வணக்கம் மாஸ்டர்,
பாடல்களால் வென்ற பட வரிசையில் நான் இந்த வாரம் தெரிவு செய்திருப்பது 1989ல் வெளிவந்த தொட்டில் சபதம் எனும் படம், இதில் ராம்கி, சீதா, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருக்காங்க
இந்த படத்துக்கு இசை அமைத்தவர் சந்திரபோஸ்
இந்த படத்தில் மொத்தம் இருப்பாடல்கள் இரண்டுமே துள்ளல் இசைப்பாடல்கள் போலத்தான் இருக்கும்
1) பூஞ்சிட்டு குருவிகளா
2) வண்ணக்கிளியே அன்னக்கிளியே
இதில் பூஞ்சிட்டு குருவிகளா பட்டித்தொட்டியெல்லாம் ஒலித்த வெற்றி பெற்றப்பாடல், பாடலின் துவக்கத்தில் வரும் டிரம் பீட்டை பள்ளி காலங்களின் தட்டி வகுப்பில் அடிவாங்கிய சமயங்கள் எல்லாம் உண்டு, அவ்வளவு பிடிக்கும் அந்த பீட் எனக்கு, இந்த பாடல் எனக்கு இன்னும் நெருக்கமானதுக்கு காரணம், என் மாஸ்டர், டிரம்பட் மணி இதில் வாசித்திருக்கிறார், என் மாஸ்டரையும் பள்ளிகாலங்களையும் மீண்டும் இந்த பாடலை கேட்பதன் மூலம் நினைவுகோர விரும்புகிறேன், இந்த பாடலை எனக்காக ஒலிப்பரப்புங்க மாஸ்டர்