ஹாய் காயத்திரி எப்படி இருக்கீங்க உங்களுடைய இசைத்தென்றல் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும்விதம் மிக அருமை.
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் வெளிவந்த அயன் திரைப்படத்தை தை இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக தேர்வு செய்கிறேன்.
K.V.ஆனந்த் அவர்களின் தனி தன்மை வாய்ந்த இயக்கத்தில் சூர்யா ,தமன்னா இருவரின் இயல்பான நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில் எல்லா பாடல்களுமே மிக அருமை. விறுவிறுப்பான கதை அமைப்பும்,இப்படத்தில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யமான விசயங்களும் இந்த திரைபடத்தை வெற்றிப்படமாக மாற்றி இருக்கிறது.
நெஞ்சே நெஞ்சே ,பளபளக்கிற பகலா நீ ,, விழிமூடி யோசித்தால்,
என தொடங்கும் பாடல்கள் இசை அருவியில் நம்மை நனைக்கும் விதமாக அமைந்து இருக்கிறது. இதில் நான் விரும்பி கேட்கவிருக்கும் பாடல் ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் மஹதி குரல்களில் இனிமையாக ஒலிக்கும் "நெஞ்சே நெஞ்சே நீ எங்கே" என தொடங்கும் பாடல்.
இந்த பாடலை காதலின் இனிமையை உணர்ந்த நெஞ்சங்களுக்காக விரும்பி கேட்கிறேன்