Author Topic: திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?  (Read 2655 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?


திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களால் நாம் சூழப்பட்டிருப்பது. த்ருஷ் எனில் பார்த்தல். நம்மை சிலர் நோக்கும்போது நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டார்கள் எனில் அவை நம்மை தாக்கக்கூடும். தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள்கூட பாசிட்டிவ் திங்கிங், நெகட்டிவ் திங்திங் என எண்ணங்களின் தன்மைகளைப் பிரித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் இப்படித்தான் நினைக்கவேண்டும் என்று நாம் கட்டளை இடமுடியாது. எனினும், மழை பெய்தால் நாம் ஒரு குடையை பிடித்துக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்கிறோமோ, அதுபோன்று நமது புருவ மத்தியில் தூய மஞ்சளினால் ஆன குங்குமத்தை வைத்துக் கொள்ளுதல், பெண்கள் சிறப்பாக மஞ்சள் தேய்த்து நீராடுதல், வீட்டு நிலைக்காலில் மஞ்சள் போன்ற மங்கள சின்னங்களை வைத்தல், பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் மாற்று எண்ணம் வருவதுபோல் நமது வீட்டுவாசலில் பொம்மைகள், படங்கள் வைப்பது, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை வைப்பது இப்படி பல வழிமுறைகள் தீய த்ருஷ்டியை போக்குவதற்கும், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.

தந்திர சாஸ்திரங்களிலும் பெரியோர்களின் பழக்க வழக்கங்களினாலும் அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வழக்கங்களிலும் உள்ளவற்றைக் கடைப்பிடிக்கலாம். இவற்றைத் தவிர நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டியது கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருப்பது, எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் நாம் தூய எண்ணத்துடன் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் சூரியனைக் கண்ட பனி போல எப்படிப்பட்ட தீய சக்திகளும் நம்மை அண்டாத வண்ணம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்