FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 26, 2016, 11:47:04 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: Forum on March 26, 2016, 11:47:04 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 095
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  PoiGai அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/095.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: ReeNa on March 27, 2016, 04:26:26 AM
மனிதனே ஏன் அடிமையானாய்
போதைக்கே அடிமையானாயே
உன் பாதை மாறிய பயணங்கள்
போதை மாற்றிய பயணங்கள்
உன்னை போதை அடிமையாக்கியதே

மதுவை அருந்த குடும்பத்தை மறந்தாயே
போதை மயக்கத்தில் தள்ளாடுகிறாயே
உன் குடும்பமோ வறுமையின் கடலில் மூழ்கியதே
ஆனால் நீயோ போதை என்னும் கடலில் மூழ்குகிறாயே

தண்ணீரின்  மேல் எழுதின எழுத்துக்கள் போல்
உன் எதிர்காலம் வீணானதே
முதல் எழுத்துக்கள்  எழுதும் உன் பாலகனின் எதிர் காலத்தை நீ எண்ணினாயா

அன்பு மனைவியின் மடியை  மறந்தாய்
 உன் படுக்கை சாலையோரம் ஆனதே
குழந்தைகளுக்கு  ஆடை வாங்க  மறந்தாய்
உன் ஆடையை  தொலைத்தாய்
தாய் பரிமாறின உணவினை மறந்தாய்
இப்போது  எச்சில் இலை தேடுகிறாய்
போதை சுகத்திற்காக  உண்மையான சுகத்தை இழந்து விட்டாய்

பார்க்க முடியாத உன் கட்டுகளை உடைத்து வெளியே வா …
உடைந்து போன உறவுகளை கட்ட வா ...
இந்த போதையிலிருந்து  எழும்பி வா…
மரித்த  வாழ்கையை மீண்டும் உயிர்ப்பிக்க வா


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: MyNa on March 27, 2016, 01:33:00 PM
மனிதன் மனிதனுக்கு
அடிமையாய் இருந்த
காலம் கடந்து இன்று
மனிதன் மதுவுக்கு
அடிமையாய் கிடக்கிறான்

இரவு பகல்
நண்பன் விரோதி
நன்மை தீமை
இவை எதுவுமே அறிந்திடாமல்
மூழ்கிவிட்டான் போதையிலே 

இவர்கள் குடித்துவிட்டால் 
பேசுவதும் செயல்படுவதும்
இவர்களுக்கே ஞாபகம்
இல்லாமல் தங்களையே
மறக்கின்றனர் போதையிலே

குடி குடியை கெடுக்குமாம்
அது அன்றைய பொன்மொழி
குடி மனித குலத்தையே
வேரோடு சீரழிக்குமாம்
இது இன்றைய அடைமொழி 

மனிதனாய் விழித்து
எழாவிட்டால் இனிவரும்
சந்ததியும் அடிமைதான்
மனிதனுக்கோ அதிகாரத்துக்கோ
அல்ல.. குடி போதைக்கு

ஆறறிவு இருந்தும்
ஐந்தறிவு ஜீவனாய்
வாழவே விரும்பும்
மானிடர்களுக்கு எனது
வேண்டுகோள் ..

பெற்றவர்களை தான்
உதாசினபடுத்திவிட்டிர்கள்
நீங்கள் பெறப்போகும் செல்வங்களுக்காக
உயிர்த்தியாகம் செய்யாவிடினும்
மதுவை தியாகம் செய்யுங்கள்...

~ மைனா தமிழ் பிரியை ~
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: MysteRy on March 27, 2016, 06:26:07 PM
ஆறாத ரணமும் ஆறும்               
தீராத பிணியும் தீரும்                   
போதை மனிதனை ஆட்கொளும் போது   
மது உலகத்தையே மறக்கச் செய்யும்                   
மேலோகத்தை பூலோகத்துக்கு கொண்டு வரும் 
ஒரு விந்தை மது       
 
மது அருந்தியவன் கண்கள் சிவப்பது     
மதுவால்  அல்ல                                                 
அது அவனது ஆறாத வேதனைகளின்     
எடுத்துக்காட்டு                                                         
 மது அருந்தியவன் மனதினில்                 
மழையடிக்கும்                                                 
இன்பச் சாரல்கள் துவானமிடும்           

அது சரி                         
மது அருந்தியவுடன்                                     
மனைவியை அடிப்பது             
குழந்தைகளை உதைப்பது  ஏன்                   
அவர்கள் என்ன உனது குடிக்கு       
தொட்டுக்கொள்ள  ஊறுகாயா         
 உன் மனதில்                         
இன்பச் சாரல் அடிக்கட்டும் ஆனால்     
உனது குடும்பத்தில்                     
கண்ணீர் வெள்ளமல்லவா ஓடும்           
இது அழகா                                                           
குடிப்பது இன்பத்தை அனுபவிக்க           
கவலைகளை மறக்க                                     
உன்னையே மறக்கச் செய்யும்             
உன் சுயநினைவை இழக்கச் செய்திடும்     
மதுவுக்கு நீ அடிமையாகும் அளவுக்கு         
குடிப்பதால் என்ன பயன்                                           
நீயும் இன்பமாக இல்லை                                         
உனது குடும்பமும்                                                       
இன்பமாக இல்லை                                                     
அளவுக்கு மிஞ்சினால்                                               
அமிர்தமும் நஞ்சு                                                     
அதை மனதினில் நிறுத்திக் கொள்                     
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: JEE on March 27, 2016, 07:23:11 PM
அதிகமாக  பணம்  சம்பாதிக்கிறோம் 
அதனை   அனுபவிக்க
புத்திர    பாக்கியம்  இல்லை

யாருக்காக   சேர்க்க   வேண்டும்
யாருக்காக   வாழ      வேண்டும்
நாமே  சேர்த்தோம்   நாமே  நம்     
பணத்தை     அழிப்போம்

தன் ஆயுசு   நாட்கள்    இவ்வளவே  என்று  தெரியா  திருந்தும்
மனிதன்    தன்ஆயுசு   நாட்களை  குறைக்க    வழி    தேடுகிறான்

போதை   மருந்துப்    பயன்பாடு   குடிப்பழக்கம்  தொடர  காரணம்         
தீய  சூழ்நிலையே

தனிமையாய்   இருப்பவன்  குடும்பத்    தினருடன்      அதிக நேரம்
செலவழிக்க   வேண்டும்.

தலைவன்     தலைவியுடன்    இணைந்து   இருவராய்   இருப்பது             
தலைவலி    என்கிற     சூழ்நிலை      வரும்போது
தீயபழக்க      வழக்கங்கள்       அத்தனையும்
ஆண்டு           கொள்ள            யோசிக்கும்
தீய   நண்பர்களை     தவிர்ப்பது   தீமையகல பலன்   கொடுக்கும்.

மனதிலே         குழப்பங்கள்,      மனப்பதற்றம்,
மனதிலே         அழுத்தம்,            மனநலப பிரச்சினைக்கு
மலிவாகக்        கிடைக்கும்        போதைப் பொருட்கள்
மதுபானங்கள்      குடிப்பது       தீர்வாகாது

கடுமையான    சட்டங்கள்           மட்டும்     போதாது.
திறமையான    திட்டங்களும்     உடனே     தேவை.

நம் நாட்டு    கல்வி முறை    எல்லாரையும்  சோம்பேறி   யாக்கிவிடுகிறது
சிறுவயது     முதல்  முதுகலை  படிக்கும்    வயது வரை
காலை   முதல் இரவு வரை படிபடி   என்றே காதில்
கேட்டு  கேட்டு வாழ்கிறான்

தாய்தந்தையர்க்கு   உதவுவதில்லை  காலம் முழுவதும்  படிப்பு
படித்துபடித்து  தூங்கி எழுகிறான்

இம்முறை மாற்றி

அதிகாலை   முதல் 10 மணி   வரை படிப்பு மதியம்2  முதல்   
எதேனும்     வேலை கோடுத்தால்  எல்லாரும்  சோம்பேறியாக       
வாய்ப்பில்லை  வேலைக்கு    கூலி கிடைக்கும்
சோம்பேறி யாக்கு்ம் இலவசம்  ஒழிக்கப்பட வேண்டும்

சும்மா   இருக்கும்   பழக்கத்திற்கு      முற்றுபுள்ளி
வைத்தால்       இத்தீய பழக்கம் வர    வாய்ப்பில்லை

மதுக்கடை மூடினால்      மட்டும் தீர்வாகாது..........
தேவை  மனமாற்றம்........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: thamilan on March 27, 2016, 08:09:25 PM
அலைகள் இல்லாத கடலும் இல்லை
பிரச்சனைகள் இல்லாத மனிதரும் இல்லை
பிரச்சனைகளை மறக்க
துன்பங்களை மறக்க
மதுவுக்கு அடிமையாகிறான் மனிதன்

மனப்புண்ணின் மேலே
திராவகத்தை ஊற்றுவதால்
புண் தான் ஆறிடுமா இல்லை
வலி தான் நீங்கிடுமா
 
கவலைகளில் இருந்து கரை சேர்வதாக எண்ணி
கடலில் மதுக் கடலில் வீழ்ந்தவன்
தத்தளிக்கிறான் கரை சேர முடியாமல்

ஒரு காலத்தில்
தலை நிமிர்ந்து
நெஞ்சு நிமிர்த்தி நடந்தவன்
இன்று தலை குனிந்து
நடக்கிறான் பெண்களை போல
மரியாதையின் நிமிர்த்தம் அல்ல
மது  போதையின் நடுக்கம்

எழுத பேனையை எடுத்தால்
கண்ணகி வீசி எறிந்த
சிலம்பின் பரல்களைபோல
எழுத்துக்கள் சிதறுகின்றன கை நடுக்கத்தால்

எங்கோ தொலைத்த இன்பத்தை
மதுவில் தேடும் மானிடனே
மனைவியின் அன்பில் இல்லாத போதையா
குழந்தைகளின் அமுதமொழியில் இல்லாத
ஆனந்தமா
நிஜத்தை விட்டு நிழலைத் தேடுவதும் ஏன் 

செவ்வானம் சிவப்பது விடியலுக்காக
மது போதையில் கண் சிவப்பது
வாழ்வின் அஸ்தமனத்துக்காக


மது - அது
தேவதைகள் வாழும் மனதை
சாத்தானின் சந்நிதி ஆக்கிவிடும்
நந்தவனமாய் இருந்த நம் வாழ்வை
பாலைவனமாய் மாற்றிவிடும்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: ! Viper ! on March 27, 2016, 10:23:04 PM
குடி குடியைக்   கெடுக்கும்
மது அருந்துதல் உடம்பிற்கு தீங்கு  விளைவிக்கும்



இந்த எச்சரிக்கையை   பார்க்காத  இடமே  இல்லை
ஆனால்   இன்று  மனிதன்
குடித்தால்  தனக்கு   அழகு
மனிதன்  மொழியில்  ( கெத்தூ  )என்று
 அர்த்தமே  இல்லாமல்  சொல்லி    கொண்டு  போதைக்கு அடிமையாகிறான் 

மனிதன்  எதற்காக  குடிகின்றான் ?
இதை  இரண்டு  விதமாக  பிரிக்கலாம் 
ஒன்று  சந்தோசத்திற் காக
மற்றொன்று  சோகத்திற்காக

சந்தோசம் ..
மனிதன்  வாழ்வில்  ஒரு  பகுதியில்  ஜெயித்து விட்டால்  குடிக் கின்றான்
விளையாட்டுப்  போட்டிகளில்  ஜெயித்தால் குடிக்கின்றான்
நண்பர்களுடன் சமனுக்கு    சமமாக  குடிக்கின்றான்
காதலியிடம்  சந்தோசம்  கிடைத்தால்  குடிக்கின்றான்
பண்டிகை  நாளிலும்  குடிகின்றான்,  இழவு  வீட்டிலும் குடிக்கின்றான்
குடிக்க  வேண்டும்  என்பதற்காகவே   குடிக்கின்றான்

சோகம்..
மனிதன்  துன்பத்தை  அடைந்தால்  குடிக்கின்றான்
மனிதன்  நிம்மதி  இல்லை  என்றால்  குடிக்கின்றான்
மனிதன்  மது  அருந்தியதும்  தன்னைத்   தானே மறந்து வேறு  உலகத்திற்கு செல்கின்றான்
சோகத்தை  அடைந்து  நொந்து  போவதை  விட 
குடி  போதையில் சந்தோசத்தை  அடைவோம்  என்று  எண்ணிக்    குடிக்கின்றான்   
காதலில் தோற்றால் குடிக்கின்றான் 
வாழ்க்கையில் தோற்றாலும் குடிக்கின்றான்

சந்தோசம்  சோகம்  வாழ்க்கையில் மாறி மாறி வரும் அதிசயம்
அதை  உணர்ந்து  நாம்  தொலைநோக்குடன்  திறமையாக செயற்படவேண்டும்
குடித்தால் சில காலம் சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கை கையில் இருக்காது
மது  ஒன்றே  கைல்  இருக்கும்  வாழ்கை  தொலைந்து   விடும்

மதுவில்  மருத்தவ  குணங்களும்  இருக்கின்றன
அதை  டாக்டர்கள்  ஆலோசனையுடன் பகிரவேண்டுமே தவிர   
அதற்கே  நாம் அடிமையாக  இருக்க  கூடாது ]


சிந்திப்பீர்  செயல்  படுவீர்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: Dong லீ on March 29, 2016, 01:22:28 AM
கல்யாணி !
உனக்கு ஒரு கவிதை -பை நெப்போலியன் ..


"உச்சந்தலையை உருக்கிடும்
உச்சி வெயிலில்
குச்சி ஐசும் நீர் மோருமாய்
உன்னை நான் கண்டேன் !

என்னுள் நீ
அணுக்கள் தோறும்
கலந்திட 
கால்கள் தள்ளாடி
தடுமாறினேன் !

உன் இருப்பில்
எனையே மறக்கலானேன் !
உன் மயக்கத்தில்
நடுதெருவிலும் விழுந்து
சாலையை அனைக்கலானேன் !

உன் இன்மையில்
என் கண்கள் வியர்க்கலானேன்
கைகள் நடுங்கலானேன் !

நீ தரும் போதை
அனுதினமும் வேண்டும்
எனை என்றும்
பிரியாதே !! "



கடிதத்தை படித்து முடித்தவள்
சீறும் கோபமுமாய் சீறினாள்
"அட குடிகார நாயே
நான் கல்யாணியின் அம்மா "!!


அத முதல்லையே சொல்ல கூடாதாமா?

பின்னொரு நாளில்
மீண்டும் ஒரு  கடிதம் டு கல்யாணி
பை நெப்போலியன்


"அன்பே கல்யாணி
நீயென நினைத்து
உன் அன்னை சுமதியிடம்
கடிதம் கொடுத்ததை எண்ணி
வருந்துகிறேன் "

கடிதத்தை படித்து முடித்தவள்
சீறும் கோபமுமாய்
சீறினாள்
"அட குடிகார கபோதி
நான் சுமதியின் அம்மா "!!



குடி குடியை கெடுக்கும் !
போதையில் கண் முன் தெரியாமல்
காதலியின்  தாயிடமும் பாட்டியிடமும்
 காதல் கடிதம் கொடுத்தால்
குடி போட்டியை கூட எடுக்கும் !

பொதுநலன் கருதி வெளியிடுவோர்
பூஸ்ட் குடிக்கும் புலவர் சங்கம்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 095
Post by: PraBa on March 29, 2016, 01:42:27 AM
எவர் போதிப்பது உனக்கு?
அவ்விடம்விட்டு அகலும் வரை
அவனுக்கே தெரியாது
தான் தடுமாறிகிரமோ என்று
தடுமாறுவது அவனது கால்கள் அல்ல
அவனது காலங்கள் என்று
எவர் போதிப்பது அவனுக்கு?

உண்ண உணவின்றி உள்ளபோதும்
ஊற்றிக்கொள்ள மது கேட்கும் அவனுக்கு
எவர் எடுத்துகூறுவது..?

அளவில்லா மதுவினால் அடிமையாகிபோன அவன்
எழுவதே எதற்கு என்று தெரியாமல்
வீழ்ந்து கிடக்கிறான் வீதி மண்ணில்...,

கடந்த காலத்தை மறந்த அவன்
எதிகாலத்தை மட்டும் எப்படி எதிர்கொள்வான்?

மதுவின் மடியில் மடங்கி கிடக்கும் அவனது
மனம் மாறுவது எப்பொழுது?
குடியின் அருமை தெரிந்த அவனுக்கு
வாழ்வின் அர்த்தம் புரிவது எப்பொழுது?

மகிழ்ச்சியான வாழ்வு மனிதனுக்கு மட்டுமே
அதில் மதுவை ஊற்றி அழித்துவிடதே..,
மகிழ்சிக்கு மது வேண்டும் என நினைக்கும் உனக்கு
மனமும் வேண்டும் என  நினைகவில்லையா ..,

சிற்பம்போல நீ காட்சியளித்தாலும்
நீ என்னவோ சிறைபட்டிருப்பது மதுவின் மடியில்தான்
சிறைக்குள் இருக்கும் சிற்பதிற்குதான்
என்ன மதிப்பு...?

உணர்ந்துகொள் உணர்வை புரிந்துகொள்
எழுந்து நடப்பவன் பாதம்தான் மண்ணில்  பதியும்
வீழ்ந்து கிடப்பவன் பாதம் அல்ல..,

நிலையில்லா வாழ்வில் நினைவில்லாமல் இருக்காதே
நினைவோடு இருந்திடு
நித்தம் வாழ்வில் வென்றுவிடு ...,