FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 23, 2017, 11:45:57 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: Forum on December 23, 2017, 11:45:57 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 169
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/169.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: JeGaTisH on December 24, 2017, 01:15:40 AM
பணம் என்னும் காகிதத்தில் அந்தரத்தில் பறக்கிறான்
பாவம்  அவன் மனிதன் என்பதை மறந்து விட்டான்.

பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப் பதில்லை
குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப் பதில்லை

பணம் தேடும் பேராசையில்  பணத்தின் பின் ஒடுகிறாய்
உன் பல உறவுகள் சொந்தங்கள் பறிபோவது தெரியாமல்

கட்டு கட்டாக பணம் சேர்த்தாய்
கட்டையில் போகும் பொது எதை கொண்டுபோவாய்

பணம் இருப்பதால் இன்று நீ  பணக்காரன்
பணம் முடிந்தால்  நாளை  நீ  பிச்சைக்காரன் என்பதை  அறிவாயோ
 
பணமே உலகம்  என நினைக்கும்  மூட மனிதா
அன்பு பாசம்  இவற்றையும் நினைத்து பார்   

அடுத்த வேளை  சோறு இல்லாத ஏழையிடம் கொட்டிக்கிடக்கும் சந்தோஷம்
கோடி கோடியாக பணம் இருக்கும்  பணக்காரனிடம் இருப்பதில்லை .

பணத்தின் பின்னால் ஓடி பிணமாய் வாழ்வதை விட
மனதை நம்பி மனிதனாய் வாழ்.



       நன்றி அன்புடன் ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: Ms.SaraN on December 24, 2017, 02:31:26 AM
எப்படி வருகிறது எங்கிருந்து வருகிறது
இதில் எல்லாம் அக்கறை ஏதும் இல்லை
வந்தால் போதும் வாழ்ந்தால் போதும்
அடுத்தவனை  வீழ்த்தினால் போதும்
என்று பணம் செய்யும் சதியை  அறியாமல்
பணம் ஊதும் சங்கு சத்தம் கேட்டு
அதன் பின்னால் ஓடும் மானிடர்களே
உங்களுக்காக !!!

ஒவ்வொருவனுக்குள்ளும் ஒவ்வொரு  ஆசை
சிலருக்கு காலையில் சூரியனை பார்த்தால் பேரின்பம்
சிலருக்கோ உண்ண உணவிருந்தால் போதும்
இதையெல்லாம் மீறி சிலருக்கோ பேராசை
வானத்தில் பறக்க வேண்டும் கைகளை  விரித்து
ஆனால் விமானத்தில் அல்ல
மனிதனை ஏறி மிதிக்கும் பணத்தின் மேல் அமர்ந்து

பணம் வந்தால் மனிதநேயம்
குப்பை தொட்டியில் ஊசல் ஆடுகிறது 
பெற்ற தாயோ வீட்டை விட்டு வீதிக்கு தள்ளப்படுவாள்
உன் இரத்தத்தினால் ஆனா  உன் குழந்தை
கொஞ்சமும்  மனமின்றி பணத்திற்காக
விலை மாது ஆக்குகிறாய்
இவையெல்லாம் பணம் செய்யும் மாயம்
என்பதை உன் ஆறறிவுக்கு  தோன்றவில்லையோ

வாய் பிளந்து வானத்தில் பறக்க ஆசைப்படாதே
அருகில் இருக்கும் இன்பத்தை பார்
உனக்காக ஏங்கும் உன் உறவை ஏற்றுக்கொள்
காகிதம் தரும் போதைக்கு அடிமை ஆகாதே
பணம் பணம் பணம் என்று
பணத்தின் பின்னால் சென்று பிணம் ஆகாதே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: thamilan on December 24, 2017, 01:01:39 PM
பணமே
நீ இன்றி நானும் இல்லை
நீ இல்லாத போது
என்னை எட்டி உதைத்த கால்கள்
நீ என்னிடம் வந்த பிறகு
என் கால்களில் சாஷ்டாங்கமாக விழுகின்றனவே

நீ என்னுடன் இருந்தால்
இந்த உலகமே
என் கைவசம்
மனித குலமே
உன் வசம்

நீ வெறும் காகிதம் தான்
அந்த காகிதத்தால்
வீட்டையும்  கொளுத்தலாம்
ஏழைகளின் வீட்டு அடுப்பையும்
பற்றவைக்கலாம்
உன்னால் எந்த கோட்டையையும் பிடிக்கலாம் 
எந்த அரசாங்கத்தையும் கவிழ்க்கலாம்

பணமே சில நேரம் நீ
இறைவனின் ஆலயம்
பலநேரம் சாத்தானின் சந்நிதி

நல்ல மனிதர்களையும்
கெட்டவர்களாக மாற்றும் சக்தி
படைத்தவன் நீ
சிலரை தெய்வங்களாக போற்றும்
வல்லமை படைத்தவனும் நீயே

நீ கிடைக்காமல் ஏங்குபவர்கள் பலர்
நீ கிடைத்தும் உன் அருமை தெரியாமல்
பூட்டிவைத்து பூஜிப்பவர்கள்  சிலர்
செலவு பண்ணும் போது தான்
நீ பணம்
பெட்டிக்குள் பூட்டிவைக்கும் போது
நீ வெறும் பிணம்

உன்னிடம் எனக்குப் பிடிக்காத
கெட்ட குணம் ஒன்று உண்டு
இருப்பவர்களிடமே நீ போய்
ஒட்டிக்  கொள்கிறாய்
இல்லாதவர்களிடம் இருந்து
இருப்பதையும் பிடிங்கிக் கொள்கிறாய்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: MaSha on December 24, 2017, 07:23:42 PM
இன்று இருப்பது நாளை இல்லை
உயரே பறக்கும் எதுவாகிலும்
கீழே வந்து தான் ஆகவேண்டும்
இது தான்
இயற்கையின் நியதி
இதை மறந்த மனிதர்கள்
போடும் ஆட்டம்

ஏதும் அளவோடு இருக்கும் வரை தான்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் நஞ்சு
அளவோடு இருக்கும் வரை தான்
காற்றும் மழையும் கடலும்
அளவுக்கு மிஞ்சினால்
உலகையே அழித்துவிடும்
பணமும் அந்த வகையே
கொலை கொள்ளை கடத்தல்கள் எல்லாமே
பணத்தின் அடிப்படையிலேயே நடக்கின்றன

போதைகள் பல உண்டு
மது உண்டாகும் போதை
மாது உண்டாகும் போதை
இவை அனைத்திலும் கொடியது
பணம் உண்டாக்கும் போதை

பணம் அளவோடு இருப்பவன்
பணத்தை ஆள்வான்
பணம் அளவுக்கு மீறினால்
அது மனிதனை ஆளும்
சிலர் பணம் பணம் என்று
நாயாக பேயாக அலைவார்கள் 
ஆனால் அனுபவிக்க மாட்டார்கள்
அவர்கள் வாழ்க்கை
குளிர்காய சுள்ளி பொறுக்குபவனுக்கு ஒப்பானது
சுள்ளி பொறுக்குவதிலேயே
காலம் போய் விடும்
குளிர்காய நேரம் கிடைப்பதில்லை
பணத்தின் பின்னால் அலைபவனும்
அதற்கு ஒப்பானவனே

பணம் சேர்ப்பதை விட கொடுத்து பாருங்கள்
ஒரு ஏழைக்கு கொடுக்கும் போது-அவன்
முகமலர்ச்சியும் ஆத்மார்த்தமான  நன்றியும்
அளவில்லாத ஆனந்தத்தை தரும்
போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: joker on December 26, 2017, 03:56:30 PM
பணம் கையில் இருந்தால் அந்தரத்தில்
தான் பறக்க தோன்றும் -அது அந்த
பணத்தின் குற்றமா ?
இல்லை பணம்வைத்தவனின்
குணத்தின் குற்றமா ?

சின்னஞ்சிறு வயதில் அப்பா தரும்
தினசெலவு  ஐந்து ரூபாயில்

இலந்தை பழவும் ,
பேர் சொன்னாலே எச்சில் ஊரும்
நெல்லிக்காயில்  உப்பும் சிறிது மிளகுபொடியுமிட்டு
நண்பர்களுடன் பகிர்ந்துண்ட நாட்கள்

"எப்போதோ கிடைக்கும் பலாக்காயை விட
இப்போது கிடைக்கும் களாக்காய் மேல் என
வாங்கி தின்ற புளிப்பும் இனிப்பும் கொண்ட
களாக்காய் "

மிச்சம் சிறுது சிறுது பிடித்து தம்பிக்கு பிடித்த
பால் ஐஸ் வாங்கி தந்த மன நிறைவு

இன்று பணம் நிறைய கொடுத்து
பீட்சாக்களும் பர்கர்களும் சாப்பிடுகையில்
வருவதில்லை

வீட்டில் அஞ்சறை பெட்டியிலும்
அஞ்சாறு சின்ன பெட்டியிலும்
அம்மா மறைத்து வைத்து
தேவையான சமயத்தில் வெளிவரும்
அலாவுதீன் பூதம் போல
காத்திட்ட அந்த பணத்திற்கு இணை

வங்கி லாக்கரிலும் ,
மெத்தைக்கு அடியிலும்
தண்ணீர் தொட்டியிலும் சேர்த்து வைத்திருக்கும்
பணம் ஈடாகுமோ ?

அளவாய் இருந்தால்
ஆனந்த களிப்பையும்
அதிகம் இருந்தால்
அச்சத்தில் தவிப்பையும்
தரும் இந்த பணம்

அது பணத்தின் குணமல்ல
அது வைத்திருக்கும் மனிதனின்
குணம்

அளவோடு வைத்திரு
மனிதா
வளமோடு வாழ்ந்திரு ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: AnoTH on December 26, 2017, 04:12:29 PM
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை
எல்லாம் காசுக்குப் பின்னாலடி
குதம்பாய் காசுக்குப் பின்னாலடி
இது குதம்பை  சித்தன் சொன்னது.

காசு இருந்தால் போதும்
எதையும் வாங்கிடலாம் என்று
காசுக்கு விலை போகும்
அரசியல் களம் தானே இன்று

காசுக்காக சொந்த நாட்டின்
வளத்தை விற்று சாகுபடி
ஏதுமின்றி மக்களை சாகும்படி
செய்த ஆட்சி தானே மானம்  கெட்ட
அரசியல் வியாதிகளாலே

நில வளம் நீர்வளம் அனைத்தையும்
அழித்து நகர்வலம் காணும்
நய வஞ்சகர்களாலே 
நாளை உணவின்றி தவிக்கும் நிலை
உருவாகிடும் அதனாலே

காசு இருந்தால் போதும்
பல சாக்குகளை சொல்லி
நீதி முன்னாலும் சூது வெல்லும்
இதற்கிடையில் தவிக்கும் சாமானியனவன்
குரல்  எங்கே வெல்லும் ?

பண்டமாற்று முறை நாம் 
அறிந்த வரலாறு
பணமாற்று முறை
உருவான நிலை தானே இன்று

பண மிதப்பில் விண்ணில் பறப்பவன்
மண்ணை எங்கு பார்குறான்
மண்ணை போற்றும் விவசாயியோ
விண்ணை பார்த்து அழுகிறான்

மலைகளை மரங்களை வெட்டி
பல மனைகளை எழுப்பலாம்
அதன் போலி கண்டு ஏமாறும் நாமும்
சேமித்த  பணத்தையே இழக்கலாம்

பல மிதிகளை வாங்கியும் பணத்தின்
மதிப்பு குறையாது
ஆனால் ஒரே ஒரு தோல்வியால்
பல உயிர்களின் மதிப்பு நிலைக்காது 

பணம் படைத்தவன் எம்மை ஆளலாம்
ஆனால் நல்ல மனம் படைத்தவானே
எமது  தலைவன் ஆகலாம்

பணம் உன்னை அடிமையாக்கும்
 நல்லகுணம்   உன்னை
உலகே போற்ற செய்யும் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: ! Viper ! on December 26, 2017, 10:31:36 PM
சில்லென்ற காலைப்பொழுது
இரண்டாயிரம்   ரூபாய்  தாள்  ஒன்று   
 சில்லறை  மாற்றுவதற்கு  எடுத்துக் கொண்டு
இரண்டு  கடைகளுக்குச்   சென்றேன்

முதலில்  என் பார்வை பட்டது ஓர் ஜவுளிக்கடை
கல்லாவில் இருந்தவரிடம் கேட்டேன் 
சார்  இரண்டாயிரம்   ரூபாய்க்கு  சில்லறை  கிடைக்குமா
தம்பி இப்ப தான்பா கடைய ஓபன் பண்ணிருக்கேன்
இன்னும் போனி ஆகவில்லை என்று கூறினார்

அடுத்தது மளிகைக் கடை
ஒரு வியாபாரம் களைகட்டிக் கொண்டிருந்தது
சில்லறை நிச்சயம் கிடைக்கும்
நம்பிக்கையோடு சென்றேன் கடைக்கு
ஐயா இரண்டாயிரம் ரூபாவுக்கு
சில்லறை கிடைக்குமா
அவரும் சில்லறை இருக்கிறது என்கிறார்
நானும் சந்தோசத்தில் பணத்தைக் கொடுத்தேன்
  தம்பி ஐநூறு ருபாய் தாள் மட்டும் தான் இருக்கிறது
அவர் சொன்ன பதிலைக் கேட்டு
காற்று போன பலூன் ஆனது எனது இதயம்

வழியில் கண்ட ஒரு பிச்சைக்காரனிடம்
இரண்டாயிரம் ரூபாவுக்கு சில்லறை இருக்குமா  பெருசு 
பணம் பதுங்குவது பணக்காரர்களிடமும்
பிச்சைக்காரர்களிடமும் தானே
அவனிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் கேட்டேன்
பெருசோ என்னை எற இறங்க
பார்த்து விட்டு
வங்கியில் இருக்கிறது
எடுத்து தர நேரம் இல்லை
இன்று புதன்கிழமை ஆதலால்
கலெக்க்ஷன் குறைவு
நான் முருகன் கோவிலுக்கு போகிறேன்
நீயும் வருகிறாயா
அங்கே கலெக்ட் பண்ணி தாரேன்
பெருசு என்னை நையாண்டி பண்ணினார்

அவரை ஒரு முறை முறைத்து விட்டு
மோடியையும் குண்டக்க மண்டக்க
என திட்டிக் கொண்டு
என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற
எனது கபாலத்தில் காலிங் பெல் அடித்தது

இரண்டாயிரம் ருபாய் நோட்டை எடுத்துக் கொண்டு
மீண்டும் ஜவுளிக் கடைக்குச் சென்றேன்
சார் எனக்கு ஆயிரம் ரூபாவுக்கு ஒரு சாரி வாங்கணும்
என்னிடம் இருப்பதோ
இரண்டாயிரம் ரூபா நோட்டு தான்

ஜவுளிக்கடைக்காரர் முகம் எல்லாம் பல்லாக சிரித்தார்
தம்பி வாங்க வாங்க
வந்து உட்காருங்க
டேய் சாருக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ்
பலமாக உபசரித்தார்
இருங்க வரேன் சொல்லிட்டு
மளிகை கடைக்கு சென்றேன்

ஆயிரம் ரூபாவுக்கு
மளிகை சாமான்கள் வாங்கணும்
என்னிடம் இருப்பதோ இரண்டாயிரம் ருபாய் நோட்டு
சேன்ஞ்   இருக்குமா
மளிகைக்கடைகாரரின்   முகத்திலோ
ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய
வாங்க தம்பி உட்காருங்க
தங்கபுஸ்பம் தம்பிக்கு ஒரு
டம்ளர் ஜூஸ் கொடு
மனைவிக்கு பறந்தது உத்தரவு

என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா
மனத்துக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிட்டேன்

மிஸ்டர் மோடி நீங்க  மட்டும்
தமிழ் நாடு வந்தா
உங்கள வித்துடுவாங்க இந்ததமிழர்  கேடிங்க

இதை அறிந்த மோடி
கண்முன்னே தோன்றி
 வாட் ஹே தமிழர் ஹே ?
ரைட் ஹே ரைட் ஹே என்று  கூறி மறைந்து விட்டார்

இதை கேள்விப்பட்ட நடிகர் விஷால்
சத்தியம் தர்மம் நியாயம் தோற்றுவிட்டது என்று
சம்மந்தம் இல்லாமல் பிரஸ் மீட்டில்  பேச ஆரம்பித்துவிட்டார் 

நான் சொல்ல வருவதெல்லாம்
மனிதனின் ஆசை 
பணத்துக்காக எதையும் செய்யத் துணியும்
அவனது பேராசை 

மனிதன் மனித நேயத்தோடு வாழ வேண்டும்
மனசாட்சிக்கு  கட்டுப்பட்டு இருக்க வேண்டும்
அடுத்தவர்க்கு உதவி செய்து வாழ்க்கையை பயணிக்க வேண்டும்
எதார்த்தமான வாழ்க்கையை வாழ்ந்து
சந்தோசமாக யாருக்கும் தீங்கு விளைவிக்காமல்
அனுசரிச்சு வாழ்ந்தால் நிம்மதி பெருகும்

நகைச்சுவை கலந்த ஒரு குட்டி அட்வைஸ்ஸோடு     
உங்கள் ftc team வைப்பர்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: SweeTie on December 27, 2017, 09:53:22 AM

சந்துல பொந்துல பூந்து புறப்பட்டு
நாலு தெருவு  கடந்து  முதல் இடம்புடிச்சு
பிள்ளையார் கோவில் முன்னாடி  உக்காந்து
துண்டு விரிச்சு ......அம்மா.....  ஐயா.....
-பிச்சை போடுங்க  மா  ...பிச்சைபோடுங்க யா.
தொண்ட  தண்ணி  வத்தும்வரை கூவி கூவி
நாலு காசு சம்பாதிக்கிற  எங்களை பார்த்து

நாக்கை புடுங்கிற மாதிரி கேக்கிறான்  பாவிமவன்
சா..... இதெல்லாம்  ஒரு பொளப்பா ....
ரெண்டு காலையும்  ரெண்டு கையையும் வைச்சுட்டு
வேல செஞ்சு  பொழைக்கிறத விட்டு
பிச்சை எடுக்கிறீங்களே டா.  வெக்கமா இல்ல..
மூஞ்சில  எச்சில  துப்பாத குறையா கேக்கிறான்

வேல வேல என நாயா  பேயா அலைஞ்சு  புடிச்ச
வேலைய வாங்கிட்டு  ஏமாத்துற  மனுஷங்க
ரூபா  நோட்டுல வானத்துல பறந்தா அவன் பணக்காரன்
2000 ரூபா நோட்டுக்கு   எங்கயும்  சில்லறை கிடைக்காம 
எங்க கிட்ட வந்து சில்லறை கேட்டா அவன் பணக்காரன்
மூணு  வேளையும்  மூக்கு புடிக்க  சாப்பிட்டு   
ஏசி  கார்ல  ஊர  சுத்திவந்தா  அவன் பணக்காரன்

வெள்ளைக்காரன் விட்டுப்போன  ஆங்கிலத்த
அரையும்  குறையுமா  ,முழுங்கி முழுங்கி பேசி  நம்ப தமிழ மறந்து
ஏசி  அறையில  வேர்க்காம வேலை செய்றவன் ஒப்பீசர்
வெயிலும்  மழையும் பார்க்காம அஞ்சுக்கும் பத்துக்கும்
அடிமை  வேலை  பார்த்தா  அவன் கூலியாள்
ஒரு வேளை  வயிற்றை நிரப்ப ஒட்டி உலர்ந்த வயித்தோட
 ரோடுல நிக்கிற நாங்க பிச்சைக்காரன்

காச படைச்ச கடவுள்  கருணைய  படைக்கலயே
மனச படைச்ச கடவுள் அதுல அன்ப  வைக்கலையே
கத்தை  நோட்டுல  மெத்தை விரிச்சு படுக்கிறான்
சொத்து சுகம்  சேர்த்து   சொர்க்கத்தை காணுறான்
பத்து காசு எங்க தட்டுல போட்டு புண்யம் தேடல்ல 
எச்சி கையால காக்கா  கூட விரட்டல்ல
பேருதான் பணக்காரன் .. ஆளோ  சுத்தகருமி. 

 



 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: MyNa on December 27, 2017, 09:58:40 AM
பணம் பணம் பணம்  !!

பணம் கொட்டிக் கிடப்பினும் 
அதைக் கொண்டு வாங்க இயலாத
விஷயங்கள் தான் இன்னும் எத்தனை !!

பணம் கொண்டு கல்வியை வாங்கலாம்
பொது அறிவை வாங்க இயலுமா  ?

பணம் கொண்டு மருந்துகள் வாங்கலாம்
ஆயுளை வாங்க இயலுமா  ?

பணம் கொண்டு உண்ண உணவு வாங்கலாம்
பசியைத்தான் வாங்க இயலுமா ?

பணம் கொண்டு மெத்தை வாங்கலாம்
நித்திரையை வாங்க இயலுமா ??

பணம் கொண்டு இல்லம் வாங்கலாம்
நல்ல இல்லறம்தான் வாங்க இயலுமா ?

பணம் கொண்டு உறவுகளை வாங்கலாம்
உண்மையான அன்பை வாங்க  இயலுமா  ?

பணம் கொண்டு அழகை வாங்கலாம்
இளமையை வாங்க இயலுமா ??

பணம் கொண்டு திறமைகளை விலை வாங்கலாம்
உழைப்பைத்தான்  வாங்க இயலுமா  ?

பணம் கொண்டு பெயரையும் புகழையும் வாங்கலாம்
அதை பேணி காக்கும் ஒழுக்கத்தை வாங்க இயலுமா ??

பணம் கொண்டு பதவியை வாங்கலாம்
நம்பிக்கையையும் மரியாதையையும் வாங்க இயலுமா  ?

பணம் கொண்டு மானம் காக்க ஆடைகள் வாங்கலாம்
பறிபோன மானத்தை மீண்டும் வாங்கத்தான் இயலுமா ?

இவ்வளவு ஏன்.. பணம் கொண்டு கடிகாரம் வாங்கலாம்
நேரத்தை தான் வாங்க இயலுமா ??

வாழ்வதற்கு தான் பணம் தேவையே தவிர
வாழ்வின் தேவையே பணம் அல்ல  ..

குணம் இருப்பவனிடம் பணம் இருப்பதில்லை
பணம் இருப்பவனிடம் குணம் இருப்பதில்லை
இருப்பதைக் கொண்டு வாழ கற்றுக் கொள்வோம்
இருப்பதைக் கொடுத்ததும் வாழ கற்றுக் கொள்வோம்

~ தமிழ் பிரியை மைனா~  
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 169
Post by: பொய்கை on December 27, 2017, 10:36:04 PM
பத்து மாத கருவறை குழந்தை
அன்னையின் வயறு அறுபட்டு
வெளியில் வந்ததும்  மருத்துவன்
பையை நிறைத்த பணமே !

மருத்துவமனையில் பார்க்க வந்தவர்
யாவரும் மதிப்பே தெரியா பிஞ்சு கைகளில்
கொஞ்சிய படியே கொடுத்த பணமே !

காகித வடிவில் கண்டவர் வீழ்ந்திடும்
கசங்கிய நிலையிலும் மதிப்பு குறைந்திடா
கஞ்சனின் கைகளில் கட்டாய் சேர்ந்துடும்
காலனை வென்றிடா வெட்டி பணமே!

கள்ள வழியிலும் வந்திடுவாய்
நல்ல வழியிலும் வந்திடுவாய்
கம்பிக்கு பின்னால் பலரை நிறுத்தும்
காகிதமே உன்பெயர் பணமே !

விண்ணிலும் பறக்கவைப்பாய்
மண்ணிலும் வீழ வைப்பாய்
அரசனை போல வாழவைப்பாய்
அகந்தையில் அவனை வீழவைத்து
ஆண்டி என பேரும் வாங்கவைப்பாய்!

பணமே உன் மதிப்பிழந்தால்
வீழ்ந்திடுவாயே  குப்பையிலே ...
பணத்தால் என்  மதியிழந்தால்
வீழ்ந்திடுவேனே குப்பையிலே ....