Author Topic: OK என்றால் என்ன?  (Read 463 times)

Offline Little Heart

OK என்றால் என்ன?
« on: November 29, 2014, 12:59:22 PM »
உலகில் வாழும் எல்லோருக்குமே புரிகின்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அது வேறு ஒன்றுமே இல்லை, “OK” என்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை தான். ஆனால், உண்மை சொல்லப் போனால், இந்த வார்த்தைக்குப் பின்னால் ஓர் வரலாறே இருக்கிறது நண்பர்களே! எரிக் பார்ட்ரிட்ஜ் என்பவர் “Old Kinderhook” என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார். ஆனால் வில்லியம் மற்றும் மேரி மோரிஸ் என்போர் அவர்களின் மோரிஸ் அகராதியில் (1977 ல்) “Aux Cayes” என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த வார்த்தை பற்றிய விளக்கத்தினைக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஆலன் வால்கர் ஏற்கனவே விளக்கியுள்ளார்.

ஆனால், இவர்கள் கூறுவது ஒருபுறம் இருந்தாலும், அநேக மக்கள் நம்புவது “all correct” எனும் விரிவாக்கத்தினைத் தான். இது ஒரு பொருளற்ற ஆர்வக் கோளாறினால் 1830-1834 ஆண்டுகளில் பயன் படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலர் இந்திய மொழிகளில் “okeh” என்று கூறுவது “ஆமாம்” என்று பொருள்படும் அதனால் தான் அவ்வாறு வைத்துள்ளனர் என்று கூட கூறுகின்றனர்.

எப்படியிருந்தாலும் நாம் அந்த வார்த்தையை அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம், இனி அதனைப் பிரிப்பது கடினமான ஒரு செயல் என்பது மட்டும் உறுதி.