FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 01, 2017, 10:12:04 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: Forum on October 01, 2017, 10:12:04 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 161
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/161..png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: JeGaTisH on October 02, 2017, 01:34:35 AM
விண்ணில் பறக்கும் காகிதமே
என் கவிதையால் உனக்கு உயிரூட்டுகிறேன்

பட்டம் விட்ட பருவத்தை
விட்டம் பார்த்து சிந்தித்தேன்
சிறு பருவத்தில் நான்  விட்ட பட்டம்
இன்று  என் கண்முன்னே கனவாகி மறைகிறது. .

என் கைகளால் செய்த பட்டம் காற்றின் வசமானது
அதை மீற்றெடுக்க என் கைகளோ தள்ளாடியது.

எனது ஆசைக்காக உன்னை நீ அழித்தாய்
உன்னை உருவாக்கியவன் நான்
என் மனதை நீ அறிந்துகொண்டாய்
உன் மனதை நான் அறியேனே ?

பட்டம் விடத்  துடிக்கின்றேன்
நூல்  அறும்போது  தவிக்கின்றேன் .
வியர்க்க   வியர்க்க செய்த பட்டம்
விண்ணில் சிதறும்போது  துடிக்கின்றேன் 

காற்றோடு காகிதங்கள் கதை பேசுதடி
நான் செய்த காகிதமோ என்னோடு விளையாடுதடி .
நீ பறந்தாய் வானோடு
நான் மிதந்தேன் உன்னோடு
இருவரும்  பேசினோம்  காற்றோடு நம் கதையை. .......

நானும் பறக்கிறேன் வாழ்கை  என்னும் காற்றோடு
அங்கும் இங்குமாய் ஆயிரம் பிரச்சனைகள்.
அப்போது நினைத்தேன் உன்னை அச்சத்தோடு .
வாழ்கை என்னும் நூல் அறுபட்டுவிடுமோ என்று ?
 
என்னை பிரிவதால் உனக்கு சோகம்
உன்னை பிரிவதால் எனக்கு சந்தோசம் 
இது காற்றின் சதியோ இல்லை என் மனதின் பீதியோ  அறியேனே??


விட்டத் தில் பறந்த  பட்டம் அதை
எட்டி பிடிக்க  எண்ணி  துள்ளி எழுந்த  வேளை
பட்டமது  கானல் நீராகியதோடல்லாமல்
என்  கனவும்   பறந்து போனதுவே
 


                                                             நன்றி      
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: JeSiNa on October 02, 2017, 04:24:29 PM
அந்தி சாயும் மாலை பொழுது
பறந்து செல்லும் பூச்சியின் ஊடே
மனம் சிறகடிக்க பட்டம் விட்ட
பள்ளிப்பருவ நாட்கள்...

சின்னஞ்சிறு பருவங்களை நினைத்து
பார்க்கையில் அந்த காலங்கள் மீண்டும்
என் வாழ்வில் வராதா என்று என் நெஞ்சம்
ஏங்குகிறது...

இரவு பகல் பாராமல்...பசி மறந்து
தோழியோடு பட்டம் விட்டு
உன் பட்டம் உயரமா
என் பட்டம் உயரமா
என போட்டியிட்ட தருணங்கள்..

என் பட்டத்தை கிழிக்க
அவள் செய்யும் தந்திரங்கள்
அவள் கிழிக்கும் முன் என் பட்டத்தை
காப்பாற்ற நன் செய்த முயற்சிகள்
வீணடைந்து போன பின்..

குடுமியை பிடித்து சேற்றில் புரண்டு
சட்டையை கிழித்து
சண்டை இட்டு சற்றே நேரத்தில் மறந்து
கட்டியணைத்து கடலை மிட்டாய் வாங்கி உண்டு
மகிழ்ந்த நாட்கள் ...

அம்மாவின் திட்டையும் அமிர்தம் போல்
இன்பமாய் இளித்துக்கொண்டு
வாங்கிய தருணங்கள்...

புன்னகைத்து குறும்புகள் செய்து
சிட்டுக்குருவிபோல் சுற்றி திரிந்த
நாட்கள் பல கண்ணின் ஓரம்
கண்ணீராய் வந்து போகின்றது..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: VipurThi on October 03, 2017, 01:16:37 PM
படித்து பட்டம் வாங்கியவர்கள்
பட்டதாரிகளாகும் முன்பே
பட்டம் விட புத்தகங்களை படித்து
கிழித்த பட்டதாரிகள் நாங்கள்

எல்லை இல்லா வெட்டவெளிகள்
வானின் உச்சி தொடும் காத்தாடிகள்
வண்ண வண்ண காகிதங்கள்
எண்ணில் அடங்கா சந்தோஷங்கள்

காற்றினிலே கை அசைத்திடும்
காகித காத்தாடிகள்
கண்டு களிப்பினிலே குதூகலிக்கும்
செல்ல நண்பர்கள்

போட்டி போட்டு அறுந்து போன
பட்டங்களை பொறுக்கி
பொழுது சாய வீடு சேரும்
மழலைகள் நாங்கள்

படிக்கச் சொல்லி அன்னை
பொறுப்பாய் கண்டிப்புடன் இருக்க
கவனமாய்  கிழிந்த பட்டத்தை
ஒட்டுகையிலே கள்வனென மாட்டி
மண்டையிலே கொட்டு வாங்கி
சமாளித்த பால் வடியும் முகங்கள்

இரவு வாங்கிய கொட்டுக்கள்
எல்லாம் மறந்து போக மீண்டும்
காற்றை கிழித்து காத்தாடி விட
இதோ ஓடிக்கொண்டிருக்கிறோம் 
உசைன் போல்ட் கணக்காய்.....

                      **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: பொய்கை on October 04, 2017, 01:05:22 AM
பட்டம் விட பசை தொட்ட கையும் காஞ்சு போச்சு
பட்டம் கொடுத்த பல்கலையும் இப்போ ஓஞ்சு போச்சு

பட்டம் வான் தொட நூலும் கொறஞ்சு போச்சு
பட்டம் வாங்க படித்த நூலும் மறந்து போச்சு

பட்டம் பறந்திடவே அதன் வாலும் நீளமாச்சு
பட்டம் வாங்க நான் படிக்க  வெகு காலமாச்சு

பட்டம் விட காற்றும் இப்போவெல்லாம்  கொறஞ்சு போச்சு
பட்டம் வாங்கினாலும் வேலை இல்லைனு தெரிஞ்சு போச்சு

பட்டம் விட்ட சிறுசு எல்லாம் மைதானத்தில்  ஓடிப்போச்சு
பட்டம்  வாங்கிய இளசு எல்லாம்  மதுக்கடையில்  கூடி போச்சு

பட்டம் விட்ட காகிதம் ஜி எஸ் டி யில் விலையேறி போச்சு
பட்டத்தை பட்டம் விடும் காலம் இப்போ வந்தாச்சு

பட்டம்  விட செலவு செய்தேன்  என்பெயரோ ஊதாரி
பட்டம் படித்திட செலவு செய்தேன் என்பெயரோ  பட்டதாரி

பட்டத்தை விட்ட நானும் பட்டத்தை வாங்க போனேன்
பட்டத்தை வாங்கி நானும் பட்டம் விட வந்தேன் ...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: SweeTie on October 05, 2017, 06:35:06 PM
வானம் முட்ட பறக்கும் பட்டம் 
வால்  அறுந்து  பறக்கும் பட்டம் 
சுழன்று சுழன்று  பறக்குதுடா
ஒடுங்கடா .... புடியுங்கடா...
சீக்கிரமா  புடியுங்கடா ….

கொக்குப்பட்டம்  குருவி பட்டம்
நீண்ட வாலு  பாம்பு பட்டம்
சட்டை போட்ட  பொம்மை பட்டம்
வானவில்லு போல பட்டம்
வளைஞ்சு வளைஞ்சு பறக்கும் பட்டம்


வெட்ட வெளியில் பட்டம்விட்டு
பரவசமாய்  வாழ்ந்த  காலம்
பட்டம் வாங்கி  வேலை தேடி
படி படியாய்  ஏறுகிறோம்
படிப்புக்கேற்ற வேலை  இல்லை
வேலைக்கேற்ற  கூலி இல்லை .
.

பறந்து பறந்து  போன  பட்டம்
பாதி வழியில்  கவிழ்ந்து  போச்சு
பறந்து பறந்து  காசு சேர்த்து
தேக சுகத்தை   மறந்து போனான்
உண்ணாச் சொத்து  மண்ணாகிப்போய்
பாயில்  படுக்கையாகிப் போனான்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: joker on October 07, 2017, 09:40:29 PM
சின்னஞ்சிறு வயதில்
துள்ளி திரிந்த பருவத்தில்
பறவை போல் வானில்
சிறகடித்து பறக்க ஆசை கொண்டேன்

ஒரு நாள் வானில் வண்ண வண்ண நிறங்களில்
புது புது வடிவங்களில் பறவைகள் போல்
பறக்கும் பட்டம் கண்டேன்

நூல் கொண்டு காற்றில் பறக்கும் பட்டத்தை
கட்டுபடுத்தும் அழகு கண்டேன்

அதை பிடிக்க ஆசை கொண்டு சிறிது நேரம் பிடிக்க
கேட்டேன் ஒரு அண்ணனிடம் தர மறுத்தார்
சிறுவன் நீ விட்டு விடுவாய் என

அப்பாவிடம் புது பட்டம் வாங்கி தர கேட்டேன்
திட்டு தான் வீழ்ந்தது ,

அம்மா கடைக்கு அனுப்ப
மிஞ்சும் சில்லறைதனை யானை உருவ
உண்டியலில் சேமித்து வைத்தேன்

உறங்காமல் அது நிரம்பும் வரை சில நாள் உறக்கமும்
தொலைத்தேன்

ஒருவழியாய் நிரம்பிய உண்டியலை உடைத்து
சில்லறைகளை எண்ணி பார்த்தால் சிறிது பணம் குறைந்தது,
தயங்கி தயங்கி அம்மாவிடம் கெஞ்சி மீதியை
வாங்கி ஓட்டம் எடுத்தோம் பட்டம் வாங்க

என்ன வண்ண பட்டம் வேணும் கடைகாரன் கேட்க
சிகப்பு வண்ணம் கேட்டு வாங்கி நூலும் வாங்கி
பட்டதில் என் பெயரும் எழுதி , நூல் கோர்த்து
பறக்க விட்டேன் வானுயர

என் ஆசைகள் தாங்கி பறந்தது வானில் என் பட்டம்
விளையாட்டிலும் உண்டல்லோ வஞ்சம்

வஞ்சம்தனை  மனதில் வைத்து நஞ்சுதனை  நூலில் தடவி
பட்டம் விட்டான் ஒருவன்

வானுயர்ந்த  என் பட்டம் அருகில் வந்தது அவன் பட்டம்
என் நூலை உரச என் நெஞ்சம் அறுந்தது, என் நூலை போல்,
என் பட்டம் திசை மாறி பறந்தது எங்கோ விழுந்தது

அறுந்து விழுந்த பட்டம்தனை பிடிக்க ஓடியது ஒரு
வாண்டுகள் கூட்டம்

பலநாள் ஆசை தேக்கி வைத்து வாங்கிய பட்டம்
ஒரே நாளில் வானில் பறந்து விழுந்தாலும்,
கல்லூரி பட்டம் வாங்கிய பிறகும் மனதில்
என்றும் பசுமையாய் பறந்து கொண்டுதானிருக்கிறது

*****ஜோக்கர் *****

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 161
Post by: KaBaLi on October 09, 2017, 01:35:36 AM
அந்திமாலை பொழுதில் கூட்டம் கூட்டமாய்
சின்ன சின்ன குருவிகளை போல் கூடின பட்டங்கள்

வண்ண வண்ண ஓவியமாய் ஒய்யாரமாய்
விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல் பறக்கிறது பட்டம்


நாலு பக்கமும் துள்ளி குதிக்கும் பட்டம்
நூல் இருக்கும் வரை பறக்கும் பட்டம் 

வளைந்து வளைந்து பறக்குற பட்டமாக இருக்க ஆசை
உயிரமாய் பறக்குற பட்டமாக இருக்க ஆசை

நான்கு சோறுகள் பசையாக
நான்கு குச்சிகள் பலவண்ணமாக 
ஒன்றாக சேர்த்தால் பட்டம்

தொடும் வானம் மேகமூட்டம்
நூலில் விடும் வண்ணப்பட்டம்

மாடியில் நிண்டு பறக்க விட்ட பட்டம் 
திருடிய பட்டம் கடைசி வரைக்கும் பறந்து கொண்டிருந்தது

பட்டம் விட்டு தினமும் வீட்டில் அடிவாங்கியும்
நண்பர்களோடு சேந்து பட்டம் விட்டு ரசித்தனே

பத்து வயதில் பறக்க விட்ட பட்டம்
இருபது வயதில் கையில் வந்து சேந்தது

யாவும் பார்க்கும் கண்ணுக்கு
யாதும் அழகே - அதை
யானும் பார்த்து இரசித்தேனே....