FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 16, 2021, 10:55:08 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: Forum on March 16, 2021, 10:55:08 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 260

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/260.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: JsB on March 17, 2021, 07:58:32 AM
நான் விரும்பி காத்திருக்கும் என் வாழ்க்கையின் அழகனே...
பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு
ஒருவருக்கொருவர் குறைபாடுகளை ஏற்றுக்கொள்வது
அழகிய திருமணமே....
தனக்கு ஏற்ற, தன்னை முழுவதும் புரிந்து கொண்டு நடக்கக்கூடிய,
மனப்பொருத்தம் நிறைந்த துணை கிடைப்பதோ அரிது
இந்த மாய உலகிலே...அதிலும்
நான் தேடும் என்  காதல் இளவரசனோ புதிது...
இந்த கொரோனா நிறைந்த உலகிலே...


என் வாழ்க்கையின் ஒட்டு மொத்த சந்தோசமே...
ஓர் உடல் ஓர் உயிர் கொண்ட இனிய உறவே...
உன்னோடு நான் ஒட்டி பிறக்கவில்லை...
நம் இருவரும் ஒரே இரத்தமும் இல்லை...
ஒரு தாய் வயிறும் இல்லை...
எங்கோ பிறந்து...எங்கோ வளர்ந்து...ஆளாகி...
எனக்காக பிறந்தவன் நீயடா...
உனக்காக பிறந்தவள் நானடா...என்று
இறைவன் போட்ட முடிச்சில் விழுந்தது
நம் இருவரின் திருமண பந்தம்...

என் உணர்வில் கலந்திட்ட உறவே...
கற்பனை உலகத்தில் உன்னை நினைத்து வரைகிறேன்...
திருமண உறவில் நான் உனக்கென்று
ஆழமாக கட்டி வைத்திருக்கும் காதல் சாம்ராஜ்யத்தை...
அதை யாரால் உடைக்க கூடும்...
என் உடல் ஆரோக்கியமும்... என் மன ஆரோக்கியமும்...
நீ  தானே பேரன்பே...

நம் உறவு  நீடிக்க உன்னிடம் அதிகம் பேசிக் கொள்ள ஆசையே...
உன்னை நன்கு புரிந்துக் கொண்டவளாக இருந்திட ஆசையே...
உனக்குள்ளே நுழைந்து உன்னை தினம்...தினம்
நான் விரும்பி படிக்கும் நாவலாக...நீ இருந்திட ஆசையே...
உன்னை மதித்து , உன் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தவளாக,
உனக்கு பிடித்த ஆசை நாயகியாக மாறிட ஆசையே...
உன் நம்பிக்கையின் பாத்திரமாக நான் மாறிட ஆசையே...
உன்னுடன் எந்த ஒரு ஒளிவு மறைவும்ன்றி பழகிட ஆசையே...
உனக்கு இனிப்பான வாழ்க்கையை
கற்றுக் கொடுக்க ஆசையே...
என்றுமே சலிப்பு தட்டாத வாழ்க்கையை
உனக்கு ஆயுள் முழுதும் தந்திட ஆசையே...
நான் பாதுகாப்பாக உணரகிறவருடன்
வாழ்க்கை முழுவதும் நேசிக்கவும்,வாழ்ந்திடவும் ஆசையே...



இப்படி உன்னையே நினைத்து நினைத்து
ஏங்கும் என்னையும்...
உன்னை உயிருக்கும் மேலாக நேசிக்கும்
என் இதயத்தையும்...
ஒருநாளும் நிக்க வைத்து
உன்னை கேள்வி கேட்க வைத்துவிடாதே
என்னுயிரே...


என்றும் அன்புடன்,

உன் வருகையின் நாளுக்காக
சொல்ல முடியாத சுகங்களுடன்
ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருக்கும்
உன் மணவாட்டி Jerusha JSB
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: thamilan on March 17, 2021, 08:28:22 AM
நீ என் காதலனா
காதகனே
காதலுக்கு அர்த்தம் உனக்கு தெரியும் என்று
நினைத்தேன்
நீயோ காதல் என்றால்
கடைசரக்கு என்று அர்த்தம் சொல்கிறாய்

உன்னை மலை போல நம்பினேனே
என் நம்பிக்கையை
மழை போல அழித்து விட்டாயே
மனதை உன்னிடம் கொடுத்தேன்
உன் மனத்திலோ
பலப்பல மனங்கள் வாடகைக்கு இருப்பதை
இன்று தான் உணர்ந்து கொண்டேன்

காதல் வரம் கேட்டவளுக்கு
சாகா  வரம் கொடுத்தவனே
என் கண்ணீரிலும்
உன் பெயரைத் தானே எழுதி பார்த்தேன்
என் வெப்ப மூச்சுக்காற்றில்
முற்றிலும் அழிந்து விட்டது

பாவி
நெஞ்சில் பதிந்த நினைவுகள் மட்டும்
அழியாமல் இன்னும் அப்படியே.......
   
உன் சொல்லுக்குள் இனிப்பு
உள்ளுக்குள்ளோ கசப்பு
காலத்தின் தீர்ப்பு
கண்ணீருடன் நான் தவிப்பு

என் விழிநீரை துடைக்க
உன் விரல் கேட்டேன்
நீயோ
கொள்ளிக்கட்டையால் என்
கண்களை குருடாக்கினாய்

தென்றல் வரும் போதெல்லாம்
நீ வர மாட்டாயா என
ஜன்னல் ஓரம் காத்திருப்பேன்
இனி புயல் வந்தாலும்
நீ மட்டும் வந்துவிடாதே
ஜாக்கிரதை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: AgNi on March 17, 2021, 07:07:08 PM


உறவுகளின் நிர்பந்தத்தால் உறவன் ஆகி ..
அதை தக்க வைத்து கொள்ள தவறி ...     
இன்று உரிமை கேட்டு போராடுபவனே!

உண்மைக்கும் பொய்மைக்கும்
வாய்ப்புகள் வழங்கப்படாவரை ..
குற்றங்கள் இங்கு நாகரிகங்கள் !

என்றோ நீ கொடுத்த சத்தியங்களுக்கு ...
சாஸ்வதம் இல்லை என்றான பின் ...
உன் சாமார்தியங்களுக்கு ஏது எல்லை?

காலம் காலமாய் ஏமாற்றம் தரும்
கண்ணியமிகு கனவு   உலகில் ...
கை கோர்த்த தினங்கள்  எல்லாம்
இன்று காதலுதிர் காலங்களே !

உண்மைகள் ஊமை ஆகும் போது..
உள்ளத்து உறவுகளில் ...
பொய்கள் தானே ஊர்வலமாய் போகும் !   

நம்  தவறுகளின் சதவீதம் கூடி போக
நம்  மன்னிப்பின் சதவீதம் குறைந்து விட்டன !
மன்னித்து கொள்!

மரணத்தின் சாயல் விழும் நேரத்திலும்
உன் துரோகத்தின் காயம் ஆறாது!
பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால்
தண்டனைகள்  தப்புகின்றன
பிழைத்து போ !
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: TiNu on March 18, 2021, 01:10:10 AM


என் அன்பு தோழனே!.. என் ஆருயிர்  நண்பனே!!
உன் விழிகளிரண்டும் மூடி.. தவிக்க  காரணம் என்ன?

ஏன் இந்த கவலை... ஏன் இந்த மனஇறுக்கம்..
ஏன் இந்த சோகம்... ஏன் இந்த மனசோர்வு..

நான் உன்னுடன் இருக்கும் வரையினில்...
என் கண் முன்னே.. உன் முகம் வாடலாமா?

என்னிடம் பேசடா... மனம் திறந்து சொல்லடா...
நானும் உன் துயர் விலக்கி.. உன் தலை நிமிர செய்வேன்..
 
உன் முகத்தில் என்றுமே... கவலை ரேகைகள் ஓடாது.....
உன் கண்களில் சந்தோச பூக்கள் பூக்க செய்வேனடா..

இவளோ சிறியவள்.. இவள் ஏதும் அறியா குழந்தையென ...
எனை  உதறாதே... நானும் பெரியவளே... உனை காத்து நிற்பதில்..

உன் முகம் கருத்து சுருங்க.. நடந்ததென்ன சொல் நண்பனே...
என்னிடம்  சொல்ல மறுத்தாலும்.. மிரட்டி அறிவேன். உன் துயரமுமே..

உன் துக்கம் எதுவென அறிவேன்... தாயென உருமாறியே..
உன் இடர்களை தூர ஓட்டுவேன்... தகப்பனாக சிந்தித்தே...

உனை சூழும் சூதுகளை விரட்டி துரத்திடுவேன்.. சகோதரியாக...
கண்மணிகளை காத்திடும் இமை போல.. என்றும் உனை காப்பேன் உயிர் தோழியாக....
.
கலங்காதே உயிரே.. கலங்காதே உறவே...
காலனையும் காலால்.. உதைத்து ஒடுக்கிடுவேன்...

உன் கண்களின் மிளிரும் சந்தோச பார்வைக்கும்...
உன் இதழ் சிந்தும்.. ஒற்றை புன்னகைக்குமே.. என்னுயிர் தோழனே!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: gab on March 18, 2021, 09:14:01 PM
இன்று ஏனோ கவிதை வர மறுக்கிறது 
இதற்கும் நீ கோபப்படுவாயோ என்ற ஐயத்தினால்..

என் உள்ளம் கவர்ந்த தேவதையே
என் இல்லம் ஆளப்போகும்  இனியவளே 
காதல் மலர்ந்த  நாட்களிலே 
நமக்குள் கருத்துவேறுபாடுகள்  இருந்ததில்லை

புத்துணர்வுதரும்  நீ சிந்தும் புன்னகையே 
உன்மீது நான் காதல்வயப்பட முதன்மை காரணம் ...
எந்த ஒரு ரணத்தையும் ஆற்றும் வல்லமை கொண்ட 
மருத்துவ புன்னகை அது …

இன்று நீ எனதானபின்.. நான் ரசித்த அந்த புன்னகை   
அரிதாய் பூப்பதை உணருகிறேன்.   
இருந்தும் எனக்கானவள் நீ என்ற உணர்வினால் 
உந்தப்பட்டு உன் சுட்டெரிக்கும் கோபத்தை 
எதிர்கொள்வதை  இன்பமான சவாலாக  உணருகிறேன்

ஓராயிரம் எரிமலை உன் கோபத்தில் கண்டாலும் 
உன்கோபம் ரசித்து.. உனை சமாதானம் செய்ய கற்றுக்கொண்டது
சமாதானத்திற்குப்பின் நீ தரும் ஒற்றை முத்தத்திற்காக..

நியாயம் என்பக்கம் இருப்பினும்
உன்னுடன் வார்த்தை போர் புரியாமல் 
நான் தோற்பது உனை வெல்வதற்காகவே..

என்னடா கோபப்பட்டுட்டேன்னு  ஃபீல் பண்ணுறியா?
என நீ கேட்கும் தருணங்களில் ...
'உரிமை உள்ள இடத்தில்தானே கோபம் வரும்' என 
சமாளிக்கும் பக்குவம் வளர்த்துக்கொண்டேன்.
   
கோபத்துடன் விலகி இருப்பதை  விட 
உரிமையுடன் நீ திட்டுவதை ரசிக்க கற்றுக்கொண்டேன்
'பிரிவுகளை தவிர்க்கும் யுக்தி' என்ற மனநிறைவோடு...

பிரியமுள்ளவர்களின் பிரிவும் கோபமும்
ஒருவரை ஒருவர் அதிகம் நினைப்பதற்கே!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: kanmani on March 19, 2021, 12:17:14 AM
அக்னி  சாட்சியாக  ஊரார்  போற்ற  ...
காலம் முழுதும்   காப்பேனென 
உறுதிக்கரம் நீட்டினவனே !
காலம்  தான்  கசந்ததோ ?...
விதி  தான்  வலியதாய்  மாறியதோ ?..

தகுதியற்றவள்  என்றாய் ...
வசதியில்லை  என்றாய் ....
வாழ்க்கை நான்  போட்ட பிச்சை  என்றாய் ...
நாக்கில்  நரம்பில்லை என  வசைபாடினாய் ...

ஏன்  வாழ வழியில்லை  என  உன்  காலை  பிடித்தழுதேனா ?...
இல்லை  என்தகுதி  உயர்த்த  உனக்கு  குடைபிடிக்க  காத்திருந்தேனா ?  ..
இல்லை  தருதலையாய்  தடம்மாறி  தான்  நின்றேனா ? ...
இல்லை  பெண்ணாக  பிறந்திருப்பதுதான்  சாபக்கேடா ?..

எதிர்த்து  நின்று  போராடினால்  ..
திமிர்பிடித்தவள்  என்றது  சுற்றமும்  சொந்தமும்.........
சுய  மரியாதையுடன்  வாழ  நினைத்தால் ..
வாழாவெட்டி  என  பெயர் -சூட்டியது  இவ்வுலகம்........

தனி  மரமாய்  நின்றாலும் 
தன்னம்பிக்கையுடன்  நிற்கிறேன்...
விடாமல்  நீ  என்னை  நோகடித்தாலும்
விடாமுயற்சியுடன்  எழுகிறேன்....
ஒரு  நொடி  துவண்டாலும்
 ஓராயிரம்  துணிவுடன்  எதிர்கொள்கிறேன்....
எதிரியாய்  என்  முன் நீ  நின்றாலும்  கண்ணியமாய்
 உன்னைக்  கடக்கிறேன்....

உன்  அடிமையாய்  உன்  காலைப் பிடித்து 
வாழ்வதை  விட 
கண்ணியமாய்  வாழவும் 
வாழ்க்கை   அர்த்தமுள்ளதாய்
பயணிக்கவும் என்  பயணத்தில் 
வழிப்போக்கனாகக் கூட   வந்துவிடாதே
நகர்ந்து நில்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: அனோத் on March 19, 2021, 02:58:14 PM
இல்லறங்களில் குமுறிய
ஆறாத ரணங்கள்
நடு வீதியில் வெடித்து
விவாதிப்பதேனோ ?

விவாகத்தின் தர்மத்தை
தடுமாறி சிதறடித்த கோபங்கள்...
தாம்பத்திய தடம் மாறி
பயணிப்பது ஏனோ ?

வேடிக்கை உலகிலே
கேளிக்கை ஆகிய
தம்பதியோர் கேள்விகள்........

தன்மான இயல்பிழந்து
அன்பான  தருணங்களை
தொலைத்திருப்பது ஏனோ ?

ஆண் அவனும்…… தான்…. எனவும்
பெண் அவளும் …நான்… எனவும்
ஆணவம் கொண்டிங்கு
பொறுமை இழந்து
தெருவில் நிற்பதேனோ ?

பலகுடும்பங்களின்  விம்பங்களை 
அப்பட்டமாக நகர்ப்புறத்தில்
விற்பதேனோ ?

பாசமாக இணைய வேண்டிய பந்தம்
இன்று பாதகமான
முடிவுகளுடன் பிரிய
முற்படுவதேனோ ?

முரணான கொள்கைகளால்
வெளிப்பட்ட கோலங்கள்
வெளியுலகுக்கோர்
கதையாக 
வழி கொடுத்ததேனோ ?

தார்மீக கோட்பாடுகள்
இன்று தரணியாவும்
வீதிவரை மட்டுமே !

மீதிய வெறுப்புகளால்
மிஞ்சிய கதைகள் தான்
இன்று இல்லறங்களில்
இடறல்களாய்
இடிந்து போகுதே  ?.....

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: SweeTie on March 20, 2021, 12:19:13 AM
கண்ணா   உனக்கு  எத்தனை  முறை சொல்வேன்
பெண்ணான  என்னை  கண்ணாக பார் என்று
காதல் என்ற போர்வையில்  என்னை கவிழ்த்துவிட
மோதல் செய்கிறாய்  தினமும்

காதல் என்பது   கடை சரக்கா என்ன ?
உள்ளத்தின்   எண்ணங்கள்   பின்னலிட  வரும்
கள்ளமும்   கபடமும்  கொண்ட
வெள்ளமாய் பெருக்கெடுக்கும்   உறவு 

தினம்  உன்னை பார்க்கையில்  வழிந்தோடும்
என்  அன்பிற்கு    நீ கொடுக்கும்  விலை   
காதல்    என்ற  போர்வைக்குள்   அடைத்து
சாதல்  என்னும்   குட்டையில்  தள்ளிவிடவா ?

உன்  நினைவுகள்  என்றும்   என்னிடத்தில் 
மாற்றான்  கை  படாத    மலர்கொத்து  போல்   
வேற்றுமணம்  அறியாத   வெண்சங்குபோல் 
பொக்கிஷமாய்   பத்திரமாய்  வீற்றுருக்கும்

காதல் என்ற பெயர் சூட்டி   சிறு இடத்தில
கட்டிப்போட்டு  விடப் பார்க்கிறாய்  நீ
அதையும்  தாண்டியது   உன் சொந்தம் 
கண்ணாடிப்  பொம்மையல்ல   நம்  உறவு
உடைந்து  நொருங்கி  ஒட்டிவிடாதுபோக
காலத்தையும்  கடந்து நிற்கும்  பந்தமது.   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 260
Post by: Evil on March 20, 2021, 12:23:50 AM
ரசிக்கிறேன்... என்னவளை...
ரசிக்கிறேன்...என்றென்றும்...
என்னை ஆளும் அழகியை...
 
என்னை கவர்ந்து  கட்டி  இழுத்த
அழகிய கண்கள் கொண்ட
என் அழகு தேவதையே
உன்னை நான் ரசிக்கிறேன்...

எக்கணமும்
என் மேல் அவள் கொண்ட
சிறு சிறு கோவங்களை...
ரசிக்கிறேன்

சிறு பிள்ளையாய்
என்னை நினைத்து...
அவள்  விடும் சின்ன சின்ன...
மிரட்டல்களை... ரசிக்கிறேன்.. 

அன்பில் என்னை
ஆட்கொண்டவளும்
என்னை ஆழ...
பிறந்தவளும் இவளே...
என் முழு அன்பிற்கு
உரிமையானவளே...

என்னை சிறு துயரம் கூட
நெருங்க விடாமல்.. உன்
அன்பின் பாசக்கயிற்றில்
கட்டி அரவணைத்துப்
பார்த்துக் கொண்டவளும் நீயே...

என்றென்றும் உன்
அன்பு எனும் மனச் சிறையில்
ஆயுள் கைதியாக வாழ துடிக்கும்
ரசிகன் நானே...