உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
மலரின் கதவோன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேர தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுதானே, இதழ் முத்துக்குளிதானே
இரவுகள் இதமானதா..
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவை முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே