Author Topic: வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!  (Read 417 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218404
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!



கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். இவைகளை எப்போது தான் வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் எந்த ஒரு பயனும் கிடைத்திருக்காது.

அப்படி பணம் செலவழித்து கண்ட பொருட்களைப் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம். இங்கு பலரையும் பயமுறுத்தும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி மற்றும் பல தொல்லைகளை விரட்டுவதற்கான எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.


சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்துவிடும்.

பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசுவிரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்