Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 293  (Read 1367 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 293

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


கருவுற்ற நாள் முதல் கவலைகள் மறந்தாள்
கண்ணே உன்னை கருத்தில் கொண்டு
கனவுகள் பல பல கண்டாள்

தாய் என்ற பட்டம் பெற
தவமாய் தவமிருந்து
சுகமான சுமையாய் உன்னை தாங்கினாள்
இன்று உன் பணி சுமையை நான் அறிவேன்
ஆனால்
ஒரு போதும் அவளை சுமையாய் எண்ணி விடாதே


பத்து மாதம்...
பத்திய சோறும் பிடித்து போனது
பல நாள் தூக்கமும் கண் விட்டுப்போனது
பயணங்கள் பிடித்தும் தவிரத்தாள்
பக்குவமாய் உன்னை பெற்றெடுக்க

நீ பிறந்த நொடி
உலகமே அவள் கைக்குள் அடங்கிய உணரல்
அன்று முதல் இன்று வரை
நீ மட்டுமே அவள் உலகம்

உன் காலில் நீ நிற்க கற்று கொடுத்தாள்..
அவள் கால்கள் இன்று தளர்ந்து போனது
உன் காலில் அவளை தாங்கும் தருணம்..
கைகள் பிடித்து நடக்க கற்று கொடுத்தவள்...
நடக்க முடியாமல் நலிந்து போனாள்
கைத்தடியாய் அவளுக்கு நீ மட்டுமே..


சொர்ப்ப பணம் போதும்..
அவளை அரவணைக்க ஆசிரமம் பல உள்ளது..
ஆனால் அன்பு காட்ட???
உன் அன்பு மட்டுமே அவளின் அனைத்துமாய்..

அடுத்தவர் கதை கேட்டு நடுங்கி கிடக்கிறாள்
ஆசிர்மம் நோக்கி தன் பயணம் தொடருமோ என்று
அவள் காதில் சொல்லிவிடு
"அம்மா!  உனக்கு நான் இருக்கிறேன்"
இந்த வார்த்தை தரும் நிம்மதி
நீயும் அறிவாய் கண்ணே ஒரு நாள்

கடைசி நிமிடங்களில் அவள் உடனிருந்து
அவள் உடலுக்கு நீ இடும் கொள்ளி
வெறும் நெருப்பு அல்ல
பல பல ஜென்மமாய் உன்னை துரத்திய
பாவங்களை எறிக்கும் யாகமே..



« Last Edit: June 27, 2022, 02:22:19 AM by VenMaThI »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மங்களமாய் தான் துவங்கியது,
சிரிப்பும் களிப்புமாய் தான்
சென்றது என் அன்னையின்
மண வாழ்வும்..
விதியின் கொடிய கரங்களில்
சிக்கி சிதிலமடைந்த
தந்தையின் மறைவு நிகழும் வரை ...

வேரோடு பிடுங்கப்பட்ட
மரமாய் ஆனாலும்
உயிர் துளிர்த்திருந்தாய்,
உயிர் வளர்த்திருந்தாய்..
தன்னில் பூத்த தன் மகனுக்காக..
தன்னில் மலர்ந்த தன் குழவிக்காக...
உன்னில் உதித்த எனக்காக...

துயரத்தின் கூடாரத்தில்
நீ வாழ்ந்தாலும்
எனக்கு நீ தந்ததென்னவோ
புன்னகை கம்பளம் விரித்த உலகையும்,
பரந்து கிடக்கும் பாசக் கடலையும் தான்...

தன் ஆசைகள் வெறுத்து,
தன் தேவைகள் குறைத்து
எனக்காக மட்டுமே வாழ்ந்தவள்..
அவள் வாழ்வையும் எனக்காகவே ஈந்தவள் ..
என் கண்ணீர் துளிகளை
தான் வாங்கிக் கொண்டு,
தன் சிரிப்புகளையெல்லாம்
எனக்குத் தாரை வார்த்தவள்...

பத்து மாதம் கருவில் சுமந்தவளே,
பத்து வயது வரை தோளில் சுமந்தவளே,
தற்போது வரை நெஞ்சில் சுமப்பவளே,
எதைச் சுமந்து ஈடு செய்வேன்?
எதைக் கொண்டு நிகர் செய்வேன்?
அன்னையே உன் அன்பையும் நேசத்தையும்??

கடவுள் தந்த வரமாய் அல்ல
அந்தக் கடவுளாய் ஆன என் அன்னையே
காலம் முழுவதும் என் தோள்களில்
உன்னை சுமப்பேன்..
மறுபிறவி ஒன்றிருந்தால் அதில்
செருப்பாய் உன்னை தாங்குவேன் ...
வாழ்நாள் முழுவதும் உன்
அன்னையாய் நானிருப்பேன்....!

Offline Abinesh



திருக்கோயில் திருதெய்வங்கள்
ஊருக்குள் நடமாடும் அவள் வடிவில்..
தினந்தோறும் நிம்மதி சுரக்கும் அவள் மடியில்..

தெய்வங்கள் தூங்கிப் போனாலும்
தூங்காமல் உன்னை காப்பாள்.
அலைகின்ற தென்றல் ஓய்ந்தாலும்
ஓய்வின்றி உனக்காக உழைப்பாள்...

நீ முதல் முறை " அம்மா "என்று அவளை
அழைத்தது அவளின் ஆன்மாவில் பதிந்திருக்கும்..

நீ விளையாட
அவள் ஒரு பொம்மையாக மாறுவாள்..

அலுவலக அவசரத்திலும் ,
அடுப்படி பரபரப்பிலும்
அவளின் அத்தனை சிந்தனை நரம்புகளும்
உன்னை பற்றியே சிந்திக்கும்..

உனது இந்த நோய்க்கு இந்த மருத்துவமனை
இந்த நோய்க்கு இந்த மருந்து என்று
மறக்காமல் வைத்திருப்பாள்
தன் நோயை மறந்து கிடப்பாள்...

உன் முகம் பார்த்து மனநிலை அறியும்
உயிரின் கண்ணாடி..

அளவாக மசாலா சேர்த்து
அளவில்லாத பாசத்தை குழைத்து
அமுதத்தை சமைத்து
அன்போடு பிசைந்து
அள்ளி உனக்கு ஊட்டுவாள்..

தன் காதில் சிறு குச்சியை கம்மலாக
போட்டுக்கொண்டு உனக்கு தங்கங்களை
போட்டு அழகு பார்ப்பாள்...

கிழிந்த  இலவசசேலையை
அணிந்துகொண்டு
உனக்கு புத்தாடை போட்டு பரவசமாவாள்...

உன் மழலை பேச்சை ரசிக்கும் முதல் வாசகி.
கடைசிவரை உனக்கு பணிவிடை செய்யும் சேவகி...

அவளின் மூச்சு உந்தன் நலனின்றி
வேறு ஏதும் நினையாது.
அவளின் பேச்சை மீறிப் போனால்
வாழ்க்கை நிலையாது..

அவளின் கடைசி மூச்சு கூட
உன்னை எண்ணியே கண்ணீர் விடும். _
அவளைத்தான் திருத்தெய்வங்கள்
தேடி வந்து வாழ்த்தும்..

உன்னை பத்து மாதம் சுமந்து
பெற்ற தாய்க்கு,
பத்து தலைமுறை கடந்தாலும்
அந்த கடனை அடைக்க உன்னால் முடியுமா?

வயதாகும் போது தாயை பாதுகாப்பது உனது கடமையல்ல,
அது இறைவன் உனக்கு கொடுத்த வரம்...

கற்றவர்க்கு போகும் இடம் எல்லாம் சிறப்பு
தாயின் காலடியை தொட்டு கும்பிட்டால்
உன் வாழ்க்கையில் கிடைக்கும் சிறப்போ சிறப்பு...!

தாயை மதியுங்கள்
பிறவிப் பலன் அடைவீர்கள்..!

குறிப்பு: மனசாட்சி என்ற சட்டையை கழட்டி வைத்து விட்டு, தாய் வயதாகும் போது முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகன்களே/மகள்களே,உனக்கும் இதே போன்று ஒரு நாள் வரும் என நீ ஏன் நினைப்பதில்லை
                 இப்படிக்கு உங்கள் தோழன்
                                       Abinesh





« Last Edit: June 28, 2022, 10:09:08 AM by Abinesh »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
உயிரான உறவென்று உறக்கச்சொல்,
அது என்னை ஈன்றெடுத்த அண்ணை அவளின் தாய்மை என்று சொல்...

கருவுற்ற கணம் முதலே, தன் கனவுகளை கலைத்து,
கனவென்று இருப்பின் அது என் சிசுவென்று நினைத்து.

துயில்கள் தொலைத்து, துக்கம் தொலைத்து.

இன்னல்கள் அனைத்தையும், இன்பங்களாய் ஏற்று.

உணவென்று உண்பதாய் இருப்பினும்,
அது என் உயிரான சிசுவிற்கு உகந்ததாய் உன்பேன் என்று.

நீ புன்னகை சிந்த, அவள் கண்ணீர் சிந்துவாள்,
நீ கண்ணீர் சிந்தினால் அவள் கருகிப்போவாள்.

உன்னை அல்லி அணைத்துக் கொள்வதே, அவளின்
ஆயுள் தவம்.

நேசம் எனும் கடலில் மூழ்கி நிற்கும் , "தன் சிசுவின் மேலான" பாசம் எனும் சுவாசம்...

கடக்கும் கணம் எல்லாம், கண்மணியின் வருகையைஎண்ணியே.

தன் சிசுவிர்காக சமரசம் செய்வதில் கூட சமரசமின்றி சகித்து கொண்டவள்,
சாகும் வரை தன் சிசுவை தன்னுள் இணைத்துக்கொண்டவள்.

இத்தனை தவங்களும், தவிப்புகளும் நிழலான உயிர்தனை கருவறையை அலங்கரித்த கண்மணியை நிஜத்தினில் காணவே......

உறவே! உன் தாயின் தியாகங்கள் அவை ஏட்டில் எழுதப்படும் என்பதற்காக அல்ல,
மாறாக மழலை உருவான நீ அவளை நிச்சயம் ஒருநாள் உன் மடிதனில் சுமப்பாய் என்றே.....

( உன் தாய் !  உனை சிரமத்துடனே பெற்றெடுத்தால், உனை சிரமத்துடனே வளர்த்தெடுத்தால், அவளை " சீ " என்று கூட  சொல்லிவிடாதே..  -- Al Qur'an )...
« Last Edit: June 30, 2022, 02:45:55 AM by Unique Heart »

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life

அன்னை என்ற சொல்லுக்கு உயிர் கொடுக்கும்உறவுநீ... உலகின் முதல் பந்தம் எதுவாக இருப்பினும்
 தாய்-பிள்ளை உறவே உதிரப்பந்த உறவாகும்.
மழழை மொழியும் ,பசியும் தாய்க்கு மட்டுமே புரிகிறது.

எந்தெந்த உடையில் எத்தனை எத்தனை அலங்காரம் செய்து பார்க்கிறாய்...என்னென்ன உணவு எப்படி
பிடிக்கும் என்பது தாயைத்தவிர யாரேனும் அறிவாரோ..

சிறுவர் சிறுமியர் என்ற நிலை வரை அன்னையிடம் இருந்த நெருக்கம் இளமைப் பருவம் தொடங்கும் வயதில் இருப்பதில்லை.. இருந்தும் அனைத்தும் உணர்ந்த போதும் அந்த இடைவெளியை ஆனந்தமாய் ஏற்றுக்கொள்ளும் சுயநலமில்லா உறவு அவள்...

பெண்ணோ ஆணோ திருமண வயதுவரை மட்டுமே
அன்னையின் அன்பு முழுதாக நிறைவாக கிடைக்கிறது அதன் பின் அத்தனை வருட பாசமும் யார் யார்
கண்களுக்கு எவ்வாறெல்லாம் சுயநலமாக மாற்றமுடியுமோ மாற்றி விடுகிறது காலம்.

உண்மையான பாசமும் புரிதலும் இருக்கும் பிள்ளை மனம் மட்டுமே அந்த சூழ்ச்சி எண்ணவலையில் விழாமல் அன்னையை அரவணக்கின்றனர்.
புரியாத கைப்பொம்மையாய் போன பிள்ளை அன்னையை வேறொரு ஆளாக பார்க்கிறான்.

முதுமை பருவம் என்பதே மழழை நிலை போலதான்..உடல் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் செயலிழக்க ஊன்றுகோலும் பெற்ற மகனுமே உறுதுணை...
ஆனால் முதுமைக்குழந்தையை தனக்கு செய்ததில்
ஒரு துளி கூட செய்யத்தயங்குகிறது இக்கால புதுமைப்பிள்ளைகள்..

எத்தனை முறை உணவு அளிக்க உண்டிருப்பான்...
எத்தனைமுறை இயற்கை உபாதைகளை சுத்தப்படுத்தி
இருப்பாள்... எத்தனை முறை நீராட்டியிருப்பாள்..
எத்தனை முறை சிகை அலங்காரம் உடைஅலங்காரம் செய்திருப்பாள்..

இவற்றில் ஒன்றினைக் கூடவா செய்ய மனமில்லாமல்
அத்தனை முதியோர் இல்லங்கள் உருவானது..
இந்த நவீன மனிதருக்கு பயந்து உன் அன்னைக்கு ‌‌‌‌‌செய்யவேண்டிய கடமையில் இருந்து தவறுகிறாய்??

நாளையே உன் பிள்ளையால் உனக்கு நீ செய்வது வந்தால் என்ன செய்வதென்பதை மனதில் நிறுத்திக்கொள் 

Offline SweeTie

வேண்டாத தெய்வம் இல்லை   போகாத கோயில் இல்லை 
முத்தாக ஒரு  பிள்ளை  வேண்டி தவமாய் தவமிருந்தேன் 
செத்தாலும்   கொள்ளிவைக்க   ஆண்பிள்ளை  வேண்டுமென
நித்தமும்   வேண்டி நின்றேன்  அந்த பித்தன் முன்னிலையில்

உருவானாய்   என் கர்ப்பத்தில்   கருவாக
பத்தியமாய்  இருந்து   நித்திரையும்  மறந்தேன்
நான்காம் மாதம்   மின்னலென  அதிர்வை  உணர்ந்தேன்   
ஆறாம் மாதம்   அடிநகரமுடியாது  உன்  கனம்  உணர்ந்தேன்
,எட்டாம்  மாதம்   நீ   எட்டி   உதைத்ததையும்  கண்டு மகிழ்ந்தேன்
பத்தாம்   மாதம்  பக்தியோடு   பெற்றெடுத்தேன்  மகனே உன்னை 

உன் முகம்  பார்க்கையில்   என் பசி மறந்தேன்
உன் பசி  தீர்க்க   என்  குருதியை  பாலாக சொரிந்தேன்
நாளொரு  வண்ணம்  பொழுதொரு மேனியென  நீயும் வளர்ந்தாய்
உன் மழலைப்  பேச்சில்  மயங்கியே போனேன் 
என் கை பிடித்து   நீ  தத்தி நடந்ததை  பார்த்து ரசித்தேன்

தினம் தினம் உன் வளர்ச்சியில்  நான்  கொண்டேன்  பெருமிதம்
கல்வியில்   பல பல உயரம்    நீ காணவேண்டும் 
பல்கலை  பயின்று   பல தேசம்  சென்று    பட்டங்கள் பெறவேண்டும்  என்று கனவுகள் கண்டேன்
இன்று  நீ என்  மகன்   என்றவர்   நாளை  நான் உன் தாய் எனக்கூறவேண்டும்
ஈன்ற போதிலும்    நான்   பெரிதுவக்கவேண்டும்     உன்னை   
சான்றோன்   என  என் காதுகளில்  கேட்கும்போது 

என் ஆசைகள் கனவுகள்  அனைத்திலும்  நீயேதான்  மகனே
இன்று என்பெயர் சொல்பவரில்லை   உன் பெயரில்   வாழ்கிறேன்
இதைவிட  பெருமை  வேறென்ன வேண்டும்   எனக்கு
உன்  வாழ்க்கையின் உயரம் கண்டு  வியந்து நிக்கிறேன்  இன்று
என் வளர்ப்பு   வீண்போகவில்லை என்ற மமதை  எனக்கு

தலை நரைத்து  கண்கள் குழி விழுந்து  முதுமை அடைந்துவிட்டேன்
நடை தடுமாறி  தடுக்கி விழாமல்   நீ தாங்கிப்பிடித்து கொள்கிறாய்
உனக்கு சுமையாகிவிட்டேன் மகனே  நான் சுமையாகி விட்டேன்
சுமையான  என்னை தோளில்  சுமக்கிறாயடா இன்று
பெற்றவர்  சுமை என்று  மற்றவர் நினைக்கும் இவ்வுலகில்
பெற்றவள்  நீதான்  என் தெய்வமென  என்னை  சுமக்கிறாயே
ஈரேழு  பிறப்பிலும்   நீயே என் மகனாகவேண்டும்  மகனே



 

Offline QueeN

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அனைத்து உயிர்களும்
அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம்
அம்மா!

அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
 ஈடு இவ்வுலகில் எதுவும் இல்லை.

பத்து மாதம் சுமந்து பெற்றெடுப்பதோடு
முடிவதில்லை தாய்மையின் கடமை..
தனது அரவணைப்பில் பாலூட்டி
சீராட்டி..... தன்  நலனை விட
குழந்தையின் நலனை பிரதானமாய்
எண்ணி வாழ்பவள் தாய்.

தனக்கு எத்தனை கஷ்டங்கள்
துயரங்கள் நேர்ந்தாலும்
தன்  குழந்தைக்காக அத்தனையையும்
சகித்து கொள்பவள் தாய்

தான் உண்ணாவிட்டாலும் தன்
சேய் உண்ணுவதைக்கண்டு
பசி மறப்பவள் தாய்.
எண்ணிலடங்கா  தியாகத்தை
பிரதிபலன் பாராது  செய்பவள் அவள்.

இவ்வுலகில் அனைவருக்கும்
அன்னை என்பவளே
முதல் உருவம் , முதல் குரல்,
முதல் சுவாசம், முதல் நம்பிக்கை,
முதல் காதல் .. ..

இந்த உலகிற்கு வரும்
முன்னரே குழந்தை கேட்டுரசிக்கும்
அழகான இசை அம்மாவின்
இதய துடிப்பு மட்டுமே.

இப்படி தியாகம் செய்து வளர்த்த
அன்னைக்கு எதுவும் ஈடாக செய்ய
இயலவில்லை எனினும்
முதியோர் இல்லத்தில் சேர்க்கும்
அவலநிலையை உருவாக்கிடாதே....
 
சிறுவயதில் உன்னை கவனித்து போல
முதிர்வயதில் அவளை கவனிப்பதே
நீ செய்யும் கைம்மாறு .

முதிர் வயதில் தாய் தன் பிள்ளைகளிடம்
எதிர்பார்ப்பது அன்பும் அரவணைப்பும்
மட்டுமே.

வயிற்றில் சுமந்தவளுக்காய்
நாம் கொடுக்கும்பெரும்பரிசு
அன்போடு அரவணைத்து அவர்
வயோதிகத்தில் நாம் சுமப்பதுவே!

பெற்றோரின் முதிய வயதில் அவர்கள்
உனக்கு குழந்தையாகவும் நீ அவர்களுக்கு
பெற்றோராகவும் வாழ்வதுமே  இவ்வுலகில்
உனக்கு கிடைத்த ஓர் வரம் .

பெற்றோருக்கு சேவை செய்வதே பெரும் பாக்கியம்
என்ற எண்ணத்தை விதைப்போம்!

முதியோர் இல்லங்கள் இல்லா உலகை
உருவாக்க உறுதியேற்போம்!


Offline AK Prakash

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
உலகில் உள்ள எல்லா கவிதைகளும் தோற்றுப் போகும்
அம்மா என்ற ஒற்றை வார்த்தைக்கு முன்னால் .


என்னைப் படைத்த தாயவளுக்கு
என் படைப்புகளில் உதிரும் சில சொற்களே இந்த காவியம்

துள்ளி திரிந்த இளமையையும் கட்டி காத்த அழகையும்
கட்டு அவிழ்த்து விட்டாள் கருவுற்ற நாளிலிருந்து.

உற்சாகமாக நீந்த வந்த என்னை  கனகச்சிதமாய் சிறைப்பிடித்து
பஞ்சால் ஆன சிறையில் அடைத்தாயே !

மொட்டுவிரியா முல்லை பூவிற்கு முன்னுரிமை தந்து
உடன் வந்தவர்களை வெளி அனுப்பி
எனை மட்டும் பவித்திரமாய் பற்றிகொண்டாய்.

பனிக்குட நதியில் தத்தளித்த எனக்கு
தொப்புள் கொடி தந்து எனை மீட்டாய்.

காற்றில்லாமல் சுவாசித்த காலங்களும் உண்டு
 உணவில்லாமல் உயிர் வாழ்ந்த காலங்களும் உண்டு
வெளிவந்த பிறகுதான் தெரிந்தது
எனக்காக சுவாசித்தவளும் நீயே எனக்காக உணவு உண்டவளும் நீயே.

கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தை உதைத்தது
தாய்மை சிரித்து மகிழ்ந்தது

வயிற்றில் உதைத்து வளர்ந்த குழந்தை
தாயின் வயோதிக காலத்தில் நெஞ்சில் உதைத்த பொழுது
அழுது மடிந்தது தாய்மை.

என் குழந்தை பருவ காலத்தில் எனை அழவிடாமல் காத்த உன்னை
நீ குழந்தை ஆன பிறகு அழவிடாமல் பார்த்து கொள்வதே
என் பிறப்பின் தலையாய கடமையே. தாயே !


« Last Edit: June 30, 2022, 11:22:53 PM by AK Prakash »