FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Yousuf on December 20, 2011, 01:35:30 PM

Title: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: Yousuf on December 20, 2011, 01:35:30 PM
(http://2.bp.blogspot.com/-_BFDk__KtXk/TsNMCf0BGaI/AAAAAAAAHUo/DgbU00jpYIc/s200/youtube+upload_logo.png)

கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.

இந்த முறையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை  யூடியுப் கணக்கில் கொடுத்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

    முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள்.

    யூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில் Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

    இதில் கீழ் பகுதியில் Upload HD videos in various formats in 15 minutes என்ற செய்தி இருக்கும். அதற்க்கு அருகில் Increase your limit என்ற ஒரு லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.



(http://2.bp.blogspot.com/-b-Tea0vXTM0/TsM_Kexz_6I/AAAAAAAAHUI/k58bDruDqvY/s640/length+video+files+upload+on+youtube.png)
length video files upload on youtube

    உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நாட்டினை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும்.

(http://3.bp.blogspot.com/-blB1QupG0ts/TsND79JYR2I/AAAAAAAAHUQ/n5FpmI1z9Q4/s1600/increase+your+upload+limit.png)

    மொபைல் நம்பரை கொடுத்தவுடன் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வந்திருக்கும். அதில் Verification Code அனுப்பி இருப்பார்கள்.


(http://1.bp.blogspot.com/-0L81B2TkszU/TsNF34IgtyI/AAAAAAAAHUY/rUj0A7YyoSY/s400/increase+your+upload+limit-verify.png)

Verify பட்டனை அழுத்தியவுடன் உங்களின் யூடியுப் கணக்கில் உங்களின் மொபைல் எண் சேர்க்கப்பட்டு விடும்.

(http://2.bp.blogspot.com/-BH1fHhMUQBk/TsNJjUenTKI/AAAAAAAAHUg/roKKq08Zyqk/s400/increase+your+upload+limit1.png)

இனி யூடியுபில் அப்லோட் பகுதிக்கு சென்றால் 15 நிமிட லிமிட் என்ற செய்தி மறைந்து இருப்பதை காணலாம். இனி நீங்கள் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களை நேரடியாக யூடியுபில் அப்லோட் செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

டிஸ்கி: சொந்த வீடியோக்களை மட்டும் பகிரவும். திரைப்படங்களை பகிர்வது குற்றமாகும். மீறினால் தண்டிக்கப்படலாம்.

Title: Re: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: செல்வன் on December 20, 2011, 02:32:27 PM
பெரிய வீடியோ கோப்புகளை Youtube இல் Upload செய்ய நினைபவர்களுக்கு இந்த தகவல் மிக பயனுள்ளதாக இருக்கும். எளிதான அதே சமயம் பயனுள்ளதான தகவலை தந்த உங்களுக்கு நன்றி யூசுப்.
Title: Re: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: Yousuf on December 20, 2011, 04:54:06 PM
நன்றிகள் செல்வன்!
Title: Re: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: gab on December 20, 2011, 08:54:28 PM
Good and useful information  yousuf machi. Hope neraiyaperuku ithu usefulla irukum. Thanks yousuf machi.
Title: Re: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: Yousuf on December 20, 2011, 09:00:20 PM
நன்றி GAB மச்சி!
Title: Re: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: ஸ்ருதி on December 20, 2011, 09:20:16 PM
wow very usefull information...


youtube la enaku earn revenue user-a add panitanga...so nan yevlo vendumnalum
upload pannalam...

en friends ku ithai Recommend panuven...

thanks usf
Title: Re: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: Yousuf on December 20, 2011, 09:32:47 PM
நன்றி சகோதரி ஸ்ருதி!
Title: Re: 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய!
Post by: benser creation on January 29, 2012, 01:52:15 AM
நல்லதொரு தகவல் யூசுப் மச்சான் (http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/ca668c39.png)