Author Topic: வீட்டுத் தரைகள் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...  (Read 653 times)

Offline kanmani

பொதுவாக வீட்டில் உள்ள தரைகள் நன்கு அழகாக பளிச்சென்று இருப்பதற்கு தினமும் வீட்டை பெருக்குவது, துடைப்பது போன்றவற்றை செய்து வருவோம். ஆனால் அவ்வாறு சாதாரணமாக வெறும் நீரை மட்டும் பயன்படுத்தி, வீட்டை துடைப்பதற்கு பதிலாக, ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை சுத்தப்படுத்தி வந்தால், வீடு பளபளப்புடன் இருப்பதோடு, உடலும் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து, வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். அத்தகைய இயற்கைப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் உள்ள தரையை துடைத்து, வீட்டை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர்:

இது ஒரு சிறந்த வீட்டில் உள்ள தரையை சுத்தப்படுத்தும் ஒரு கலவை. அதற்கு சூடான நீரில் வெள்ளை வினிகரை ஊற்றி கலந்து, வீட்டை துடைத்து வந்தால், தரையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் அழிந்து, தரையும் பளபளக்கும். எனவே இந்த முறையைப் பயன்படுத்தி தரையை சுத்தப்படுத்தலாம்.

வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர்:

எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, தரையை சுத்தப்படுத்தி மின்னச் செய்வதில் சிறந்தது. மற்றொரு பக்கம் இதில் உள்ள வினிகரும், அத்தகைய தன்மையை கொண்டது. இந்த முறைக்கு வினிகர், எலுமிச்சை சாற்றை தண்ணீரில் ஊற்றி கலந்து, மாப் கொண்டு வீட்டை துடைத்தால், தரையில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்குவதோடு, வீடும் நன்கு மணத்துடன் இருக்கும். குறிப்பாக இந்த முறையை மரத்தாலான தரையில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் எலுமிச்சை மற்றும் வினிகர் மரத்தாலான தரைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

வன்மரத்தாலான தரைக்கான கிளீனர்:

வீட்டின் தரையானது வன்மரத்தால் செய்யப்பட்டிருந்தால், அதனை அழகாக மின்னச் செய்ய ஆழிவிதை நெய் அல்லது ஹெல்த் ஃபுட் ஸ்டோர்களில் கிடைக்கும் காய்கறி சோப்பை வாங்கி, அதனை எலுமிச்சை சாறு மற்றும் பெப்பர்மிண்ட் டீயில் கலந்து, சூடான நீரில் அவற்றை சேர்த்து தரையை சுத்தம் செய்தால், தரையானது பளபளக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்:

இது மற்றொரு நேச்சுரல் கிளீனர். பொதுவாக பேக்கிங் சோடா கடினமான கறைகளைப் போக்கவும், யூகலிப்டஸ் ஆயில் பாக்டீரியாக்களை அழிக்கவும் வல்லது. எனவே இந்த கலவையைப் பயன்படுத்தி, வீட்டின் தரையை சுத்தம் செய்தால், வீட்டின் தரையில் உள்ள கறைகள் நீங்கி பளபளப்பதோடு, வீடும் நறுமணத்துடன் இருக்கும்.

இவையே வீட்டின் தரையை ஜொலிக்க வைக்கும் நேச்சுரல் கிளீனர்கள். வேறு ஏதாவது முறை உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.