« on: March 31, 2013, 02:41:49 PM »
என் மன வானில் -
FTC நண்பர்களின் மனதிற்கு பிடித்த திரையுலக பிரமுகர்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நண்பர்களே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும்.நிகழ்ச்சி நேரம்:வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு FTC வானொலியில் கேட்க தவறாதீர்கள்.நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் :FTC நண்பர்களின் மனம் கவர்ந்த திரையுலக பிரமுகர்கள்/நட்சத்திரங்கள் பற்றி கீழ் குறிப்பிட்ட வரிசையில் 6 பிரமுகர்களை பற்றியதாக கூடிய அளவில் விளக்கமாக சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.1.திரைப்படம் (Movie) : நண்பர்கள் தங்கள் மனம் கவர்ந்த திரைபடத்தை குறிப்பிட்டு அந்த திரைப்படம் பிடித்ததற்கான காரணங்களை விளக்க வேண்டும். திரைப்படத்தின் கதையமைப்பு , படமாக்கப்பட்ட விதம்,கூறப்பட்டு இருக்கும் கருத்து இப்படி எவற்றை வேண்டுமானாலும் குறிப்பிட்டு அந்த திரைப்படத்திலிருந்து இறுதியில் ஒரு பாடலை விரும்பி கேட்க வேண்டும். 2.கதாநாயகன்(Hero) : நண்பர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த கதாநாயகனை குறிப்பிட்டு அதற்கான காரணங்களை விளக்க வேண்டும். நடிப்பு திறமை,தோற்றம் இப்படி குறிப்பிட்டு , அவர் திறமையாக நடித்த படங்களையோ இல்லை படக்காட்சிகளையோ குறிபிடலாம். இறுதியில் அவர் நடித்த ஒரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை கேட்க வேண்டும்.3.இசை அமைப்பாளர்(Music Director) :நண்பர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த இசை அமைப்பாளரை குறிப்பிட்டு அதற்கான காரணங்களை விளக்கமுடம் குறிப்பிட வேண்டும்.இசையமைப்பாளர் வாங்கிய விருதுகள், திறமையாக இசை அமைத்த திரைப்படங்கள் , சிறப்பு செய்திகள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.இறுதியில் அந்த இசையமைப்பாளரின் இசையில் உங்களின் மனம் கவர்ந்த பாடல் ஒன்றையும் விரும்பி கேட்க வேண்டும். 4.பின்னணி பாடகர்/பாடகி(Background Singer) : நண்பர்கள் தங்கள் மனம் கவர்ந்த பின்னணி பாடகரை பற்றி குறிப்பிட்டு அதற்கான காரணங்கள் குறிப்பிட வேண்டும். பாடும் திறமை ,வாங்கிய விருதுகள் , பாடிய பாடல்களில் கவர்ந்த பாடல்கள்,சிறப்பு அம்சங்கள் என சுவாரஸ்யமான விசயங்களை குறிப்பிடலாம். இறுதியில் அந்த பாடகரின் பாடல் ஒன்றை விரும்பி கேட்க வேண்டும்.5.திரைப்பட இயக்குனர் (Movie Director) : நண்பர்கள் தங்கள் மனம் கவர்ந்த திரைப்பட இயக்குனரை குறிப்பிட்டு அதற்கான காரணங்கள் மற்றும் சுவாரஸ்யமான செய்திகள் , திறமையாக இயக்கிய திரைப்படங்கள் போன்ற தகவல்களை விளக்கமாக குறிப்பிட வேண்டும்.இறுதியில் அந்த இயக்குனர் இயக்கிய திரைபடத்திலிருந்து ஒரு பாடலை விரும்பி கேட்க வேண்டும்.6.நகைச்சுவை நடிகர்/நடிகை (Comedy Actor/Actrss) :நண்பர்கள் தங்கள் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர்/நடிகை பெயரை குறிப்பிட்டு அதற்கான காரணங்கள் மற்றும் சுவாரஸ்யமான செய்திகள்,திறமைகள் ,விருதுகள் என பல அம்சங்களை குறிப்பிடலாம். இறுதியில் அந்த நகைச்சுவை நடிகரின் நகைச்சுவை காட்சி ஒன்றை விரும்பி கேட்கலாம்.கடைசி இரண்டு பகுதிகள் FTC பற்றியதாக அமைய வேண்டும். 7.பொதுமன்ற பகுதி (FTC Forum) : நண்பர்கள் ,பொதுமன்றத்தில் தங்கள் மனதிற்கு பிடித்த பகுதியை குறிப்பிட்டு அதற்கான காரணங்களை விரிவாக விவரிக்க வேண்டும். அதை தொடர்ந்து ஒரு பாடலை விரும்பி கேட்க வேண்டும்.
8.FTC நண்பன் (FTC Friend) :
தங்கள் மனதிற்கு பிடித்த நண்பர்கள் பற்றி குறிப்பிட்டு,சுவையான சம்பவங்கள் ,சிறப்பு குறிப்புகள் ஆகியவற்றை இபகுதியில் விவரிக்க வேண்டும். அதை தொடர்ந்து உங்கள் நண்பருக்கு ஒரு பாடலை விரும்பி கேட்கலாம்.எப்படி இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவது ?இந்நிகழ்ச்சியை செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் மேற்குறிப்பிட்ட 8 பகுதியிலும் 2 நிமிடங்களுக்கு குறையாத வகையில் ஒலிப்பதிவு செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முக்கிய குறிப்பு :நண்பர்கள் தங்கள் நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவுகளில் பின்னணி இசை சேர்க்காது ,தெளிவான முறையில் ஒலிப்பதிவு செய்யும்பட்சத்தில் நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.
« Last Edit: March 31, 2013, 09:30:38 PM by Global Angel »
Logged