Author Topic: சம்பா கோதுமை அல்வா  (Read 2050 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சம்பா கோதுமை அல்வா
« on: July 26, 2011, 02:43:34 PM »
சம்பா கோதுமை அல்வா



தேவையானவை:

    * சம்பா கோதுமை – ஒரு கப்
    * சர்க்கரை – ஒன்றரை கப்
    * நெய் – ஒரு கப்
    * முந்திரி – 10
    * ஏலக்காய் – 5
    * புட் கலர் ஆரஞ்சு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

    * கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட்டு, மறுநாள் கிரைண்டரில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
    * ஒரு பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை கட்டி வைத்துவிட்டு, அரைத்த கலவையை ஊற்றி, பாலை வடிகட்டவும்.
    * மேலே தங்கும் சக்கையை பிழிந்து எடுத்து, அதை மீண்டும் கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
    * இப்படியே நான்கு முறை கோதுமை ஜவ்வு போல வரும்வரை அரைத்து அரைத்து துணியில் ஊற்றி, வடிகட்டி பால் எடுக்கவும்.
    * இந்த பாலை அப்படியே மூடி வைத்தால், 6 அல்லது 7 மணி நேரம் கழித்து நன்கு தெளிந்து மேலே தண்ணீர் நிற்கும்.
    * அந்த தண்ணீரை வடித்துவிட்டு, கீழே தங்கியிருக்கும் மாவு பகுதியை எடுத்து அதில் ஆரஞ்சு கலரை கலந்து வைக்கவும்.
    * அடி கனமான பாத்திரம் ஒன்றில் சர்க்கரையை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வந்ததும் கோதுமை பாலை, சர்க்கரை பாகில் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
    * நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கொண்டே கிளறவும்.
    * அல்வா பதம் வந்ததும் முந்திரியை முழுதாக நெய்யில் வறுத்துபோட்டு, ஏலக்காயை பொடித்து போட்டு கிளறவும்.
    * சுற்றிலும் நெய் கக்கி, அப்படியே கசிந்து, அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
    * அந்த சமயத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.