்கிறது..

என் உலகம் மிகச்சிறியது,
அதில் நீ, நீ, நீ
மற்றும் சில நீ மட்டுமே..
என் உலகம் மிகப்பெரியதும் கூட,
அதில் காதல், காதல், காதல்
மற்றும் உன் மீதான காதல் மட்டுமே...

காதலர் தினத்தை உலகமே
கொண்டாடுகிறது...
உன்னையும், உன் மேல் கொண்ட காதலையும்  நான் கொண்டாடுகிறேன்
FEB 14 மட்டுமல்ல
என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் .....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: எஸ்கே on February 08, 2022, 07:43:06 PM

வெறிச்சோடிக் கிடந்த என் வானத்தில்
வண்ணங்கள் நிறைந்த வானவில்லைத்
தோற்றுவித்தது உனது பார்வைதான்...

காதல் என்ற ஓர் அற்புதம் என் வாழ்விலும்
நுழைந்துவிட்டது உனது கடைக்கண்
பார்வையினால் ..

மையல் நிறைந்த உன் விழிகளைக்
காணும் போதெல்லாம் ஓராயிரம்
அருவிக் குளியல் போடுகிறது மனது..

மழை பெய்யும்போது கிளம்பி வரும் மண்வாசம் போல உன்னைக் காணும் போதெல்லாம் மண் மணமாய் மாறிப் போகிறது மனது..

பொதுவாக ஒவ்வொரு பூவிற்கும்
ஒரு வித வாசம்...ஆனால்
நீ என்னைக் கடக்கும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாசம்...
எந்த வகைப் பூ நீ...?

ஓவியம் உயிராவது நம்முடைய ftc
கவிதை நிகழ்ச்சியில் மட்டும் தான்
என்று நினைத்தேன்...
உன் துப்பட்டாவில் வரைந்த பூக்கள் கூட உயிர்பெற்று மணம் வீசுவதைக்
எந்த நிகழ்ச்சியில் சேர்த்திட..?

காதல் செய்யும் அனைவருக்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்.....💐
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2022)
Post by: Lovable on February 09, 2022, 06:13:19 PM
என் சுந்தரா..

நீரின்றி அமையாது உலகு போல
நீயன்றி நான் இல்லை என உணர்ந்த நாள் இது,


சிரிக்காதே எனக் கூறி..
என்னை பல முறை சிரிக்க வைத்தவன் நீ..


பார்க்காதே எனக் கூறி..
என்னை ரசித்தவன் நீ..


என் கடந்த கால வாழ்வை.. மறக்க நினைத்தப்பொழுது !!
நீ வந்தாய்,
உன்னை மறக்க முடியாத அனுபவம் நீ தந்தாய்,


எனக்கு ‌‌‌அதிக கர்வம்!! என கூறினாய் அது நிஜமே ஆம்
என்னை விட உன்னை ஒருவராலும் உணரமுடியாது என்ற கர்வம்..


என் அழகில் நீ உன்னை மறக்க..
உன் அறிவால் நான் உன்னை வியக்க !!


என் பேச்சில் நீ தவிக்க..
உன் கோவத்தை நான் ரசிக்க!!
அந்த நொடிகள் மட்டும் நின்று போக ஆசை..


நமக்குள் பல மைல்கள் இருந்தாலும்..
அது சிறிய தூரமே..

 
கைபேசியில் நீ தரும் ஒரு முத்தத்தினால்..
அதிகாலை கதிரவனின் வருகைக்காக காத்திருக்கும்!!
தாமரை போல..

என் சுந்தரரின் வருகைக்காக
காத்திருக்கும் நான்!!!!