Author Topic: தினம் தினம் திருநாளே தினப்பலன் 05.01.2019  (Read 3083 times)

Offline Evil

இன்றைய ராசிபலன்


மேஷம்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர் கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக் கும். உத்யோகத்தில் யாரையும் பகைத் துக் கொள்ள வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள். 


மிதுனம்

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வேலை
யாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்


கடகம்

கடகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.


சிம்மம்

சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்


கன்னி

கன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


துலாம்

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல் படும் நாள்.


தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


மகரம்

மகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.



கும்பம்

கும்பம்: ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை கண்டறிவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


மீனம்

மீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கறை காட்டுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். சாதிக்கும் நாள்.

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால