Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 267  (Read 2086 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 267

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: May 30, 2021, 11:55:46 PM by Forum »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
அந்தி பகல் முன்னிரவு காத்து
கிடந்தேன் நிலவொளியில்!
எதிர்கால கனவுகளோடு நான்
நிறைவேறும் ஆசையோடு நீ!!
கண்ணே சீக்கிரம் வந்து விடு......

 இரவு விருந்திற்கு மேசையை
 பதிவு செய்து அலங்கரித்தேன்!
 நிலவொளியின் ரம்மியமான
 வெளிச்சத்தின் நிழலில் அமர்ந்து
 உன்னுடன் தனிமையில் நேரம் செலவிட....


 உன்னுடன் அழகில் போட்டி போட
 வானில் நட்சத்திரங்கள் வந்தனவே!
 நீ வருவாய் என அந்தி பொழுது நிலவோ
 மேகத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறதோ!!
 உன் வருகையின் நினைவில் மண்டி போட்டு
ஒத்திகை பார்ப்பதாய் கனவு   காண்கிறேன்!!!
 கனவு நிஜமாகும் எதிர் பார்ப்பில்.....

                                                                                    இவன்
                                                                                  -  எஸ்கே
« Last Edit: May 18, 2021, 08:11:15 PM by YesKay »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰
   
💖காதல்! என்ற ஒரு வார்த்தையால் என் மனதை கொள்ளையடித்தவளே!

💖என் இதய வாசலில் நிரந்தரமாக குடி புகுந்தவளே!

💖தேயாத நிலவாய் என்னுள் நிலைத்தவளே!

💖என் வாழ்க்கைத் தோட்டத்தில் வாடாத பூவாய் தினம் மலர்பவளே!

💖 உன் விழிகளின் அம்புகளால் என்னை விடாமல் தாக்குபவளே!

💖 மௌனம் என்ற மொழியால் என்னை சிறைபிடித்தவளே!

💖உன்னில் என்னை பார்க்கிறேன்!

💖 உன்னை சேர தினம் துடிக்கிறேன்!

💖உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னோடு வாழ ஏங்குகிறேன்!

💖எத்தனை முறை முயன்றாலும் உன்னிடம்
இருந்து திருப்ப முடியவில்லை  அடகு வைத்த என் இதயத்தை!

💖ஆண்டுகள் பல கடந்தாலும் !

💖கூந்தலின் நிறம் மாறினாலும்! 

💖மேனியில் சுருக்கங்கள் விழுந்தாலும்!

💖இளமை மறைந்து முதுமை தோன்றினாலும்!

💖 மரணம் வரை உன் மீது கொண்ட அன்பு மாறாதடி என் காதலியே!

💖என்றும் உன் நினைவுடன் உன் காதலன் !   ❤️❤️❤️   

Offline இணையத்தமிழன்

அவளுடன் எனதுஇரவு

சில்லென்ற ஈரக்காற்று வீசிட
கடற்கரை மணலிலே நடைபயில
 
என்னவளோ  எதிர்முனையில்
ஒரு இரவில்  இரட்டை நிலவாய்
என்னவள் என்முன்னே !!

மனமோ  ஏங்கிட
மதியோ மயங்கிட

உன் கைகோர்த்து உன் தோள் சாய்ந்து
கதைகள் பல பேசிட  இரவினை ரசித்தோம்

என்னங்க  என்று
நீ அழைத்திட  :D
இவ்வுலகையும்  மறந்து
உன் மடிசாய்ந்தேனடி

உணவும் பரிமாற
உண்டு மகிழ்ந்தோம்
பழரசத்தில் இறுகுழலிட்டு இருவரும் பருகிட 
உன் கண்களைநோக்கிட வெட்கத்தில்
கன்னமும்  சிவந்திட

எந்தன் கைவிலங்கில் நீ கிடைக்க
உந்தன் பூவிதழும்  சுவைத்தேனடி  :-*

பழரசமும்  தோற்றதடி
உந்தன் இதழ்ரசத்தில்  ;D ;D ;D

கண்களும் கலங்கின
நினைவில் மட்டும் நீ இருக்க
நிஜத்தில்  ஏனோ இல்லாமல் போனாய்
:'( :'( :'(
எனது அருமை காதலியே
என்றும் உனக்காக காத்திருப்பேன்

கனவுகளோடு அல்ல
உந்தன் நினைவுகளோடு

                                        -இணையத்தமிழன்
« Last Edit: May 16, 2021, 05:12:32 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !

ஓர் மீளா நீள் கனவு...

கார் இருள் வான்...
மின்னும் தாரகைகள்
பொன்னாய்  வட்ட‌ நிலவு..
குளிர் காற்றின் ஊதல்..
தளிர் பூவின் வாசம்..
மேகத்துண்டில் மேசை..
தேகம் அமர‌இருக்கை...
தோரணங்கள் காற்றில் ஆட...
காரணமின்றி உன்னை தேட..
தேன்பொழுதில் உன் வரவுக்கு
நான் தவித்து காத்திருக்க...
எதிர்ப்பார்ப்பில் இதயம் எகிர
கசியுமொரு காதலை பகிர...
நம் திரைகள் கிழிய..
கண்களில் கனவு வழிய...

காத்திருக்கிறேன்...

இமைகளில் துளிகள் உலர...
இணையும் உள்ளம் மலர...
கைகள் ஒன்றாய் கோர்க்க...
சைகைஇன்றி உடல் வேர்க்க...
படபடக்கும் நெஞ்சத்தை
பதறி பிடித்தபடி..
மடமடவென நீ உரைக்கும்
காதல் நொடிகளை..
காலமெல்லாம் கேட்டு கொண்டிருக்க...

காத்துக்கொண்டிருக்கிறேன்...!



« Last Edit: May 16, 2021, 06:15:34 PM by AgNi »

Offline MoGiNi

இருள் குவிந்த
மாலைப்பொழுதில்
குமிழ் கசிந்த
மெல் ஒளியில்
ஓர்
உருகும் மெழுகென நான்
உருக்கும் நெருப்பென நீ ..

சில கற்பனைகள்
களைந்து
உன் கைகள் நீவி
ஸ்பரிசம் நுகர்ந்து விட
துடிக்கும் விரல் நகர்வுகள்

ஆத்மார்த்தமான
பார்வை ஆலாபனைகள்
கடந்து
நீண்டு கிடக்கிறது
கைகளின் ஸ்பரிசம்

காலம் கடந்து
காவல் கிடந்தனவோ
பிரிய மறந்து
ப்ரியமாக ...

மதுவிலும்
கிறக்கம் தருவதாயிருக்கிறது
உன் காதல் ஆலாபனைகள்..
எத்தனை நாளிகை
விரல்களுக்குள்
நகர்வதாய்
உத்தேசம் ?

குறை கிடக்கும்
மதுக் கிண்ணங்கள்
நம்
இதழ்களின் ஸ்பரிசத்துக்காய்
ஏங்குவதாக புலம்பல்..

எனினும்
நிறைந்து வழிகிறது
மனது...
நீ  நான் நிலவு,
நீளும் இருள் என .....

Offline thamilan

மங்கியதோர் இரவினில்
மதி மயங்கும் முழுமதி ஒளியினிலே
மங்கையவள் அழகினிலே
மனம் முழுக்க காதலுடன்
காத்திருந்தேன் அவள் வருகைக்காக

என் நல்ல நண்பியவள்
நண்பர்களாகத்  தான் பழகினோம்
எது சொன்னாலும் கோபப்படவே மாட்டாள்
நாங்கள் பேசுவதை பார்ப்பவர்கள்
காதலர்கள் என்றே எங்களை நினைப்பார்கள்

நட்புக்கும் காதலுக்கும் இடையில் இருப்பது
மெல்லிய கோடு தானே
சுவரையே தாண்டும் எங்கள் மனதுக்கு
கோட்டைத் தாண்டுவது கஷ்டமா
என்றும் நாங்கள் வரம்பு மீறியதில்லை
பேச்சிக்கு பேச்சி பதிலடி கொடுப்பதில்
வல்லவள் அவள்

அன்பாக பேசுவாள்
உரிமையுடன் கண்டிப்பாள்
நல்லது செய்தால் தட்டிக்கொடுப்பாள்
தவறு செய்தால் தட்டிக்கேட்பாள்
அவள் அன்பில் என் மனம்
அவள் பால் சென்றது
நட்பு இருந்த இடத்தில் காதல்
ஒட்டகம் போலே உள்ளே நுழைந்தது


என்காதலை எப்படி சொல்வது
என்ன நினைப்பாளோ
ஏற்றுக்கொள்வாளோ இல்லை
ஏறெடுத்தும் பார்க்க மறுப்பாளோ
குழம்பித்தவித்தேன் நான்

எத்தனை  நாள் தான்
மதில்மேல் பூனையாக தவிப்பது
சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தேன்
ஒரு அந்தி மாலையிலே
சந்திக்க வேண்டும் என்று செய்தி அனுப்பினேன்
வருவதாக பதில் அனுப்பினாள்

காத்திருக்கிறேன் அவளுக்காக
வந்தாள் அவள்
அந்த மெல்லிய இரவிலே
நிலவில் ஒளியிலே
அலைபாயும் கூந்தலுடன்
தேவதை போல காட்சியளித்தாள்
எனது கண்களுக்கு

ஏன் என்னை வர சொன்னாய்
என்பது போல ஏறிட்டு பார்த்தாள் என்னை
அவள் முன்னே மண்டியிட்டேன் நான்
அவளுக்காக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை
அவள் முன்னே நீட்டி
உன்னை காதலிக்கிறேன் என்னை ஏற்றுக்கொவாயா
என்று காதல் ததும்பக் கேட்டேன்

அவள் திகைப்புடன் என்னை நோக்கினாள்
பதில் சொல்லமுடியா அதிர்ச்சியில் நின்றாள்
தலை குனிந்தவண்ணம்
அவள் கைவிரலை நீட்டினாள்
அதில் நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது

நேற்று தான் வீட்டில் பார்த்த வரன் வீட்டார் வந்து
மோதிரம் போட்டார்கள்
உனக்கு சொல்ல முடியவில்லை
இன்று சொல்லலாம் என்றிருந்தேன் என்று
பரிதாபமாகப் என்னைப்பார்த்து சொன்னாள்

சிலையானேன் நான்
என கற்பனை கோட்டைகள்
விழுந்து சிதறின 

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
சற்றும் நான் எதிர் பார்க்காத..
அழகிய  தருணம் இதுவன்றோ...
நீ என்னை.. இங்கு... இந்நேரம்...
வாவென அழைப்பாய் என்று..

நம் முதல் முத்தான அறிமுகம்..
என் ஆழ் மனதில் என்றுமே.. 
மறையாது..மாறாது...  பதிந்தன...
கருங்கல்லில் கல்வெட்டென...

நீ என்னிடம் பேசிய முதல் சொல்...
இன்று.. இன்று.. வரை நான் மறவேன்...
அது உன் கோபத்தின் உச்சத்தில்.. 
உதிரிந்த சூடான தீ பொறியல்லவா..

ஏன்! என்மீது இப்படி ஒரு கோவம்..
ஏன்!! ஏன்!!! இப்படி ஓர் வெறுப்பு...   
பல நாள் தவித்தேன்... துடித்தேன்...
நெருப்பில் விழுந்த புழுவென...

அதன் பின்னும், ஒவ்வொரு சந்திப்பிலும்..
எனை காயப்படுத்தினாய்..
உன் உஷ்ணம் கொப்பளிக்கும்..
அழகிய வார்த்தைகளால்.. 

அத்தருணம் எல்லாம்..  என் நெஞ்சமோ...
கடும் காற்றாற்று வெள்ளத்தில்..
சிக்கிய தவிக்கும் கூழாங்கல் என ..   
பதறி.. சிதறி சில்லு சில்லாய் நொறுங்குமே...

ஆனாலும்.. உன்னையும் பிடிக்கும்..
உன் கோபமும்..  எனக்கு மிகவும் பிடிக்கும்..
உன் கோபத்தின் வேகமும் . ஆழமுமே.
உன்னை எனக்கு உணர்த்தியது.. நீ யாரெனெ...

இன்று,..
உண்மை எதுவென.. நீ உணர்த்தாய்..
உன் மனதை காயம் படுத்தியவள்..  நான் இல்லையென.. 
இதுவே போதும் எனக்கு. .உன் சுந்தர நேரங்களை..
கலைக்கும் காரிகை நான் இல்லையென..

நிலவின் ஒளியில்..
நிஜமறிந்த நீயோ... உன் தவறுகளை உணர்ந்து...
என் விழிகளை சந்தித்த ..  உன் முதல் பார்வை..
உன் விழிகளில் வழிந்த... முதல் கண்ணீர் துளிகள் 
உயிரே.. நீயே என் வாழ்வென உணர்ந்தேனடா...

விண்மீன்கள் என்னை நோக்கி கண்கள் சிமிட்டிட.
கரிய காரிருள் சூழ்... நட்ட நடு இரவில்..
வெண்ணிலாவின் ஒளியில்.. நீயும் நானும் தனியே...
உணர்த்தினாய்.. உணர்கிறேன்... உன்னுள்ளும் நான்....

« Last Edit: May 18, 2021, 11:51:31 AM by TiNu »

Offline இளஞ்செழியன்

அளவான சிரிப்பில் மறைத்து வைத்த
ஓரு பதற்றத்தோடு
அத்தனை நளினம் கூடிடத்தான் பேசினாய்
முதன்முதலில் என்னோடு

முடித்துவிட முடியா
உரையாடல் ஒன்றை
இயல்பு முறித்து
போலியாய் கூட்டிய மிடுக்கோடு
முடித்துக் கொள்ளுகையில்
காலங்கள் நீண்டிடப்போகும்
ஆத்மார்த்த உரையாடல் அதுவென்பதை
உணர்ந்திருந்தேனில்லை

உன் அகராதியின்
அட்டவணை முழுமையிலும்
அன்பின் குறியீடுகளிட்டே
வைத்திருந்திருப்பாய் போலும்

கனிவின் வனாந்தரங்களில்
பொறுக்கியெடுத்த சொற்கள் கொண்டு
துயர் கரைத்து மகிழ்வு பெருக்கும்
அன்பின் குரல் உன்னுடையது

மனம் வருடி
ஆன்மாவை உயிர்ப்பிப்பவை
‘உன் அழைப்புகள்’
அரவணைப்பாலான இளைப்பாறல்கள்
‘உன் பதில் மொழிகள்’

பொருந்திடாதென்றே தான்
கோபத்தில் உன் குரலை
மொளனங்கள் காத்து நிற்கும்

ஆழகு பேரழகு என்பதையெல்லாம்
கண்ணும் கழுத்தும் செவியும் இதழும்
குழலும் கன்னமும் நாடியும் நாசியும் கூடிட
உன்னை ஒப்பிட்டு
விவரித்திடுவேன் கண்ணம்மா

ஒப்பிடுகளில் சிக்கிடா
உன் உள்ளத்தழகை எப்படி விவரிப்பது
என உன்னிடமே கவலையுறுகிறேன்

உனக்கு காதல்
அன்றி வேறொன்றுமில்லை போடா
என சிரித்துப் போகிறாய்.
பிழைகளோடு ஆனவன்...

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
உப்பரிகையில் உன்னுருவம் காண
 உறக்கம் தொலைக்கிறேன்
உன்னை உற்று பார்க்கையில்
உணர்வுகள் உள்ளூர்வதேன்

உன் நினைப்பில் நாளும்
உன்மத்தம் ஆவதேன்
உன் உற்சவம் கண்டுவிட்டால்
உள்ளம் களிகொள்வதேன்
 
உன் நினைவாலே நாளும்
உதிரம் உஷ்ணம் ஆவதேன்
உன் பொன்மேனி காண்கையில்
உரோமம் சிலிர்ப்பதேன்..

உன்னுதயம் நாளும் காண
உபாயம் தேடி அலைகிறேன்
உத்தமமான தீர்வுக்கு
உசிதமாய் யோசிக்கிறேன்..

உன் உற்றவனாகி விட 
உத்தேசமாய் யூகிக்கிறேன்
உண்னிலும் மாற்றமேற்பட்டு
உணர்வுகள் வந்து...

உன் உக்கிர விழியால்
உன்னவனை கண்டுவிடு
உமாபதியாய்  உலகில் உயிர்வாழ
வார்த்தையொன்று உமிழ்ந்துவிடு..

உல்லாச உலகே நீயென்பதன்
உரிமையை உணர்த்திவிடு
உனக்கும் எனக்குமான உறவை
உருக்கமாய் உறைத்துவிடு ...


நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்களின் புதுமை கவிஞன் சுதர்...

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்