FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 24, 2018, 11:21:24 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: Forum on November 24, 2018, 11:21:24 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 205
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/205.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: Guest 2k on November 25, 2018, 09:17:43 AM

தனிமையின் நிழல்

பூக்கள் உதிரும் ஒரு மழைநாளில்
என்றென்றைக்குமாய் நீ விட்டுச் சென்ற
நினைவின் எச்சங்களை
தொட்டுச் செல்கிறது ஒரு சிறு பறவை
முடிவற்ற தேடலில் தொலைந்து போகும் சாத்தியம் கொண்ட அப்பறவையின்
இளப்பாறலுக்கு உன் நினைவுகளை
பரிசளிக்கிறேன்
உன் சுயமும் உன் பிம்பமும்
எனை கலைத்துப் போடும் ஒவ்வொரு நொடிக்கும் புதியதொரு ரணத்திற்கு
தயாராகிறேன்

நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையின்மைகளுக்கும் இடையில்
தூண்டில் புழுவினை தொடும்
துடுப்பற்ற மீனாகி அலைகிறேன்
தூரங்களுக்கும்
தூரமின்மைகளுக்கும் இடையில்
உன் ஸ்பரிசம் தேடி திரியும்
சிறு பூனையென
முடங்கி கிடக்கிறேன்
இருளடங்கி விடியும் பொழுதில்
வெளிச்சக்கீற்றென நீ வந்து நிற்பாய் என நான் நம்பும் பாதையின்
நிச்சலனம் உணர்த்தும்
இந்த தனிமை தீராதென

திரும்பவும் ஆரம்பிக்க முடியாத,
எல்லையை கடக்கவும் முடியாத
சிக்கலான ஒரு வழித்தடத்தில்
தொக்கி நிற்கும் மனதிற்கு
முடிவிலியான பாதையின் நீளத்தை அளப்பதென்பது வீணென அறிவிப்பது எங்ஙனம்?
உன் விரல் கோர்த்து பிரிந்த கைகளில்
மிச்சமிருக்கும் இந்த வியர்வை வாசனை
தரும் வாதையிலிருந்து
இனி நான் தப்பிப்பது எங்ஙனம்?
தனிமை அடர்ந்திடும் பின்னிரவுகளுக்கு
கொடுக்கவென மீதமிருப்பது
இவ்வாசனைகள் தான்
இப்பாதையின் முடிவின்மை தான்

ஒரு பார்வையும், ஒரு புன்னகையும், ஒரு மௌனமும், மீதமிருக்கும்
இந்த காதலும்
முற்றுப்பெறாத இடைவெளிகளை நிரப்பும் அக்கணம்
நிழலென நீ விழும் நிலத்தில்
நிஜமென நான் நின்றிட வேண்டும்.

இந்த
காதல் மரத்தின்
உதிரும் இலை நீ
காயும் சருகு நான்..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: Evil on November 25, 2018, 11:02:37 AM




என் மனதை எங்கோ  தொலைத்துவிட்டேன் உன் கண்களில் கலந்துவிட்டேன் என் அன்பே !!!

என் கனவிலே உன் நினைவு தன்னை  தேடிக்கொண்டு அலைந்துவிட்டேன் என் அன்பே !!!

என் வாழ்க்கையை தொலைத்து உன்வாழ்க்கையை  எனதாக்கினேன் என் அன்பே !!!

காலையில் தோன்றிடும் கதிரவனின் ஒளி  என் மேல் விழாமல் என்னை காப்பாற்றினாய் என் அன்பே !!!

விண்வெளியில் ஆயிரம் ஆயிரம் விண்மீன்கள்  இருந்தாலும் என்னை மட்டும் நிலவாய்  மாற்றி  தனிமை படுத்தியதேனோ என் அன்பே !!!

காடுகள் போன்று இருந்தவனை மரங்களை அழித்து  என்னை மட்டும் அழிக்காமல் தனிமையில் வாட   விட்டது ஏனோ  என் அன்பே !!!

என் இருதய மரத்திலிருந்து  இலைகள் உதிர்வதை போன்று உதிரம் உதிர்கிறதேனோ என் அன்பே!!!

`இரவினில் கரைந்திடும் நிழலை போன்று ஆனாதடி என் உள்ளம்  என் அன்பே !!!

என் மனதை  அறியாமல் உன் மனம் மாறியதேனோ உன்னால் நான் வடியதேனோ என் அன்பே!!!

வண்ணங்களை இழந்த வானவில்லை போன்று ஆனேனடி என் அன்பே !!!

என்  மனதை கல்லாகி என் வாழ்க்கையை தொலைத்து தனிமரமாய் ஆனேனடி என் அன்பே !!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: regime on November 25, 2018, 05:32:08 PM
என்  காதல்..! 

கடலின் ஆழம் தெரிந்த எனக்கு
காதலின் ஆழம் தெரியலையே
ஆழம் பார்க்கத்தான் ஆசை
சுழலில் மாட்டினால் என்கதி ?

கரைக்கு வந்தவன் கண்டது
கண்ணெதிரே ரோஜாவை ...
மொட்டாகி நின்றவள் இதழ்
விரித்தாள் ...மெலிதாய் அவள்
முணுமுணுத்தாள் ... தோர்ர்ர்ர்

இப்போது தெரிந்தது எனக்கு
கடலின் சுழல் குறைவுதான்
இவள் காதலின் சுழல்
கஜாவை விட என்னை
கடுமையாய் தாக்குகிறதே ..

காதல் என்பது மரமானால்
அதன் நிழலில் , அவள் நினைவில்
இளைப்பாற இரவுதான் சரியோ
ரோஜா ...    தோர் மீது வீசும்
உன்   குளிர்   காற்று ..

நீ ரோஜாவல்லவா உனக்கு
இரவுதான் சரி ..பகல் வந்தால்
பாவம்    நீ   கருகிபோவாயே
இரவே..    நீண்ட  இரவே
காதல் மரத்தில் நிழல்வேணும் 
ரோஜாவின் மனதில் இடம் வேணும்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: JasHaa on November 25, 2018, 09:56:43 PM
ஆணின்  ஒரு தலை  காதல்

உன்னை  கண்ட நொடியே
காதல் கொண்டேனடி 
உன்பெயர் அழகினிலே
அருகில் என்பெயரும்அழகாகுதடி
உன் நயன பாஷையில் 
திக்கி  திணறி  போனேனடி  ...
உன் கருவிழி   அசைவினில்
 நானும் தென்றலாய் அசைத்தேனடி...
கவிதை சொல்லும்  உன் பாங்கினில்
 நான்  கிறுக்கனாக  அலைத்தேனடி  ...
காதல் கண்டவுடன்  வருவதடி 
காதலிக்க தெரிந்த மனம்
காதல் சொல்ல தவிக்குதடி...
காதலை புரியாத புதிரின் புதுவடிவே
உணர்வுகளின்  குவியல்  அது
என் உணர்வுகளை வாரி எடுத்த
உன் விழிகளுக்கு  ஆழம் புரியவில்லையடி 
நீ புறக்கணித்தாலும்  என் காதல் புனிதமே ...
பூக்கள்  உன்  கூந்தல் சேர ஆவல் கொண்டேனடி
புரியாதகாதல் கல்லறையை   சேரட்டுமடி பெண்ணே  !!!
 



இக்கவிதை  சமீபத்தில்  கண்ட ஒரு   ஆணின் கண்ணீற்கு  சமர்ப்பணம் ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: பொய்கை on November 26, 2018, 01:01:02 AM
காதலித்து தோற்றமனம்
காண்பதற்கு கருப்பு - இன்று 
காதல் என சொன்னாலே
மனசுக்கு வெறுப்பு

காதலித்து கைபிடித்தல்
காதலுக்கு சிறப்பு -என்றும்
காதலை கொல்பவரை
கண்டு முகம்  திருப்பு

காதல் தோற்றுவிட்டால்
இருவருக்கும் பொறுப்பு -நல்ல
காதல்கொண்ட மனங்களை
விழுங்கிடுமே நெருப்பு

காதலில் தூது போன
காகிதங்கள் துருப்பு – கள்ளி
இத்தனைநாள் நான்வாழ்ந்த
உன் இதயமதை அனுப்பு

காதல் கனியும் ஒருநாள்
எனக்குள்ளே நெனப்பு- அடிவாடி
காதலெனும் நதியினிலே
போட்டிடுவோம் துடுப்பு....
போட்டிடுவோம் துடுப்பு....

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: RishiKa on November 26, 2018, 08:33:25 AM

காதலுக்கு விடை சொன்ன காதலியே!
உன் வருகைக்காக ...
நானும் என் காதலும் ....
காத்து கொண்டு இருக்கிறோம் !

நீதான் பார்வையில் ...
நேசம் நெய்தாய்!
பின் வார்த்தையில்..
கோப கனிகளை கொய்தாய்!

இதழ்   புன்னகையால்
தூண்டிலை வீசினாய் !
ஆனால்...
உன்னை மாட்டி விட்டதாய்...
என்னை ஏசினாய்..

காதல் உணர்வுகளை....
வீணை நரம்பாய் மீட்டினாய்....
நீயே என்னை
இரும்பு மனம் என  சாடினாய் !

இதய சிறையில் என்னை
வைத்து அடைத்தாய்!
நான் உன்னை கைதி ...
ஆகி விட்டதாய் காட்சி படைத்தாய் !

என்றும் காதல்   தேசத்தில்.
குற்றம் செய்தவள் நீ..
ஆனால்
தனிமை  தண்டனை ..
அனுபவிப்பவன்  நான் .

உன் வருகைக்காக ...
நானும் என் காதலும் ....
காத்து கொண்டு இருக்கிறோம் !


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: JeSiNa on November 26, 2018, 06:52:56 PM
மனதின் வலியால் துடிக்கிறேன்
காரணம் இல்லாமல் அழுகிறேன் ..!!
தொலைந்து போனதா இல்லை
தொலைத்து விட்டேனா  என்று
தெரியவில்லை ...!!

தனிமையும் ஒரு சுகம்தான்
நீ இருந்த நாட்களில்...!!
என்னை விட்டு சென்ற பாதையில்
உயிர் இல்லா ஜடமாய் இருக்கிறேன்
நீ இல்லா நாட்களில்...!!

எனக்காக நீயும்
உனக்காக நானும் வாழ்ந்த
காலங்களை நினைத்தேன் தனிமையில்...!!
காதல் விதைத்த செடி
இன்று மரமாய் வளர்ந்து
நிற்கிறது  தனிமையில்...!!

காதல் தந்த அன்பை
ஏற்றுக்கொண்ட இதயத்திற்கு...!!
வலிகளை சுமக்க தெரியவில்லையே
இரவும் பகலும் மாறுமே
என் வாழ்க்கை மட்டும் மாறுமோ ..??

என்றோ ஒரு நாள் உன் கண்ணில்
எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் வரும்...!!
அன்று என் காதல் வெற்றிபெறும்...!!

இப்போதெல்லாம் தனிமை
எனக்கு பிடித்திருக்கிறது ...!!
அங்கு என் மனதை காயப்படுத்த
யாரும் இருப்பதில்லை...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 205
Post by: SweeTie on November 27, 2018, 08:04:37 AM
போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தனைப்போல்
காதல் மரத்தடியில்  காத்திருக்கும்   காளை  இவன்
போதை மிகுதியினால்  தன்னிலை  மறந்தேனோ
பேதையவள்  இதயத்தில் இருப்பதையும் மறந்தேனோ

கார்காலப் பொழுதினிலே  கண்மயங்கும் வேளையிலே
நீராடப்  போனவளை இன்னமும்தான் காணேனே
நேராகவே வந்து மாமன் எனை  அணைப்பாளோ
சூடான மேனியின் சுகந்தத்தில்  மிதப்பேனோ   

உடலின் திசுக்கள் எல்லாம்  உறங்கிபோகிறதே
தொண்டையில் சுரப்பிகளும் செயலிழந்து போகிறதே
காதல் நரம்புகளும்  சுளுக்கி  வதைக்கிறதே
பேதையிவள்  வரவை  மனம் தேடி அலைகிறதே

காதலெனும் பாடத்தை  உன் கண்களினால் கற்பித்தாய்
உறவென்னும் அர்த்தத்தை  உணர்ச்சிகளால் ஒப்பித்தாய்
வாழ்வின்  வசந்தத்தை  தேடி  நான்  அலைகையிலே
வாழ்க்கையே நீயாக  வரமாக வந்தவளே

தேன் மதுரத் தமிழ் மொழியில் திகட்டாமல் பேசிடுவாள் 
மது உண்ட வண்டாக துடிதுடிக்கும்  என் மனசு
வான் நிறைந்த  தாரகையில்  ஒரு வெள்ளி விடிவெள்ளி 
என் கண்ணளந்த  பெண்களிலே  அவளே  என் உயிர்கொல்லி

கணப்பொழுதும்  பிரியேன் என கையெழுத்து  போட்டவளே
கல்லறையில்  போனாலும்  வருவேன் கூடவே என்றவளே
காத்திருக்கும் நாழிகைகள்  யுகங்களாய் தெரிகிறதே
சேர்ந்திருக்கும்   பொழுதெல்லாம்  கணங்களாய்  கரைகிறதே