Author Topic: போரின் போது எதிரிகளைக் கொல்லும் ராணுவ வீரருக்கு தோஷம்/பாவம் ஏற்படுமா?  (Read 2757 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவம் உள்ளது. இதில் பணியாற்றும் வீரர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிகின்றனர். அப்போது பணி நிமித்தமாக சிலரைக் கொல்ல நேரிடுகிறது. இது போர் நியதிகளின்படி நியாமானது என்றாலும், ஒரு உயிரைக் கொன்ற வகையில் அவருக்கு பாவம்/தோஷம் ஏற்படுமா?

பதில்: எதிரிகளைக் கொல்லும் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் ராணுவ வீரர்கள். எனவே, அதனைப் பாவமாகக் கருத முடியாது. இதற்கு வேறு உதாரணம் கூற வேண்டுமென்றால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றும் அரசு ஊழியருக்கும் பாவம் சேராது.

இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 6க்கு உரியவர் அதே இடத்தில் இருந்தாலும், 8க்கு உரியவர் உச்சமாகி இருந்தாலும் சட்டத்திற்கு எதிராக நடப்பவர்களை அழிக்கக் கூடிய ஆற்றல் உள்ள பதவிகள் தேடி வரும்.

காவல்துறையில் உள்ள சிலரின் ஜாதகங்களைப் பார்த்தால், அவர்களுக்கு செவ்வாய் வலுவாகவும், லக்னாதிபதி சிறப்பாகவும் இருக்கும். இவர்களில் சிலர் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுவார்கள். சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படுபவர்கள் இதுபோன்ற அதிகாரிகளிடம் சிக்கி உயிரிழப்பார்கள்.

இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் அப்பாவிகளைக் கொல்வதில்லை. எனவே இவர்களுக்கு பாவம் அல்லது தோஷம் ஏற்படாது.