Author Topic: விளம்பரங்கள்  (Read 2768 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
விளம்பரங்கள்
« on: December 02, 2011, 09:59:54 PM »
விளம்பரங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையிடையே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை என்று ஒளிபரப்பாகும் விளம்பரங்களின் ஆக்கிரமிப்பை கவனிக்கும் போது ஒரு தனியான கவனம் இவற்றின் மீது செலுத்தப்படுகிறதோ இல்லையோ கோடிகள் புரளும் இந்தத் தொழிலில் பல லட்சகணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் நிகழ்வாகவும் இருந்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

இந்த விளம்பரங்களினால் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதா என்பது தெரியவில்லை, ஆனால் அந்த குறிப்பிட்டப் பொருள் தற்போது விற்ப்பனையில் உள்ளது என்கின்ற தகவல் அறிந்துகொள்ள மட்டுமே விளம்பரங்கள் உதவி வருகின்றன.

தரமான பொருள்களுக்கு விளம்பரம் அவசியம் இல்லை என்பதும் உண்மை. விளம்பரப்படுத்தாத பொருட்களும் விற்ப்பனையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை. விளம்பரங்களின் மூலம் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதில் தள்ளுபடி இருக்கலாம் என்பதும் சிலரது கருத்து.

இத்தனை கோடிகளை செலவழித்து விளம்பரங்களை உருவாக்குவதைவிட நம் நாட்டிலிருக்கும் குடிசை பகுதியில் உள்ளவர்களுக்கு சாதாரண வீடு கட்டி கொடுக்கலாம். அவர்களின் வாழ்வாதாரங்களை சீர் செய்ய வேறுவகையான உதவிகளை செய்யலாம்.

விளம்பரங்களில் சில விளம்பரங்கள் நன்றாகவே இருந்தாலும் திரும்பத்திரும்ப ஒரு நாளைக்கு எல்லா அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகும் போது இம்சை தாங்கிக்கொள்ள இயல்வதில்லை. சிலருக்கு விளம்பரநேரம் இடைவேளை போன்று பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

ஆளும் கட்சி பல நல்ல காரியங்கள் செய்ததில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் முக்கிய வீதிகளில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது போன்று தொலைக்காட்சியிலும் ஓரளவு கட்டுபடுத்தப்படுமானால் நிகழ்ச்சிகளை சற்று நிம்மதியுடன் கண்டுகளிக்கலாம்