Author Topic: வார்த்தை  (Read 1968 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வார்த்தை
« on: November 16, 2011, 05:26:13 PM »
வார்த்தை


வார்த்தைகள் எப்படி தோன்றியது, மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றியவற்றுள் வார்த்தைகளும் ஒன்று என கூறப்படுகிறது. வார்த்தைகள் இல்லா உலகம் எவ்வாறு இருந்திருக்கும் அமைதியாகவா, ஓங்கார ஓசை மட்டுமே நிறைந்ததாகவா, ஆதி மனிதர்கள் எவ்வாறு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார்கள். இவற்றையெல்லாம் இன்றைய ஆராய்சிகள் மூலம் நாம் அறிந்தாலும் இன்றைய உலகில் காணப்படும் மொழிகளுள் பல மொழிகள் கால போக்கில் மாறி அல்லது மாற்றி புழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன, சில வார்த்தைகள் வழக்கத்திற்கு மாறானவைகளாக கருதப்படுவது நம்மை சற்று சிந்திக்கவும் செய்கிறது. ஆங்கிலமொழியினை எடுத்துக்கொண்டால் பிரிட்டிஷ்காரர்கள் புழங்குகின்ற ஆங்கில சொற்க்களுக்கும் அமெரிக்கர்கள் புழங்குகின்ற ஆங்கில சொற்க்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுவதை நாம் அறிவோம்.

இதற்க்கு காரணங்கள் பல இருப்பினும் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுவது எளிய முறையில் வார்த்தைகளுக்குரிய சத்தத்தை வைத்து அவற்றை உச்சரிக்கின்ற வகையிலேயே எழுதுவது அமெரிக்கர்களின் ஆங்கிலம். ப்ரிடிஷ்காரர்களின் ஆங்கிலம் என்பது மிகவும் முதன்மையானதும் பழமை வாய்ந்ததுமாக இருப்பதால் அந்த ஆங்கில சொற்களுக்கு தனி தன்மைகள் நிறைய உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகள் பலவற்றில் உச்சரிப்பிற்க்கும் எழுத்திற்கும் பல மாற்றங்களை நம்மால் காண முடியும். இலக்கியமாக கருதப்படும் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வார்த்தைகள் முற்றிலும் வேறாக இருக்கும் இதனாலேயே அவற்றை ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் என்று வழங்கப்படுகிறது. கிரேக்கு இலத்தீன் மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் வேதாகமத்தை [பைபிள்] மொழிபெயர்ப்பு செய்தபோது அதற்க்கு கையாளப்பட்ட ஆங்கிலச் சொற்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தன, இதற்க்கு காரணம் சாதாரணமாக புழக்கத்தில் இருந்த ஆங்கில வார்த்தைகளையே வேதாகம வார்த்தைகளாக்கும் பட்ச்சத்தில் அதன் முக்கியத்துவம் சாதரணாம கருதப்படக் கூடாது என்பதே.

தமிழ் மொழிக்கான வரலாறுகள் மிக அதிகம். பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட தமிழ் வார்த்தைகளும் எழுத்துக்களும் இன்றைய புழக்கத்தில் இல்லை என்பது தமிழ் மொழியின் வரலாற்றின் மிகவும் வருத்ததிற்குரிய செய்தி. இந்தியாவின் ஆட்சி மொழி தற்போது ஹிந்தியாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் உபயோகிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் ஆட்சி செய்து பல ஆண்டுகள் தங்கியிருந்த காரணத்தால் இந்திய மொழிகளில் பல அயல்நாட்டு வார்த்தைகளும் கலந்து அவை இன்றும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. சென்னையின் பேச்சு மொழியில் பல வேற்று மொழி சொற்கள் கலந்து அவை இன்றுவரை புழக்கத்தில் இருந்து வருகிறது.

சென்னை துறைமுகம் மிகவும் பழமை வாய்ந்தது பழங்காலத்தில் சென்னை முக்கிய வியாபாரஸ்தலமாக விளங்கியது பல நாட்டைச் சேர்ந்தவர்களின் புகலிடமாக விளங்கியது. இதனால் பல மொழி சொற்கள் தமிழின் இடையே பேச்சு மொழியாக நுழைந்தது. அவ்வாறு நுழைந்த வேற்றுமொழிச் சொற்க்களை அதன் அர்த்தம் அறியாமலேயே பயன்படுத்தியதன் விளைவாக அவற்றின் உச்சரிப்பும் தவறாக உச்சரிக்கப்பட்டது. இவ்வாறு 'சென்னைத் தமிழ்' என்று இன்றைக்கு கேலி செய்யப்படும் பேச்சுத் தமிழ் உருவானது. வேற்று மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வியாபார நோக்கிற்காக பெருமளவில் சென்னையில் குடி புகுந்ததன் விளைவு அவர்கள் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கின்ற விதமும் வித்தியாசமானதாகிப் போனது. 'சென்னைத் தமிழ்' பலவிதங்களில் வித்தியாசப்படக் காரணம் சென்னை என்பது ஆதிகாலம் தொட்டே வியாபாரஸ்த்தலமும் பல வெளிநாட்டவர்களின் வருகையும் அவர்கள் பயன்படுத்திய தமிழ் உச்சரிப்பும் மிக முக்கிய காரணம்.

அர்த்தம் தெரியாமலேயே புழக்கத்தில் இன்றுவரையில் பேசப்படும் 'சென்னைத் தமிழ்' வார்த்தைகள் இவ்வாறு உண்டானவைதான்.

கசமாலம், கேப்மாரி, தூம, கலீஜ், கழிசாட, கம்மினாட்டி, கண்ட்ராவி, நாதாறு, லோலாயி, நாதாரி, நாஷ்டா, வஸ்தாதி, லவடிகபால், வண்ட வண்டையா, வவுறு, கயிலாத்து, இஸ்த்துகினு, கப்பு, கவுச்சி, கக்கூஸ், கக்கிசு, சாக்கடை, சாக்காட, எக்கா, தபா, ராவிக்கு, ரவூண்டு, கயித, இட்டாந்த, ரோதன, டாவு, டபாய்காத, லங்கடா, கைமாத்து, கச்சிட்ட, எரமாரம் கெட்டது, கலாப்பன, முச்சூடும், கபோதி, டமாரம், சிம்ட்டா, லொட்டு லொசுக்கு, தாம்பு கவுறு, செத்தை, பின்னாடி, முன்னாடி, மின்னாடி, ஓடியாந்து, கீத்து கொட்டா, சீண்டாத, கடாசு, சீவு, துண்ணு, சீக்காளி, ஜளிப்பு, வாராவதி, டப்பாங்குத்து, இஸ்கோலு, பாத்ரூம்பு, மேஜர், மஞ்சாசோறு, மாஞ்சா, மாமூல், சொச்சம், கொல்லிக்கி, பேணுடுச்சி, டிச்சி, கப்சா, மஜா, மாலு, லொள்ளு, அண்ணாத்த, அயித்த, தோட்டி, லச்சி, லம்ப்பா, லடாய், பன்னாட, பிசாத்து, ஏடாகோடம், பவுசு, மவுசு, நெசம், நெசமாலம், பூடு, கீது, ரவுண்டு கட்ற, மைனரு, கம்முன்னு, டவுசரு, இன்னாண்ட, அன்னாண்ட, உன்னாண்ட, என்னாண்ட, சொதப்பல், லேசா, ரொம்ப, கொஞ்சூண்டு, பச்சத்தண்ணி, தமாத்தூண்டு, காபந்து, மல்லாந்துகினு, வூட்டாண்ட, கவுத்துட்டான், மெதப்பு, மப்பு, பினாத்தல், சுதார்ச்சிகின, எகிறிப்புடும், காத்தால, தித்திப்பு, முட்டாய், கைக்குட்ட, நிக்கர், நெஜார், நிஜார், கில்லிதாண்டு, கிண்ணம், டவரா, லோட்டா, குண்டான், அண்டான், தவலை, போண்ச்சட்டி, டம்ளரு, ஸ்பூனு, யேனம், கரண்டி, நொண்டி, சாக்கு, ஜாட்டி, லாந்தர், ஜட்டி, நிஜம், கானா, பேஜார், டொப்பி, தொப்பி, ரவிக்க, வெசாய கெய்ம, வங்காயம், கரீப்பல, பாஞ்சு, ரொட்டி, வூடு, கொட்டாய், உசிரு, மசுரு, கஞ்ஜி, சளி, ஜொரம், ஜுரம், டுபுக்கு, டுபாக்கூர், பளார், டமால், புட்டி, பீட, டப்பா, டின்னு, பத்த, டோபி, டப்பி, கம்மி, ஜொள்ளு, பிகில், பளுவு, இஸ்துகினு, டக்கர், மாம்ஸ், கெலிச்சேன், கிராப்புத்தல, கேட்டுவாசல், இஸ்த்ரி, பாத்து, கோயி, டப்பாசு, பொத்தல், பெராக்கு, டவுறு, நோவு, எச்ச, வேர்வ, தண்ணி, போர்வ, ராத்திரி, கவுறு, டிமிக்கி, டமாசு, கொரட்டை, போங்கு, வாத்தியார், கசாப்புகட, ஜிம்பாத, சக்கர, பீ, மூஞ்சி, பத்தாது, குஜால், சால்ஜாப்பு, பங்க், உடான்சு, கவுந்துடுச்சி, ஏட்டா போட்டி, எடுபுடி, கொட்டாங்கச்சி, தொடப்பம், பிஞ்சுடும், பொம்மினாட்டி, பொம்பள, ஆம்படையான், ஆம்பள, தின்னு, கோந்து, ஒருவாட்டி, மைய, பயம்,

கஞ்சன், ஜோல்னா, வஸ்த்ரம், பசங்க, ஜல்லி, தனியா, பிஸ்த்தா, லங்க்கோட்டா, ஜோட்டால அடி, பொம்மை, புளுகு, பையா, பிசினி, மைதா, விவஸ்த்த, அவஸ்த்த, சேதாரம், ஜக்கு, பீடா, பூந்தி, பாதாம், ஜோரா, சதுர்த்தி, சஞ்சலம், ஜலசஞ்சாரம், ஊஞ்சல், ஜன்மாஷ்டமி, குருஷேத்ரம், உஷ்ணம், குல்லா, திப்பு, கஞ்சா, குஞ்சலம், ஜம்பம், அலட்டல், மைதானம், விக்கல், நாக்கு, மூக்கு, மாமா, கரம், கரம் மசாலா, மசாலா, பினாமி, சுனாமி, சங்கிலி, மிட்டாய், ரசகுல்லா, ஜால்ரா, ஜாதகம், ஜல்தி, தபசு, இழுவ, பக்கா, தண்டால், பஜார், சூத்ரா, சாஸ்த்ரா, ஸ்த்ரி, ஸ்நானம், ஜனனம், ஜனம், ஜாஸ்த்தி, ஜாதி, உஷார், உபவாசம், ஸாது, விசில், தோச, பாராட்டா, பொரோட்டா, தோஷம், ஜலதோஷம், சூன்யம், பில்லிசூன்யம், கிஸ்த்தி, பிரஜை, பிரஜா, கெஞ்சி, லஞ்சம், பைசா, பிசாசு, சைத்தான், ஜிவ்வுன்னு, ஜவ்வு, ஜீரா, ப்ரேமம், பக்கிரி, பக்க, பக்கி, ஜடம், ஸ்த்தானம், ப்ரீத்தி, பிரவீன், பிரேமா, சங்கதி, துள்சி, கிராம்பு, சோம்பு, லேகியம், வெந்தியம், சக்கை, சீரகம், விசேஷம், விஷம், ஷேமம், தமாசு, தமாஷ், விஷமம், விஷயம், கஷாயம், ஜோடி, கைலி, பூஜா, பூஜை, நமஸ்த்தே, நமஸ்காரம், தர்பார், இஷ்டம், கஷ்டம், நஷ்ட்டம், தாலி, மங்கள் சூத்ரா, கிண்டல்,

வாபஸ், கேஸ், மொசேக்கு, லவ்ஸ், ஆட்டோ, லாரி, பஸ்சு, சைகிள், பைக், ரோடு, போலீசு, தொரை, பார்ட்டி, பாரா, தார், டபுள்ஸ், பஞ்சர், சைபர், நகர், தெரு, காலனி, ரோந்து, பேட்டை, டவுன் பஸ்ஸு, பிரேஸ்லெட், ஹெல்மெட், சோப்பு, சென்ட்டு, காலி, காலிப்பய, ஜாகெட், பாடி, ப்ரா, சாக்ஸ், மப்ளர், சொட்டர், பிளாட்டு, ப்ளேடு, பல்பு, டென்டு, சூப், கலர், கரன்ட், லாக், பிளைட்டு, செயினு, டிரங்கு, நெக்லேசு, டாலர், டிப்சு, பீடி, சிகரெட்டு, கேரம், டவுட்டு, பங்களா, காமெடி, ஜோக்கு, கலாட்டா, ரம்மி, மம்மி, ஜிம்மி, லூசு, ஜேப்படி, ஜோபி, ஆஸ்பத்திரி, நர்சம்மா, டாக்டரம்மா, ஆயாம்மா, டிப்பன், டவல், காலரா, காலிப்ளவர், ஸ்டூல், ஸ்டூல்சைடு, ரயிலுவண்டி, கூலி, போர்டர், டிப்பன் பாக்ஸ், காப்பி, ஜூட், லக், கஞ்சுக்கே லாட்டரி, லத்தி சார்ஜ், ஜெயிலு, முட்ட கோஸு, பிராடு, ஸ்லிப்பர், சப்பல், பர்சு, பாக்கெட், பனியன், ரவுடி, ஜாலி, பில்டர் காபி, சாத்தான், ஆப்பிள், ஆரஞ்சு, ரிக்க்ஷா

சாம்பார், பூஷணி, தர்பீஸ், சர்பத், சாத்துக்குடி, திராட்ச்சி, கிஸ்மிஸ், ஜானவாசம், குஷி, பிசினாரி, ஜடை, ஜாடை, சக்கரை, பிருந்தா, ஜில்லுன்னு, ஜாலம், ஜலம், மேஜை, பூஜ்யம், சங்கீதம், ஆலாப், ப்ரியா, ஸ்ருதி, லையா, வேஷ்டி, பரீட்சை, குஸ்த்தி, கஜானா, சந்தோஷம், வாத்தி, பேதி, ஜந்து, ஜன்னல், ஜகா, சந்து, செருப்பு, கம்மல், ஜிம்மிக்கி, லோலாக்கு, டோலாக்கு, வங்கி, தோடு, சீப்பு, குல்குந்து, சல்வார், சூடி, சூடிதார், துப்பட்டா, சாப், கசாப்பு, சாயபு, ஷால், ஜப்தி, கொரடா, கோரம், அகோரம், தவ்வா, கடாய், ஜல்லிக்கரண்டி, தண்டோரா, தண்டம், காத்தாடி, கெழடு, ஒசத்தி, ஜகா, எரா, துட்டு, கடிகாரம், சாயா, மணி, பைத்தியம், நகை நட்டு, ஜெயிச்சேன், கடுதாசி, தோத்துட்டேன், வெவரம், வாண்டு, சதுரவட்ட, ஜீரணம், பிக்கல், புடுங்கல், பாயா, பாயாசம், ஜம்முன்னு, கேவலம், மாப்பு, பாஷை, கத்து, சாப்பாடு, பேத்தல், பஜனை, கோஷ்டி, லட்சம், அதிஷ்டம், லக்க்ஷணம், ஷணம், பொக்கிஷம், ஜமா, வேசி, தாசி, லோலன், புருஷன், ஜிகினா, சவால், அபிலாஷ், பாபு, சொர்ணம், சோனா, பௌர்ணமி, கல்யாண், மந்த்ரா, ஸ்டூ, குருமா, ஹேமா, ஹோமம், ஜாடி, பந்த், ஜல்லடை, ஜெய், விஜயம், சபா, சங்கம், ஜமக்காளம்,

மொகரகட்ட, செரங்கு, சல்லி, பூரா, மருத, குருத, இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு, ராவடி, வர்க்கி, ராட்டி, செராய், ஆச்சி, ஆத்தா, மைனி, ரவைல, வெஞ்சனம், வெள்ளென, அவுக, அவிங்க, இவிங்க, குசும்பு, ரவுசு, சாமான், ஜாமான், சேட்டை, அந்தால, பொண்டாட்டி, கிட்ட, கிட்டக்க, தூரக்க, கொட்டாவி, கண்ணாலம், ரூவா நோட்டு, அம்புட்டு, இம்புட்டு, பொறவு, இத்துனூண்டு, இத்தாம்பெரிசு, காலம்பர, எந்திரி, மிஞ்சி, மெட்டி, கொலுசு, பூட்டு, சாவி, கொக்கி, ரிப்பன், பின்னு, பவுடரு, பட்டன், ஊக்கு, நாதியத்த,

இன்னும் ஏராளமான வார்த்தைகள் தமிழா அல்லது வேற்று மொழியா என்று பிரித்து அறியா வண்ணம் புழக்கத்தில் கலந்து விட்டது. தமிழ் வார்த்தைகள் உருக்குலைந்து அந்நிய மொழி போன்ற உச்சரிப்பை பெற்று உபயோகிக்கப்படுவதே 'சென்னை தமிழ்'.
                    

Offline RemO

Re: வார்த்தை
« Reply #1 on: November 16, 2011, 11:52:20 PM »
ha ha nala pathivu chennai tamil than perusunu silar suthuranga avarkal padika vendiyathu

ana ithu namitha tamil miss panita nee :D athuku thaniya oru post podu

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வார்த்தை
« Reply #2 on: November 17, 2011, 12:28:10 AM »
na venumna mic podava ;D
                    

Offline RemO

Re: வார்த்தை
« Reply #3 on: November 17, 2011, 12:29:54 AM »
mic ethuku poda pora:D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வார்த்தை
« Reply #4 on: November 17, 2011, 12:30:37 AM »
namitha damil pesa ;D
                    

Offline RemO

Re: வார்த்தை
« Reply #5 on: November 17, 2011, 12:34:28 AM »
ha ha podu nan ketkanum