Author Topic: நோய்களை உணர்த்தும் நகங்கள்!  (Read 1784 times)

Offline Yousuf

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியா கவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத் தன்மை ஏற்பட்டு விடும்..


நகங்கள் மிருதுவானவை.


விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண் மையாக இருக்கும்..

 

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந் தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக் கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்த மும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும். இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந் தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு கார ணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..

இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும்.

ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.

சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரி களால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
apo nagam neelama valarthu alaga paintu pana illaya.... ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::)


keke jujup nalla pathivu.... dr athuthan kaiya pidichu paakuararaa.. elaraumthan pidichupaakurara enamo naan alaha erukurathala en kaiyathan adikadi pidikuraranu ninachane.... appo apdi ilaya.... >:( >:( :D :D :D :D :D
                    

Offline Yousuf

உனக்கு ரெம்ப அழகுன்னு நெனப்பு தான் அத நாங்க சொல்லனும்ல...!!!  :P  :P  :P   ;D  ;D  ;D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
porama pidichavanga neenga ellam...athuthan naane solikuran....rrr >:( >:( >:(
                    

Offline Yousuf

யாருக்கு பொறமை எனக்க நான் உண்மையத்தான் சொல்லுவேன் நீ அழகுன்னு எல்லார்கிட்டயும் சொல்றது மிக பெரிய பொய் என்று எல்லோரிடமும் சொல்வேன்...!!!!  :P :P :P ;D ;D ;D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்