FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on January 23, 2016, 11:48:29 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: MysteRy on January 23, 2016, 11:48:29 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 088
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Paul Walkerஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  வியாழக்கிழமை (28.01.2016) GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/088.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: JEE on January 24, 2016, 10:05:35 AM
மகத நாட்டைக் கொண்ட
மௌரியப்பேரரசு
கிழக்குப் பகுதியில்
கங்கையில்   உருவானது


சந்திரகுப்த  மௌரியனால்
பாடலிபுத்திரம்  தலைநகராக
கிமு 322 ஆம் ஆண்டில்  உருவானது
 

வட இந்திய  வரலாற்றில்
மைய ஆட்சி,  மாநில ஆட்சி   என்ற
இருவேறு ஆட்சி  உருவானது


பிந்துசாரர்  அசோகர்
தசரதன்,  குணாளன்,  மகேந்திரன்
ஜலவுகன்,  இறுதி மன்னன்  பிருஹத்ரதன்
ஆட்சித்திறம்  வளர்ச்சி   உருவானது


இந்து   பௌத்தம்,  சமணம்  சார்ந்த
இலக்கியத்  துறை  பல   துறையின்
அறநெறி சார்ந்த  வளர்ச்சி  உருவானது





தில்லி  சுல்தானின்  சேனையை  வென்று
இராசபுத்திரர்களையும்
ஆப்கானியர்களையும்  வென்று
பாபரால்  முகலாயப் பேரரசு   உருவானது


பாபர்  ஹுமாயூன்  அக்பர்    
ஜஹாங்கீர்     சாசகான்    ஔரங்கசீப்    
இறுதி மன்னன்   முதலாம் பகதூர் ஷா    
ஆட்சித்திறம்   வளர்ச்சி    உருவானது



வட இந்திய   வரலாற்றில்
அக்பர்ஆளுனரை  நியமித்தார்.
வெற்றி உள்ள    ஆட்சி    உருவானது

அக்பரும் அவுரங்கசீப்பும்  சாகும் வரை
அசத்தலாக 49 ஆண்டுகள்  ஆண்டார்கள்.
பொற்கால ஆட்சி   உருவானது


மௌரியப்பேரரசு  கிமு 325 -  கிமு 185
முகலாயப் பேரரசு    கிபி 1526–கிபி 1707
இந்திய  வரலாற்றில்   பொற்காலம்





அன்று  துவங்கி  இன்று வரை
அனைவரும்  இதைத்தான்
அனைவருக்கும்  கல்வியாக  அலைந்து
படித்து  தேர்வு  உருவானது

முன்னோர்  மாற்றம்  உருவாக்கினர்
அயல் நாட்டில் ஏடு  சுமக்கவில்லை
புதிய  உத்திகள்   உருவானது

எழுத்தாணி  உருவாகி  மறைய  முன்னோர்
பற்பல  எதிர்ப்பு  கண்டு
ஏட்டுக்கல்வி  உருவானது 

ஏட்டுக்கல்வி  உருவாகி  மறைய  பின்னோர்
எடுத்து உரைத்த  பற்பல  உத்திகள்
அரசுக்கு சோம்பல்   உருவானது 


இன்னும் நம்  கல்வித்துறையில்
மாற்றம்  உருவாகவில்லை
மாற்றம்  உருவாகட்டும்


பழமை  களைவோம் பாரினில்  பாரீர்
கல்வி  வளர்ச்சியில்  பாரினை

மாற்றம் உருவாகட்டும்
மாற்றம்  உருவாகட்டும்
விரைவில்............



 


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: MyNa on January 24, 2016, 04:08:08 PM
வீழ்த்திட  முடியாத  தமிழன்  இன்று  தானே வீழ்வது  ஏனோ


தமிழனென்று  சொல்லடா
தலை  நிமிர்ந்து  நில்லடா ..
என முழங்கிய தமிழன் அன்று
தமிழனென்று  உணரடா
தாழ்வு  மனப்பான்மையை  விலக்கடா ..
என முடங்கிய தமிழன் இன்று   !!

வெல்ல  முடியாதவன்  தமிழன்
என்ற  காலம்  போய்
வீழ்த்த  முடிந்தவன்  தமிழனே 
என்கின்ற  காலம்  இன்று ..
அன்று  வீர  மரணம்  அடைந்த
என்  தமிழன்  எங்கே ??
இன்று  வீணாக  மடியும்
என்  தமிழன்  எங்கே ??

நாடான்ற  காலம்  போய்   இன்று
தம் மாநிலம் ஆள கூட கையாலாகாதவர்களா  நாம் ??
பிறர்  நிழலிலே   வாழ்ந்து 
பழக்கமானதலோ என்னவோ 
இன்று  தமிழனின்  சீரும்  சிறப்பும்   
அருங்க்காட்சியகத்திலேக்  தூங்கி  கொண்டிருக்கின்றது
தூசு  தட்டி  எழுப்ப  என்  தமிழன்
வர  மாட்டானா  என ஏங்கி ..

தமிழனே விழித்து  எழுந்திடு  ..
பொறுத்தார்  பூமி  ஆள்வார்  என்பதெல்லாம் 
செவிமடுக்க  இனிமையாகத்தான் இருக்கும் ..
இனியும் பொறுத்தால்  நாளை  நம்
வரலாறு  சொல்ல  தமிழனமே  இருக்காது ..
தமிழன்  தலை  நிமிர்ந்து  நின்றான் .. நிற்கின்றான்  .. இனியும் நிற்பான் !!
( நிற்க வேண்டும் )

என்ற வேட்கையோடு,
 
தமிழ் பிரியை  மைனா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: பொய்கை on January 24, 2016, 09:23:03 PM
பாராண்ட இனமிந்த  தமிழினம் !
இமயம் முதல் குமரி வரை
தன் வீரத்தால் அரசாண்ட  எங்கள்
இனம்  தமிழினம் !

இலங்கையும் ,கடாரமும் ,
ஜாவாவும்,சுமத்திராவும்
கடல் தாண்டி வெற்றிகண்ட
எங்கள் இனம்  தமிழினம் !

ஆர்பரிக்கும் அலைகடலும்
அடங்கி விட கப்பல் கட்டி
பாய் மரத்தை விரித்து கட்டி
போர்முரசம் எங்கும் கொட்டி
போன திசை எல்லாம் கோயிலும் கட்டி
ஆண்ட எங்கள் இனம்  தமிழினம் !

மௌரியனின் எல்லை கோடு
வடக்கே நின்று போக ...
மொகலாயன் வந்து வந்து
எங்களிடம் வீழ்ந்து போக ...
ஆண்டு பல ஆட்சி செய்த
அறிய இனம் தமிழினம் !

போர்களத்தில் வாளின் வடு
முதுகினிலே பட்டு விட்டால்
பால் கொடுத்த மார்பு தனை
வாள் கொண்டு வெட்டி எறிந்திட்ட
வீரமங்கை வாழ்ந்த எங்கள்
இனம்  தமிழினம் !

வன்னி காட்டுக்குள்ளே
சிங்கமென பல காலம்
சிங்களனை ஓடவைத்த
மாவீரன் பல வாழ்ந்த
சிறப்பு மிக்க எங்கள்
இனம் தமிழினம் !

இந்துவும் ,கிறித்துவமும் ,
இஸ்லாமும் ,ஜைணமும்
எந்த மதம் ஆனாலும்
இன்றுவரை நட்போடு
வாழ்ந்து வரும் எங்கள்
இனம் தமிழினம் !

இலங்கை ,சிங்கப்பூர்
மலேசியா ,மொரிசியஸ்
எங்கும்   வேர்கள் அசையாமல்
தாங்கி நிற்கும்  விருட்சம்  எங்கள்
இனம் தமிழினம் !

தமிழன் ஓய்ந்துவிட்டான்
என்று நினைக்கயிலே !
களைத்து  இளைப்பாறி
வெகுண்டளுமே சுனாமியாய்
என்றும் எங்கள் தமிழினம் !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: பவித்ரா on January 25, 2016, 05:05:29 AM
சிந்து சமவெளியில் துவங்கி
ஆசியா வந்தபோது பல வகையினில்
பிரிந்து வந்தாலும் நான் "தமிழன்"
என்ற பெருமையோடு தமிழ் கலாச்சாரம்
பண்பாடோடு  வீரத்தையும் விதைத்து
தாய் மண்ணையும் கண்  போல காத்து வந்தான்
என் பாட்டனும்  பூட்டனும் .,

இயற்கை உணவை சுவைத்த வரை
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வரை
தேவைக்கு போதுமென்ற  மனம் உள்ளவரை
அயலாரின் தேவையறிந்து  உதவிய வரை
கட்டாயமாக வீரம் விதைத்தவரை
எல்லாம் சீராகவும் சிறப்பாகவும்  இருந்தது ...
இன்று காலமாற்றத்தால்  சீர்கெட்டு அலைகிறது ...


மௌரியனால் வெல்ல முடியாத
என் தமிழினம் கொண்ட வீரம் எங்கே?
மொகலாயனை நுழைய விடாத
தமிழன் கொண்ட ஒற்றுமை எங்கே ?
இன்று அரசியல்வாதிகளிடம்
என் இனம் சிக்கி தவித்து வாழும்
வாழ்க்கை நினைக்கையில்
மனம் வெதும்புகிறது ...

தமிழக மீனவர்கள் அன்னியனால்
சுட்டுக் கொல்லப்பட்டால் கூட
கேள்வி கேட்க நாதி இல்லை .....
ஒரு தமிழினம் அழிவை எட்டியது
நாம் என்ன செய்தோம்
செய்தியை அறிந்தும்
பேசா மடந்தையாக
ஊனமாகி நின்றோம் ...

கரப்பான் பூச்சியைக் கண்டால்
காத தூரம் ஓடும் பெண்கள் ..
நாலு பேர் சேர்ந்து கிண்டலடித்தால்
ஒதுங்கி செவிடர்போல் செல்லும் ஆண்கள் ..
அரசியல்வாதி தவறு செய்தால்
தட்டி கேட்காத பெரியவர்கள்..
எங்கே நம் வீரம் ?மறந்து விட்டதா?
என் மற தமிழா ...!

அடுத்த தலைமுறைக்கு சொத்து
சேர்க்க கற்றுக்கொடுக்காதே ..
போட்டிகள் நிறைந்த உலகமிது..
முன்னோரின் வீரத்தை கற்றுகொடு ..
அவன் தன்னையும் காப்பான் ..
தன்  மண்ணையும் காப்பான் ...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: PaRushNi on January 26, 2016, 01:48:18 AM
மதிய உணவிற்கு அடுத்தே அமையும்
சமூக அறிவியல் வகுப்பு
அய்யகோ !.. என சிலரின் கூக்குரலும்
நல்ல உறக்கம் பெற.. தாலாட்ட..
அமைதியாய் நுழைந்த ஆசிரியையும்..
இவைகளே நினைவில் எழுகிறதே
இப்படத்தை பார்க்கையிலே..
 
சங்க இலக்கிய பாட்டினிலே
தமிழர் வாழ்க்கை நெறியதனை அறிந்திடவே
ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிலே
நிலைபெற்று நின்ற கலைச் சிறப்பினை அறிந்திடவே 

எல்லையை பெரிதாக்கிய பேரசுகள் வடக்கினிலே
எஞ்சிய அடையாளங்கள் கொண்டு அறிந்திடவே
எதிரிகள் குடிபுகாவண்ணம் பாதுகாத்தனரே
தெற்கிலே சான்றுகள் பல உண்டு அறிந்திடவே

என்றுமுள தென் தமிழ் - என்ற
கம்பரின் கூற்றும் பொய்யல்லவே..
காலங்கள் கடந்தினும் காலச்சுவடுகள்       
சாட்சியாய் நின்றனவே..
விந்தையிலும் விந்தை

தனி மனித வரலாறு
பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும்
வெறுமையான சம்பவங்கள் அன்று
எண்ணங்களுக்கு உயிரூட்டி
திட்டங்களை நடைமுறைபடுத்தி
ஒவ்வொரு நாளையும் தடைகளை எதிர்த்து
போராடி வெற்றி பெரும் ஒவ்வொரு நபரும்
சாதனை நாயகனே / நாயகியே
சரித்திரம் படைக்க சரித்திரம் அவசியமே !
 


      கிறுக்கலுடன்
      - பருஷ்ணி  :)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: MaJeStY on January 26, 2016, 02:29:02 PM
ஏ!! தமிழா!! ஏ!! தமிழா!!
எகிப்த்தை வென்றவனாம்!!
ஏழுகடல்  தாண்டியவனாம்!!
இமயமலையை இறுக்கி கட்டியவனாம்!!
இங்கிருந்தே ஆகாசத்தை முட்டியவனாம்!!
உலகையே உருண்டையாக்கி உருட்டி விட்டவனாம்!!
உண்மையை உலகுக்கு உரக்க உரைத்த உத்தமனாம்!!
உடைவாள் எடுத்தால் ரத்தம் காட்டி வைப்பவனாம்!!

தமிழா! தமிழா! இப்படி விழித்து கொண்டே உறங்க எங்கே கற்றாய்!!

வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது என்றான் மாவோ!!
இன்றோ வரலாறு தெரியாமல் வீண் தம்பட்டம் அடிக்கிறாயே தமிழா!!

 வருகிறான் மாலிக்காபூர் என்ற செய்தி கேட்டவுடன் துண்டை காணோம்
 துணியை காணோம்  என்று ஓடியவன் மறத்தமிழன் அல்லவோ!!

தான் வழிபட்ட மரகதலிங்கத்தை விட்டுவிட்டு ஓடிய தமிழனே!!
காத்து தந்தவன் ராமேஸ்வரத்தின் முகமதிய நண்பனே!! 

திண்டுக்கல்லில் வீரன் திப்பு சுல்தானின் மலைக்கோட்டை இன்றும் அவன் பெயர் சொல்லுமே!!
பிறரை காட்டி கொடுத்த கயவர் கூட்டத்தின் தமிழுணர்வு நம்மை நாளும் கொல்லுமே!!

தமிழன் என்றொரு இனமுண்டாம் அவனுக்கு தனியே குணமுண்டாம்!!
காணமுடியவில்லையே காலம் பல கடந்தும் !!

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி
என அறிவியல் அறியாமல் உளறியவர் அறிவற்றவர் அல்லவோ !!
ஆதிக்குடி தமிழ்க்குடி அல்ல குரங்குக்குடி என்று நான் சொல்லவோ !!

நம்மை ஆண்ட நாயக்கர்கள் ஆட்சி விஜயநகரத்தின் ஆட்சி அல்லவோ!!
கன்னடர் தமிழரை வென்ற கதை சொல்லவோ !!

பல்லவரும் தெலுங்கர் என்ற வரலாறு மறந்தாயா தமிழா!!
மதுரையை ஆண்ட மருதநாயகம் ஹைதராபாத் நிஜாமின் பிரதிநிதியே தமிழா!!

உன்னை காலம் காலமாக வென்றவனும் உண்டு !!
கொன்றவனும் உண்டு!!
உனக்கு பக்கபலமாய்  நின்றவனும் உண்டு!!

நீ பிச்சையிட்டவனும் உண்டு !!
உனக்கு பிச்சையிட்டவனும் உண்டு !!
நீ வாழவைத்தவனும் உண்டு!!
உன்னை வாழவைத்தவனும் உண்டு !!
 
ஆனையை கட்டி அனைத்தவனாம்!!
குதிரையை கட்டி குனைத்தவனாம் !!
அண்டை நண்பரை எதிர்த்த நீ
அந்நியனுக்கு ஏன் பணிந்தாய் தமிழா!!

ஈட்டி போன்ற பார்வையும்
முறுக்கிய மீசையும்
தினவெடுத்த தோள்களும்
பரந்த மார்பும்
உருக்கு போன்ற கைகளும்
எஃகு போன்ற கால்களும்
சுத்த வீரமும்
துப்பாக்கி ரவை கண்டு ஓடி ஒளிந்தது ஏன் தமிழா!!

இன்றும் ஆண்ட பரம்பரையினர் என்று பீதற்றிக்கொள்ளும் சமூகத்தாரே!!
ஆங்கிலேயருடன் வீரத்தோடு மோதி பெற வேண்டிய சுதந்திரத்தை  ஏன் மன்றாடி பெற்றீரோ!!

அயோக்கிய ஆங்கிலேயரை எதிர்த்து ஒட்டுமொத்த  இனத்தைத் திரட்டாத தமிழினம்!!
அண்டை சிங்களவனை மனித வெடிகுண்டுங்கள் வைத்து சாகடிப்பது தான் ஈழதமிழுணர்வோ!!

வடக்கோ தெற்க்கோ
கிழக்கோ மேற்க்கோ 
நம்மை ஆண்ட மன்னர்களில் பெரும்பாலனோர் மடையர்களே!!

மது மாது சூது என காலம் கழித்தவர்கள் நாட்டை பாதுகாத்திருக்க சாத்தியமில்லை!!
அன்றும் இன்றும் என்றும் நாட்டையும் வீட்டையும் பாதுகாத்தது நன் மக்களே !!
பாமர நம் மக்களே!!

நம்மை ஆண்டவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்!!
ஆள்பவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்!!
நமது ஆண்டவனாவது தமிழனா!!
இவர்கள் சண்டை இடுவது தமிழகத்தை காப்பாற்ற அல்ல!!
தங்கள் பதவியையும் சொத்துகளையும் காப்பாற்ற மட்டுமே!!

தமிழை தமிழுணர்வை தமிழனை வைத்து பிழைப்பவன் தமிழனே!!
மக்களை காப்பவன் மனிதநேயமிக்க மனிதனே !!

மல்லுக்கு நின்றவன்
மானம் காத்தவன்
மரியாதையை கொடுப்பவன்
மகிழ்ச்சி பொங்க செய்பவன்
தமிழன் அல்ல மனிதாபிமானம் கொண்ட மனிதனே!!

100 வருடம் கடந்தால் வரலாறு மறந்து போகுமாம்
வரலாறு மிகவும் முக்கியம் மங்குனி !!

சாதி மதம் இனம் மொழி நிறம் என்ற குட்டிச்சுவற்றை உடைத்தெறிந்து
மனிதம் எனும் அகண்ட அன்பு ராஜ்ஜியத்திருக்கு வா நண்பனே!!

மனிதனால் முடியாதது எதுவுமில்லை!!
மனிதனாய் இருப்பதை தவிர !!
மனிதனாக முயற்சி செய்!!

[இதுகாறும் எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் மன்னர்களின் வரலாறேயன்றி பாமர மக்களின் வரலாறு அல்ல]

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: Dong லீ on January 26, 2016, 06:56:15 PM
யுத்த களமாய்
நித்தம் ரணமாய்-என் நாட்டின்
ரத்த எல்லைகள்
சத்தங்கள் இடியாய்
குண்டுகள் மழையாய்-பொழிந்திடும்
தீவிரவாதிகள் -அதிலும் கூட
அச்சமில்லை அச்சமில்லை
பாரதியார் வீர தமிழ் கவிதையாய்
என் ராணுவ நெஞ்சம்
தத்தளித்து பிழைத்திருக்க கூடும்!!

ஆனால் என்
வீர தமிழ்நாட்டில் -நான்
சைக்கிள் மோதி கூட
செத்துவிட கூடும் !!
அவ்வளவு சூழ்ச்சிகள்
சூழ் தமிழ்நாடு இன்று!!
தமிழனின் முதல் எதிரி
தமிழனே !!

சாதிக்க துடிப்பவன்
தமிழனாய் இருப்பின்
'' அவன் அதுக்கெல்லாம் சரிபட்டு
வரமாட்டான் '' என
மட்டம் தட்டும் செய்திகள்
பரவுவது இன்னொரு தமிழனின்
வாட்சப்ப் வாயிலாகவே !!

'மனிதாபிமானம் கொண்டவன் எல்லாம்
வெறும்  மனிதன்
சூது சூழ்ச்சி பொய் பித்தலாட்டம்
என்றிருப்பவன் எல்லாம் தமிழன் '
அது சரி -
கலாம் சுந்தர் பிச்சை
போன்றோர் இந்தியர்கள்!.
மீன் பிடிக்க சென்று
கைதானால் தமிழன்!.
என்று சொல்லும் நாட்டில்..
அது சரி தான்

"தமிழன் தம்பட்டம் அடிப்பவன்"
வந்தாரை வாழ வைத்து -
தான் கட்டிய கோட்டைக்கு
100 ஆண்டுகள் பிறகு வந்து
ஆட்சி புரிந்த சுல்தானின் பெயரை
இன்றும் தாரை வார்த்து நிற்கும்
தமிழன்!! -
தான் பெற்ற 1000 வெற்றிகளில்
ஒரு சிலவற்றை கூட வெளியில்
உரைக்க உரிமை இல்லாத நாட்டில்
எப்படி வெற்றிகளை
பெருமையாக பேசலாம்!!

'நீங்க எஸ் எஸ் எல் சி  பெயில்
நான் எல் கே ஜி  பாஸ் ' என்பதை போல
1000 வெற்றி இருந்தாலும்
1 தோல்வி அடைந்த தமிழன்
'வெற்றியை பற்றி பேச அருகதை இல்லை'
என சக தமிழனே கூறும் நாட்டில்..
வெற்றி என வாய் திறந்தால்
'தமிழன் தம்பட்டம் அடிப்பவனே '!!

சோழ பாண்டிய மன்னர்கள்
உலகுக்கே கற்று கொடுத்த
தொழில்நுட்பங்கள் பல !!
அந்நியர் நம் நாடாண்டதை
முதலில் எதிர்த்தவன் தமிழனே !!
மறைக்கப்பட்ட வரலாறுகள் பல பல !!
மறக்கபடாத சில வரலாறுகளை
பெருமையாய் பேசுவது
தம்பட்டம் என்றால்
என் தம்பட்டம் தொடரும் !!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 088
Post by: ReeNa on January 26, 2016, 10:47:21 PM
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
என்று வாழ்ந்த நம் முன்னோர்கள் .,,
அவர்கள் சிந்திய ரத்தத்தில் விளைந்தவர்கள் நாம் ..
அவர்கள் தந்த சிவந்த பூமிதான் இது .,,
இதை காப்பது நமது கடமை .,,

அவர்களின்  பாதசுவடுகளில் நாம் கால் பதிப்போம் .,,
அவர்களின் வீரத்தை கற்போம் .,,
அவர்களின் கலையை கற்போம் ..
பாட்டு திறத்தால் விடுதலை வேட்கை ஊட்டிய
பாரதியை நினைவு கொள்வோம் ..
அச்சம் இல்லை! அச்சம் இல்லை !
என்று பாடியே வீறு கொண்டு எழுவோம் !

மௌரியன் என்ன ?மொகல் என்ன?
திப்பு என்ன?வெள்ளையன் என்ன ?
தமிழனின் அடையாளம் தனி அடையாளம் !
நோய் வாய் பட்ட தமிழனை வென்ற கதை
என் சந்ததிக்கு தேவை இல்லை .,,
வீரத்தை சொல்லுவோம் .,,
வென்றதை சொல்லுவோம் .,

என் தமிழுக்கும் தமிழனுக்கும்  வீரம் உண்டு
நேர்மையான தமிழன் ., சூட்சினால் வீழ்ந்து போனான்
அன்றும் வீழ்ந்தான் ., இன்றும் வீழ்ந்தான் .,
பழம் கதை பேச நான் வரவில்லை .,,
தமிழனை இழித்தும் பழித்தும் பேசும் சுபாவம் விடு

ஒரு நெப்போலியன் படை நடத்தினான் ..
ஒரு மாலிக்காபூர் படை நடத்தினான் .
ஒரு அலக்சாண்டர் படை நடத்தினான்
ஒரு கிட்லர் படை நடத்தினான் ..
ஒரு செகுவீரா போராடினான் ...
ஒரு பிரபாகரன் போராடினான் .,

என் மண்ணும் ., என் இனமும் காக்க
ஒரு தலைமை வேண்டும் .,,இகழ்ச்சி விடு
தலைமை ஏற்க வா.,, மகுடம் சூட்ட வா !