FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Ayisha on October 14, 2018, 01:39:14 PM

Title: பைசைக்கிள் க்ரஞ்சஸ் பயிற்சி
Post by: Ayisha on October 14, 2018, 01:39:14 PM
(https://i0.wp.com/tamilmedicaltips.com/wp-content/uploads/2015/11/bfbe7d02-d54b-4c74-af9e-808e570862b0_S_secvpf.gif?resize=298%2C225)

30 வயதை நெருங்குவதற்குள் பெரும்பாலான பெண்களுக்கு, வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம்.

அதிகப்படியான கலோரியை எரிக்க பைசைக்கிள் க்ரஞ்சஸ் பயிற்சி பெரிதும் உதவுகிறது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்தபடி உயர்த்த வேண்டும். தலையை சற்று உயர்த்தி, கைகளை மடித்து தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். இப்போது, வலது கை முட்டியை இடது கால் முட்டியைத் தொடுவதுபோல் கொண்டுவர வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்பி, இடது கை முட்டி வலது காலைத் தொடும்படி செய்யவும். இது ஒரு செட். இதுபோல, 10 முதல் 15 முறைகள் செய்ய வேண்டும்.

பலன்கள்: அதிகப்படியான‌ கலோரி எரிக்கப்படும். இதனால், உடல் எடை குறையும். வயிறு, தொடைப் பகுதி தசைகள் இறுகி, உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கும்.