Author Topic: தானாகவே விபத்தை தடுக்கும் பைக்  (Read 2245 times)

Offline kanmani

 தானாகவே விபத்தை தடுக்கும் பைக்
(automatic accident prevention bike)
தற்போது வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக சொல்வதானால் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று உயிரைவிடுவது மிகவும் பரிதாபத்துக்குரிய செயலாகும்.

ஒரு இளைஞர் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கிவிட்டாலே அவர் ஹீரோவாகி விடுகிறார். நெடுஞ்சாலைகளில் அவர்கள் செல்லும் வேகம், சில சமயம் சாகசங்கள் செய்ய முயற்சி மேற்கொள்ளும்போது வாகனம் விபத்துக்குள்ளாகி விலை மதிப்பற்ற உயிரை விட வேண்டியிருக்கிறது. இவர்கள் பாதுகாப்புக்காக தலைவக்கவசம் (Helmet) அணிவதையே கவுரவ குறைச்சலாக எண்ணுகிறார்கள்.

விளைவு, நீண்ட காலம் பூமியில் வாழ்ந்து சாதனைப்படைக்கவிருந்த மதிப்புமிக்க உயிரைவிட்டு விடுகிறார்கள்.

இவர்களையெல்லாம் சொல்லி திருத்த முடியாது என்று எண்ணியோ இந்த நிறுவனம். இவர்கள் தயாரித்திருக்கும் பைக்கை பாருங்கள்..

மிகவும் பாதுகாப்பான முறையில் விபத்தை தடுக்கும் வித்த்தில் ஒரு பைக்கை உருவாக்கியிருக்கிறார்கள்.

கிட்டதட்ட Mini Car போன்று தோற்றமளிக்கிறது. முற்றிலும் மூடப்பட்டு இந்த பைக் தயாரிக்கபட்டுள்ளது.

சான் பிரான்ஸ்கோவில் அமைந்துள்ள LIT MOTORS நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது.

மூடிய நிலையில் உள்ள இந்த பைக்கானது, பைக் எந்த நிலையில் சென்றாலும் தானாவே தனது நிலையை சமநிலைப்படுத்திக்கொள்ளும்(Automatic) என்பதே இத்தாயாரிப்பின் சிறப்பு.  இதனால் பைக்கானது விபத்திலிருந்து முற்றிலும் காப்பாற்றப்படுகிறது.