Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 078  (Read 2682 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 078
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Softwareஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:39:43 PM by MysteRy »

Offline PaRushNi

அச்சம் நீங்கவில்லை[/size] ![/color]

பிள்ளை.. நான் பெண்ணாக இருப்பின்
கருவறையிலேயே கொல்ல சதி நடக்கிறது
தப்பி பிழைத்து இப்பூவுலகிற்கு வந்தால்
என் முதல் அழுகையை கூட அடக்கி விடுகிறார்கள்
என் பாதுகாப்பின்மையை உணர்ந்த மானிடா..
அதனால் தான் என்னவோ 
இம்மரதினில் எனக்கு உயிர்க் கொடுத்தாய்?
குறைந்தபட்சம் இம்மரம் இருக்கும் வரை
என் நிலையில் பெரிதும் மாற்றம் இராது
என்று எண்ணினாய் போலும்
அடடா மானிடா..
அதற்கு ஏன் என்னை உயிருள்ள மரத்தினில் செதுக்கினாய்?
எவ்வினாடி என் தாய்மரத்தை அழிப்பார்கள்
என்று யூகிக்க கூட முடியாதே !   


---- பருஷ்ணி  :)
« Last Edit: September 09, 2015, 09:19:25 PM by PaRushNi »
Palm Springs commercial photography

Offline SweeTie

இயற்கை அன்னை ஈன்ற குழந்தைகள்தான் மரங்கள்
அவள் மூச்சுக்காற்றே  மரங்களின்  சுவாசம்
காற்றிலே அசைந்தாடும் இளம்தளிர்களின் அழகு
கண்ணுக்கு இதமாக குளிர்ச்சி தரும் பசுமை
 நிழல்கள் மக்களையும் மாக்களையும்
உறங்கவைக்கும் மஞ்சம்


மரக் கிளைகளிலே கூடு கட்டிவாழும் பறவைகளுக்கும்
மரப் பொந்துகளில் வாழும் அணில்  கூட்டங்களுக்கும்
மர இலைகளில் வலை தொடுத்து  வாழும் சிலந்திகளுக்கும்
இரவில் உறங்கவரும்  பட்சிகளுக்கும்
இரை பிடித்து  உண்ணவரும் விலங்குகளுக்கும்
வேட்டையாட பதுங்கி ஒளிந்திருக்கும் மாக்களுக்கும்
மரம் கொடுக்கும் அடைக்கலம் அளப்பரியது


இயற்கையின் படைப்பில் எத்தனை அற்புதங்கள்
ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்தனவே
மரங்கள்  இல்லையேல் நாட்டில் மழை பொழியுமா??
மழை இல்லையேல் உண்ண உணவு  இருக்குமா ??
பஞ்சம் பட்டினி நோய் நொடிகள்தான்  தீருமா??
காடுகளை  அழித்து நகரங்கள்  கட்டமைத்தால் - அங்கு
வாழும் உயிரினங்கள்   ஒதுங்கத்தான்  இடமேது ??
 


பிறந்த நாள் முதல் தொட்டிலில் ஆரம்பித்து
வாழ்வின் இறுதியில் பெட்டியில் முடியும்வரை
கூடவே பயணிக்கும் ஒரே நண்பன் மரம்கள்
மரங்கள்  அவ்ஷதங்கள்   அழிக்காதீர்கள் !!
நமக்காக இயற்கை ஈன்ற செல்வங்களை அழிக்காதீர்கள் !!
« Last Edit: September 10, 2015, 03:36:55 AM by SweeTie »

Offline thamilan

சிலவற்றை பார்க்கும் போது
மனதினில் பலப்பல நினைவலைகள் தோன்றும்
நிழல்கள்  என்றும் நிஜமாவதில்லை
இந்த நிழல்படமும் அப்படித்தான்
என்றாலும்
என்மன ஓட்டத்தை எடுத்துரைக்கிறேன்


நவநாகரிக உலகில்
இன்றைய தலைமுறைகளில்
நாகரிகம் என்ற பெயரில்
நடக்கும் சாதனைகள் ( வேதனைகள் )
பலப்பல 
காலை மறைக்கும் ஆடைகள் குறைந்து
மறைக்கவேண்டியத்தை மறைக்க திண்டாடும்
ஆடைகள்
கார்குழல் மறைந்து
ஆனா பெண்ணா என யோசிக்கவைக்கும்
கூந்தல்கள்
 
முந்தய சமுதாயத்தில்
பிள்ளைகள் பெருவத்தை பாக்கியமாக
கருதியது போய்
பிள்ளைகளை சுமப்பதே பாரமாக
அழகுக்கு அவலட்சணமாக நினைத்திடும்
பெண்கள் வாழும் காலமிது
இப்படியே போனால்
மனித உலகம் அழிந்துவிடும்
என்று பயந்த இறைவன்
மனதில் ஈரமில்லாத மனிதர்களை விட
ஈரம் கொண்ட
மரங்களுக்கு குழந்தைகள் பெரும் வரத்தைக்
கொடுத்து விட்டானோ என
எண்ணம் தோன்றுகிறது


மனித வயிற்றில் பிறந்தாலும்
போகும் போது
மரத்தின் வயிற்றுக்குள் அடங்கித் தானே
போகிறோம்
இது கருவறையா இல்லை கல்லறையா
என்ற ஐயமும்  தோன்றுகிறது


இந்த நிழல்படம் உண்மையானால்
உலகம் விரைவில் அழியப் போகிறது
என்ற மகிழ்ச்சியும்
மனதில் தோன்றுகிறது
« Last Edit: September 11, 2015, 07:33:05 AM by thamilan »

Offline Dong லீ


மரக்கதவு மூடிய அறை-அதில்
மர நாற்காலிகள் -அதில்
 பல அதிகாரிகளின்
வட்ட 'மர'மேசை மாநாடு..!
"மரம் வெட்டுவதை தடுப்போம்
மரம் வளர்ப்போம் "
என்பதை வலியுறுத்தி..!

மரக்கதவு மூடிய அறை-அதில்
மர நாற்காலிகள் -அதில்
 பல மாணவர்களின் நடுவில்
ஆசிரியரின் பாடம் ..!
"மரம் வெட்டுவதை தடுப்போம்
மரம் வளர்ப்போம் "
என்பதை வலியுறுத்தி..!

பிள்ளையை கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டிவிடும்
முரணான இந்த உலகில்
மரமாக இருப்பது -நீ
வரமாக பெற்று வந்த
சாபம் .!

மூளையிலாதவனாய்
முன்னுக்கு பின் முரணாய்
இயங்கும் மனிதன்
அறிவில்லை என தான் நினைக்கும்
சக மனிதனை -மரமண்டை
என அழைப்பது விபுசி* !

மரமே !
உன் தியாகங்களை உணர்த்த
படம் பிடிக்கப்பட்ட
இந்த  புகைப்படம் -அதிலும் 
உன்னை  துன்புறுத்தி
குழந்தை போன்ற உருவம்
செதுக்கியிருக்கிறோம்

உன் பெருமைகளை
இணையதளங்களில் பேசுவோம்
களத்தில் இறங்கி உன்னை
காப்பாற்ற அறிவுரை  சொல்வோம்-ஆனால்
அதை பின்பற்ற  எங்களுக்கு
நேரம் ஏது ?!

மரக்கதவு மூடிய அறை-அதில்
மர நாற்காலியில் அமர்ந்து 
ஒரு கவிதையை பதிக்கிறேன் 
"மரம் வெட்டுவதை தடுப்போம்
மரம் வளர்ப்போம் "
என்பதை வலியுறுத்தி..!

இதை நானே பின்பற்ற இயலாது
என்பதையும் பதிவுறுத்தி !!

*-விபுசி[rofl] -விழுந்து புரண்டு சிரித்தல் [roll on floor laughing]
« Last Edit: September 14, 2015, 08:56:48 PM by Dong லீ »

Offline Software

  • Jr. Member
  • *
  • Posts: 60
  • Total likes: 86
  • Karma: +0/-0
  • Gender: Male
  • your Best Teacher is your last mistake :)
களைப்பாற நிழல் ..
நிழல் கொடுக்க நீ

விளையாட ஊஞ்சல்
எங்களை சுமக்க நீ

பசி ஆற  நாங்கள்
பழம் கொடுக்க நீ

உன் பிள்ளைகளாய் நாங்கள்
எங்கள் தாயை நீ

மானுட ஆண்மைக்கு
மண் கொடுத்த சீதனங்கள்
மரங்கள்


எந்தப் குழந்தைக்கும்
இருக்க இடங்கொடுக்கும்
பொதுவுடைமை உன் இருப்பிடமே

மரமே நீ இல்லை என்றால்
திருமணச் சடங்கில்
மாலைகள் என்பது
வழக்கொழிந்த விசயமாகும்!
இறந்தவர் சடலத்திற்கு
இறுதி அஞ்சலிக்கும்
மலர் இருக்காது!
சைவம் மட்டுமே
சாப்பிடுவோர் பாவம்
உண்டு வாழ
ஒன்றும் இராது
சதை உண்பதையும்
சைவம் உண்பதாய்
சகித்தால் மட்டுமே
உயிர் வாழ்க்கைச் சாத்தியம்?

மரமே !

நீ இல்லை என்றால் உலகமே இன்று இருந்திருக்காது
 இவ்வளவு வல்லமை இருந்தும்  ஏன் உன்னை வெட்டுகிறார்கள்  !

மரமே நீ தாயின் மறு உருவமாய் இருந்த போதிலும்
ஏன் உன்னை வெட்டுகிறார்கள்  !

மனிதர்கள்
தூங்கிய பிறகும்
வானத்தில் விளக்கெரிவது
மரங்களுக்காகவே

இப்போதே விழிக்கச் செய்
இயற்கையை அழித்தல் தடு
மறுத்துவிட்டால்,
நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையில்
மாண்டு கிடக்கும் நாய் போல
மதிப்பற்றுப் போகும்
மனித வாழ்க்கை!
விழித்தெழாத மனிதனை
பழித்தெழுதும் வரலாறு
இயற்கையை அழித்தது
இந்த நாட்டுமிராண்டிதான் என்று!
ஆகவேதான்
நீயும் விழி
நின் சுற்றமும் விழிக்கச் செய்

Offline NiThiLa

தலை சிறந்த வாரிசு
[/u]




பூமி என்ற கருவறையில் விதையாய் விழுந்து
முட்டி மோதி போராடி வேர் துளிர்த்து
சிறு செடியாய் பிறப்பெடுத்து
சூரிய ஒளி மழை நீர் என கிடைத்ததை பயன்படுத்தி
விருட்சமாய் வானுயர்ந்து
கிளை பரப்பி இலை  வைத்து
காயாகி , கனியாகி , பூவாகி பயன் தந்து
உறுதியாய் ஓங்கி வளர்ந்துவிட்ட பின்னும்
தன்னை ஆளாக்கிய பூமித்தாயை என்றும் நீங்காத
தலைசிறந்த  வாரிசு
தாய் சேய் உறவின் பெருமை பேசும் மரங்கள்


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook



"மரமும் ஒரு உயிர்தான்
அதைக் காப்போம்"

என்ற தகர போர்டை
ஆணியால்
அடித்துவிட்டுப் போனார்
வன ஊழியர்
மரத்தில் !




http://www.friendstamilchat.com/forum/index.php?topic=13846.0

Chum

  • Guest
வியர்த்து நின்றேன் நிழல்  தந்தாய்
தவித்து நின்றேன் மழை   தந்தாய்
வாடி  நின்றேன்      மலர்    தந்தாய்
பசித்து நின்றேன்   பழம்     தந்தாய்
தனித்து நின்றேன்  விதை  தந்தாய்
தத்தளித்து  நின்றேன் படகு  தந்தாய்
யாதுமாகி  நின்றாய்  தாயுமாகி  தந்தாய்