Author Topic: வேர்க்கடலை வெண்ணெயின் நம்பமுடியாத பயன்கள்!!!  (Read 640 times)

Offline kanmani

நட்ஸ் வகைகளில் ஒன்றான வேர்க்கடலை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, அதனால் செய்யப்பட்ட வெண்ணெய் சாப்பிட மட்டுமின்றி, ஒருசில வீட்டுப் பராமரிப்பிற்கும் உதவியாக உள்ளது. இன்றைய காலத்தில் வீட்டை சுத்தமாக பராமரிப்பது என்பது எளிதான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் உண்ணும் உணவுப் பொருட்களும் வீட்டை சுத்தப்படுத்தப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

அந்த வகையில் ஒன்றான உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வேர்க்கடலை வெண்ணெய், வீட்டுப் பராமரிப்பில் எவ்வாறு உதவியாக உள்ளது என்று பார்ப்போமா!!!

லேபிள்களை நீக்க...

அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான், கடைகளில் இருந்து வாங்கும் பொருட்களில் ஒட்டியிருக்கும் லேபிள்களை சரியாக நீக்க முடியாமல் இருப்பது. பல நேரங்களில் பாதி லேபிள்களையே நீக்க முடியும். இவை அந்த அழகான பொருட்களின் அழகையே கெடுத்துவிடுகிறது. மேலும் சில சமயங்களில் அந்த லேபிள்களை எடுக்கிறோம் என்ற பெயரில் பொருட்களில் கீறல்களை ஏற்படுத்திவிடுகிறோம். எனவே இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காண, வேர்க்கடலை வெண்ணெயை லேபிளின் மீது தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த லேபிளை எடுத்தால், எளிதில் வந்துவிடும்.

உயவுப் பொருளாக...

அனைவரது வீட்டிலும் இயந்திரங்களில் இருக்கும். சில சமயங்களில் இயந்திரங்களின் இடுக்குகளில் துரு பிடித்துக் கொண்டு, சப்தத்தை எழுப்பிக் கொண்டே இயந்திரமானது இயங்கும். எனவே அத்தகைய துருக்களை நீக்கி, பழைய இயந்திரத்தை புதியது போல் இயங்க வைப்பதற்கு, துரு உள்ள இடங்களில் வேர்க்கடலை வெண்ணெயை தடவினால், இயந்திரமானது நன்கு இயங்கும்.

தோல் பொருட்களை சுத்தப்படுத்த...

தோல் பொருட்களை சுத்தப்படுத்துவதற்கு, வேர்க்கடலை வெண்ணெயை விட சிறந்த பொருள் எதுவும் இல்லை. அதிலும் இந்த வெண்ணெயை லெதர் ஷோபாக்கள் மற்றும் பல பொருட்களில் உள்ள அழுக்குகளைப் போக்கப் பயன்படுத்தினால், அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

சிடி மற்றும் டிவிடிக்கள்...

சில சமயங்களில் சிடி மற்றும் டிவிடிக்களில் உள்ள கீறல்களால் பாட்டுக்கள் மற்றும் திரைப்படங்கள் சரியாக தெரியாமல் இருக்கும். அப்போது அதனை உடனே தூக்கிப் போடாமல், வேர்க்கடலை வெண்ணெயை அவற்றில் தடவி, காட்டனால் துடைத்துவிட்டு, பின் போட்டால், சிடி மற்றும் டிவிடிக்கள் நன்கு செயல்படும்.

சூயிங் கம்களை நீக்க...

நிறைய குழந்தைகள் சூயிங் கம்களை சாப்பிட்டு, அதனை வீட்டில் ஆங்காங்கு ஒட்டியிருப்பார்கள். அப்போது அத்தகைய பசைகளை போக்க, முதலில் அந்த பசைகளை முடிந்த வரையில் கைகளால் எடுத்துவிட்டு, பின் அங்கு சிறிது வேர்க்கடலை வெண்ணெயை தேய்த்து எடுத்தால், எளிதில் அங்குள்ள பசையானது முற்றிலும் நீங்கிவிடும்.

இவையே வீட்டுப் பராமரிப்பில் பயன்படும் வேர்க்கடலையின் நன்மைகள்.