Author Topic: ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம்  (Read 2755 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


2012 ஆ‌ம் ஆ‌ண்டு ஆக‌ஸ்‌ட் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28


(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் புத்துணர்ச்சி பெருகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.



ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29
(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள்.


ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள்.


ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31

(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். முடிவுகள் எடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி திரும்பும்.



ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23

(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அரசியலில் செல்வாக்கு கூடும்.


ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 6, 15, 24

(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முழுமையடையும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். அரசால் அனுகூலம் உண்டு.



ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 7, 16, 25

(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குழம்பியிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள்.



ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 8, 17, 26

(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.


ஆக‌ஸ்‌ட் மாத எண் ஜோதிடம் : 9, 18, 27

(திங்கள்கிழமை 30 ஜூலை 2012)     

 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வி. ஐ. பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்கள், நண்பர்கள் வகையில் ஆதாயம் உண்டு.