Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 251  (Read 1901 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 251
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
நம் தாயின் கருவறையில்
எனக்கு முன் வெளியே வந்த
என் ரத்தத்தின் ரத்தமே...
என் இனிய உடன்பிறப்பே...
இறைவன் கொடுத்த ஒரு இன்றியமையாத
சகோதர உறவு...நீ அண்ணா
நம் உறவுக்கு ஈடு-இணை இல்லையே!

என் பாசக் கயிற்றில் சிக்கிய
என் பாச மலரே...
பாசத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும்
உணர்வுப்பூர்வமான உறவே...
தந்தையில்லா இடத்தைப் பூர்த்தி செய்து
எனக்கு இன்னொரு தந்தையாக மாறி
பாசத்தை அள்ளிக் குவிக்கும்
எனதருமை அண்ணனே...
நம் உறவு மிகவும் பிரசித்தம்

சிறிய வயது முதல் இன்று வரை...
தயக்கங்கள் ஏதுமின்றி...தடைகளின்றி...
என் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும்
என் தோழனும் நீதானே...
உன்னோடு கூட...
ஓடிப் பிடித்து விளையாடி...
அடித்து புரண்டு போட்ட
செல்ல சண்டைகள்
இன்றும் மலரும் அழகிய நினைவுகளாக
என் மனதில் பசு மரத்தாணி போல் ...
பதிந்துள்ளது

நான் செய்யும் தவறுகளுக்கு
நீயே தண்டனையை ஏற்று
வலி சுமக்கும் உறவே...
எனது ரகசியங்களை பாதுகாத்து
என் பிழைகளை
பெற்றோருக்கும் மற்றவருக்கும்
காட்டி கொடுக்காத உறவே...
யாரிடத்திலும் என்னை
விட்டுக் கொடுக்காத உறவே...
என் விருப்பு வெறுப்புகளை அறிந்து
அதற்கேற்ப நெகிழ்ந்து செயல்படும் உறவே...
தங்கைக்கு வாழ்க்கை அமையும் வரை
தன் வாழ்க்கையை பற்றி நினைக்காமல்...
பொறுமையாக காத்திருக்கும்
எனதுயிரின் உறவே...

நீ அருகில் இருக்கும் போது
உன் அரவணைப்பு தெரியவில்லை எனக்கு...
நீ என்னை விட்டு...வேறு தேசம்
செல்லும் போதுதான் புரிந்தது
அண்ணன்...தங்கையின்
சுவாரஸ்யமான உறவு...

நம் உன்னதமான உறவை போல...
அண்ணன் மீது பாசம் கொண்டு பழகும்
அணைத்து தங்கைகளுக்கும்...
இக்கவிதை ஒரு  சமர்ப்பணம்...
« Last Edit: December 07, 2020, 10:29:19 AM by JsB »

Offline thamilan

கிடைப்பதற்கரிய பொக்கிஷமாய்
கிடைத்தாய் அண்ணா நீ எனக்கு
நீ ஜனித்த கருவறையில்
நான் உதித்தது இறைவன் தந்த வராம -இல்லை
பூர்வ ஜென்ம பலனா
அம்மா உனக்கு அள்ளித்தந்த
பாசத்தாலோ என்னவோ
அந்த பாசத்தை எனக்கு நீ அள்ளித்தந்தாயே

உன்னை அண்ணா என்று சொல்வதா
அப்பா என்று சொல்வதா - இல்லை
நண்பன் என்று சொல்வதா
யாதுமாகி நின்றாயே நீ
உன் கைபிடித்து நடந்த நான்
மங்கையாகி மணவாளன் கைப்பிடிக்கும்வரை
உன்னை எனது கைக்குள்
பொத்தி பொத்தி வளர்த்தாயே
கணவன் கை பிடித்தும்
உன்கைப்பிடித்து நடந்த சுகம்
எனக்கு என்றும் இல்லையே

அம்மா சோறு ஊட்டும்போதெல்லாம்
எனக்கு முதலில்  ஊட்டச்ச்சொல்லி
நான் உண்பதை பார்த்து மகிழ்வாயே
உனக்கு எது கிடைத்தாலும்
பாதியை ஒளித்துவைத்து எனக்குத் தந்து
நான் உண்பதை பாசத்துடன்
பார்த்து ரசிப்பாயே

உன்னுடன் எவ்வளவோ சண்டை போடுவேன்
அம்மாவின் மடியில் எனக்கே இடம் என்று
அழுது புலம்புவேனே
நீ இடம் தந்து
அம்மா மடியில் நான் சாய்ந்ததும்
என்மடியில் நீ தலை சாய்வாயே
அந்த சுகம் எனக்கு இனி வருமா

நான் மணம் முடித்து 
குழந்தைகள் பெற்று
அந்த குழந்தைகள் என்மடி சாயும் போது
உன் நினைவு வந்து
கண்களில் கண்ணீர் பூக்கள் பூக்குமே
அண்ணா எனக்கு என்றுமே
இன்னோரு அப்பா நீ   

 

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 651
  • Total likes: 1820
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

அண்ணனை அடிக்காத நாளும் நாள் அல்ல...
அவனிடம் அடி வாங்காத பொழுதும் பொழுதல்ல..
அவன் பணி முடிந்து  வரும் வரை காத்திருந்து...
அவனை திட்டுவதிலும்.... திட்டு வாங்குவதும் ஒரு சுகமே...

சண்டையிட்டே  சண்டையிட்டே பாசம் பகிர்ந்தவனே!
தலையில் கொட்டி தவறுகளை உணர்த்தியவனே!
ஆயிரம் பேர் அவனை சூழ்ந்திருந்தாலுமே! அவன் விழிகளோ ! 
அவன் தங்கை! எனை காத்து நிற்கும் அரணாகுமே!

அன்புக்கு நானென முகம் காட்டும் உறவானவன் நீ
அம்மா அப்பா கலந்து நிற்கும் உருவானவன் நீ
அன்னை கட்டா தொட்டிலை...  அண்ணா கட்டி காட்டிடவே   
மறுபடியும்... பிறந்து தவழ்ந்தேன் அவன் கைகளிலே!!!

அன்பு அரணாக ஓர் அண்ணன்  நிற்க... மறுபுறமோ!!
குறுகுறுவென வம்பிழுக்க தோணும் சின்ன அண்ணா!!
தங்கை தங்கை என சுழன்று சுழன்று அண்ணா வந்தாலுமே!
எனக்கு ஏனோ.. நீல நிற கார் ஒன்று கை அசைத்து சிரிப்பது போல் பிரமை....

அண்ணன் அறியாது அவன் இஷ்ட டீ-ஷர்ட் மறைத்திடுவேன்..
அவன் தேநீர் கோப்பையில், குறுந்செடி வளர்த்து கொடுத்துடுவேன்.
அவனின் தொப்பிகளில்  பூங்கொத்து சேர்த்து மேஜைகளை அழகாக்குவேன்
கைக்கடிகாரங்களை என் பூனைகளுக்கு கழுத்திலிட்டு சதிராடுவேன்
அண்ணனிடம் வம்பிழுத்து அடிவாங்குவதே! அலாதி!!

அறிவுக்கு அறிவாய் நின்று வழி கட்டியவன் நீ 
தயங்கிய தருணங்களில் தட்டி கொடுத்தவன் நீ
எட்டமுடியாதென  நின்றவளை எட்டாவது இடம் தொடசெய்தவன் நீ
என் புத்தகங்கள் நடுவே சிரிக்கும்... பொக்கிஷ அண்ணா நீ!!!

இரத்த சம்பந்தமும் இல்லை... தொப்புள் கொடி உறவும்  இல்லை..
ஊரும் ஒன்றில்லை...  முகங்களும் அறிந்ததில்லை - இருந்தாலும்
அன்பெனும் மலர் முகம் கொண்டு... பாசமெனும் நூலினால்
கோர்த்த சகோதர பூமாலைகள்  நாம் ஆவோமே! அன்பே ஜெயம்!!

Offline KuYiL



என் கருவறை தோழன் !
எனக்கு போட்டியும் பொறாமையும்
கற்று கொடுத்த ஆசை எதிரி !
பங்கு போட்டுக்கொள்ள அன்பு பகையாளியாய்
வந்த என் ஆருயிர் பங்காளி !
சிந்தித்து பார்த்தால் சிலநிமிடங்கள் சிரிப்பாய்
சிதறி விட்டு போகும் சிறுவயது சேட்டைகள் !
இது எனக்கு  ....அது அவள் பங்கு என்று
கணக்கில் வகுத்தலும் கழித்தலும் கற்றுக்கொடுத்த
என் முதல் கணக்கு வாத்தியார் அவன் ..!

 நான் ஆசையாய் தொட்டு எடுத்த
முதல் பொருள் என்றால்
அது அவனின் பென்சிலும் ரப்பரும் தான்!
உயிரே போய் விட்டதாய் அன்று அவன் போட்ட சத்தம் ....
என் அம்மா மூக்குத்தி அம்மனாய்
கையில் கரண்டியோடு எனக்கு பத்திர காளியாய்
தரிசனம் தந்த நாள் !
என் அப்பா வரும் வரை
என் அம்மாவின் மடி - ஆசனம்
என் அண்ணனுக்கு மட்டும் தான் !

பிடித்து தள்ளி உக்காந்தாலும்
அவனின் இருக்கு பிடியில்
என் பிஞ்சு கைகள் பலமிழந்து நிற்கும் !
இவன் எனக்கு வேண்டாமே !
என்று நினைத்த நாட்கள் பல உண்டு !

என் mini skirt sleeveless shirt
மஞ்சள் பாவாடை தாவணி என்று பரிமாணம்
எடுக்க  ...அழகும் வெட்கமும் ஒன்றாய்
குத்தைகைக்கும் என்னை எடுத்த நாள் !

என் மஞ்சள் நீராட்டு விழாவில் என் அண்ணன்
என்னை தத்து எடுத்த தகப்பன் ஆனான் !
அன்று முதல் அவனுக்கு பொக்கிஷமாய்
நான் மட்டுமே ஆனேன் !

தங்கை ஒருத்தி இருக்கிறாள் ! என்ற சுப்ரபாதம்
என் அம்மா தினம் தினம் பாட ஆரம்பித்தாள் !
எனக்காக அவன் விட்டுக்கொடுத்து ஏராளம் !
வீட்டுக்கு வரும் நண்பர்கள் கூட்டம் குறைந்தது
சுற்றி திரிந்த தெருக்கள் வெரிச்சோடின !
கிண்டலும் கேலியுமாய் இருந்தவன்
பெண்களை ஏறெடுத்து பார்க்க தயங்கினான்

பொறுப்பு என்பது அண்ணனுக்கு மட்டுமே
உரிமையானது போல் நான் உல்லாச பறவை ஆனேன்
அண்ணனுக்கு செல்லமாய் இருந்த அம்மா
எப்பொழுதெல்லாம் சொல்லும் ஒரு வார்த்தை
அடுத்து வீட்டுக்கு போற பொண்ணு
நம்ம வீட்டில் சந்தோசமா இருந்துவிட்டு போகட்டும்
கொஞ்சம் விட்டு கொடுத்து போ என்று

விட்டு கொடுப்பதில் அவன் வள்ளலே ஆனான் !
திருமண பேச்சு அடி படும் வரை எனக்கு
தெரியவில்லை நான் நிரந்தரமாய் இருக்க போகிறவள்
இல்லை என்று ...
அன்று முதல் நான் என் சிறகுகள் சுருக்கி கூண்டு
பறவை ஆனேன் !
எடுப்பதில் இருந்த போட்டி எப்பொழுதெல்லாம் 
கொடுப்பதில் துவங்குகிறது !
என் கருவறை தோழன் என் மணவரையும் தாண்டி
கல்லறை வரை தொடர போகும் ஆருயிர் தோழன்
என்பதை நான் உணர்ந்த போது.......

நான் புரிந்து கொண்டது ஒன்று தான்

அண்ணன்  என்பவன் அடுத்த தகப்பன்
தங்கை என்பவள் அடுத்த அன்னை ...






[/left][/font]
[/color][/size]
« Last Edit: December 09, 2020, 09:54:20 AM by KuYiL »

Offline MoGiNi

ஒவொரு நிமிடத்தையும்
நீ எனக்காகவே செதுக்குகின்றாய்
உன் பக்கங்கள்
புரட்டப் படும்போதெல்லாம்
என் பாத சுவடுகள் ..
எட்டி நின்று கை குலுக்கும்
என் எண்ண அலைகளை
ஒரு பந்தத்தால்
சட்டென்று கட்டிப் போடுகிறாய்
ஒரு புள்ளியில் .

எதற்கும் அடங்காத
குதிரையின் கடிவாளங்கள்
உன்
வார்த்தைகளுக்கு
கட்டுப்பட வேண்டுமென
உன் ஒவ்வொரு நகர்விலும்
உணர்த்துகிறாய் ..

எனக்காக சுவாசிக்கும்
எனக்காக வாசிக்கும்
எனக்காக வசிக்கும்
உன் எண்ணங்களுக்கு சொந்தமாக
ஒரு வண்ணக் கிளியை தேடுகிறேன்
உன்னை வட்டமடிக்க
உன் வளங்களை வாரி கொள்ள

எத்தனை காலம்
என் இதயத்தின் அருகில்
காவல் இருப்பாய்?
இரவல் கேட்கிறார்கள்
கொஞ்சம் இளைப்பாறி போக ..
கிளைகளற்ற மரம் இது
கிள்ளைகள் பாடா மரமிது
கிளர்சிகளில்லா அசைவிது
இருந்தும் ஒரு பாலைவனத்தின்
பாதுகாக்கும் காவல் என நீ

எனக்காக காவல் காக்கிறாய்
எனக்காக கண்ணீர் சிந்துகிறாய்
எனக்காக கற்பனை காண்கிறாய்
ஏன் எனக்காக சுவாசிக்கிறாய்

எல்லாமாக இருக்கும் உன்னை
எனக்காக சிறைவைக்கும்
ஒரு எளிய உறவாக நான் இல்லை
என்  உடன் பிறந்தாலும்
ஏனோ சமயத்தில்
எனக்கு தாயுமானவன் நீ ..

ஒரு ஆணுக்குள் இருக்கும்
அன்னையென
நீ அரவணைத்த கணங்களில்
என் இருதய பறவை
சுதந்திரமாக சுவாசிக்க
தவறியதில்லை
என் தாயுமானவனே ...

இன்னுமோர் பிறப்பில்
உன்னை கருவினில் சுமக்க கேட்கவில்லை
இதே போல் உன் கைகளில்
தோள்களில் மடியிலனில்
குழந்தையாக மாறும்
உன் இனிய சகோதரியாக வேண்டுமடா ..

Offline SweeTie

தங்கச்சி  சொல்கையிலே  அண்ணன்  முகம் பூரிப்பான்
அவள் அன்புக்கு  நிகரில்லை   என்பான் 
ஆளுமைக்கு  ஈடில்லை  என்பான்
சந்தோஷ  மிகுதியில்   தங்கை     
தங்கச்சசிலைபோல  தகதகவென்றிருப்பாள்

அண்ணாச்சி  நானிருக்க  தங்கைக்கு  ஏது  குறை
என் மூச்சு உள்ளவரை   கண்போல  காத்துடுவேன் 
தந்தைக்கு  தந்தையாய்   அவளுக்காய்    வாழ்ந்திடுவேன்
தாயுமானவன்  என  பெயரும்  பெற்றிடுவேன்

என்  தம்பி   உள்ளான்  சண்டைக்கு  அஞ்சான்
தரணியில்  நானும்    மிடுக்கோடு     வாழ்வேன் 
அக்கா   கண்  சிவந்தால்   தம்பி கண்ணில்  நீர் சொரியும்
பாச மலர்கள்  இவர்கள் என்று பலரும் வாழ்த்தவேண்டும் 

அக்காச்சி  உருவத்தில்  காண்பது  அம்மாவின் சாயல்
அம்மாவின்   கருணையோடு  கலந்த கண்டிப்பு
வேஷம்  இல்லாத   பாசத்தில்    தெரியும்  பரிவு 
எனக்காக  பரிந்துரைக்கும்   சட்டத்தரணியும்  அவளே. 

 இணையத்தில்  இணைந்த    இதயங்கள்   இங்கே 
உணர்வுடன்   பழகும்   உறவுகள்     இங்கே 
நேசமாய்  அழைக்கும்    தங்கைகள்   இங்கே
அன்பாய்  பேசும்  அண்ணாக்களும்   இங்கே   

பாசமாய்   பழகும்   அக்காக்கள்  இங்கே 
பக்குவமாய் உரையாடும் தம்பிகளும் இங்கே 
உறவுகளை மதிக்கும்    உரையாடல்கள் கண்டு
 உள்ளம்  பூரித்து  போவாரும்  உண்டு  இங்கே

உடன் பிறந்தால் மட்டும்  உறவுகள் உறவல்ல
உள்ளங்களில்   நிரம்பும்  அன்பால்   உருவாகும்
உடன் பிறவா  உறவுகளும்   உறவுகளே   !!!!
வளரட்டும்  நமது  இணையத்தின்  சகோதர  பாசம்
 

Offline JeGaTisH

அக்கா என்று அழைப்பதனாலே
அன்னையின் மறு உருவம் ஆனாளோ !

அன்னை மடியில் துயில் கொண்ட  என்னை
தோழ் மீது சுமந்தாள் என்  அக்கா
 அவள்  தோழனும் ஆகி நின்றேன் நான்.!

ஓர்  தாய் வயிற்றில்   பிறந்தோம் நாம்
அன்பாய்  ஒன்றாய்  வளர்ந்தோம்  நாம்
தம்பி    என்மேல்  கருணை மழை
பொழிவாள்   எனது    அன்பு  அக்கா

குட்டி குட்டி சண்டைகளும்   
அடிக்கடிவரும் செல்லக் கோபங்களும்
ஐந்து  வினாடியில் மறைந்துவிடும்
பாசம் எங்களை பற்றிக்கொள்ளும்

பிறர் முன்  என்னை   விட்டு கொடாமல்
மிகவும் நன்றாய் மெச்சிடுவாள்   
தவறுகள்  செய்தால் தாயை    போன்று
கண்டித்து  திருத்துவாள்   என்  அக்கா

கோவம் கொண்டால்  கடலென  சீற்றம்   
கொவை பழம்போல் கண்கள்  சிவக்கும்
பயந்து  நானும் ஓ ....... வென  அழுவேன்.   
கட்டியே    அரவணைப்பாள்    அக்கா
நானும் குழந்தையாய்   சிரிப்பேன்

இவ்வுலகில் தாய் போல பாசத்தை
அவள் போல  கொடுப்பாரில்லை
அன்புக்கு ஒரு தேவதை  அக்கா
ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் அக்காக்கள்
 அம்மாக்களின்  மறு   உருவமே !