FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 08, 2018, 11:49:11 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: Forum on December 08, 2018, 11:49:11 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 207
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/207.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: யாழிசை on December 09, 2018, 12:37:35 AM
கைகோர்த்து நடந்த 
காலங்கள் கனவிலே சென்றன...
காரிருளில் கனவுகள்தான்
கவிதை ஆகின....
கடைக்கண் பார்வை எட்டாத தூரத்தில்
காலடித்தடங்கள் காணாமல்.....
நீ எங்கோ;  நான் இங்கே...

விடியலை நோக்கி நீயோ
கண்காணா தொலைவில்....
விடிந்தும் கண் துயிலாமல்
நானோ, நம் கண்மணிகளோடு...

நிழல் படத்தில் பிரிவை சந்தித்த நாம்
நிஜத்தில் கரம் கோர்க்க
நித்தம் நித்தம் நித்திரையிலும்
நினைக்க தவறுவதில்லை அன்பே உன்னை ...

நேசிப்பவர்கள் எல்லாம் நிலைத்து விட்டால்
நினைவின் பலமும் பிரிவின் வலியும்
தெரியாமல் போயிவிடும் என்று நினைத்தாயோ....

காத்திருக்கேன் கனவா ...
காலம் கனியும் என...
நிழல் படத்தில் பிரிந்த நாம்
நினைவுகளோடு நிஜத்தில் இணைவோமாக ....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: thamilan on December 09, 2018, 06:58:21 AM
கண்கள் கலந்ததால் காதலித்தோம்
கருத்து ஒருமித்ததால் கட்டுண்டோம்
எதிர்ப்புகளை மீறி கரம் பிடித்தோம்
ஈருடல் ஓருயிர் ஆனோம்
 
உனக்கு பெண்குழந்தைகள் பிடிக்காது
குழந்தைகள் என்ன பொம்மைகளா
நாம் விரும்பியபடி வாங்கிட
அது இறைவன் கொடுத்த வரம்

 முதல் ஒன்று பிறந்தது
பெண்குழந்தை
அடுத்தது ஆண்குழந்தை
பிறக்கும் என்று நினைத்தோம்
அதுவும் பெண்குழந்தை
உனக்குப்  பிடிக்காது  என்று
தெரிந்து தானோ என்னவோ
பிறக்கும் போதே இறந்து பிறந்தது
மூன்றாவது சரி உன் விருப்பம்  போல
பிறக்கும் என்று நினைத்தோம்
அதுவும்  பெண்குழந்தை

முடவனுக்கு தான் தான் தெரியும்
காலின் அருமை
குருடனுக்குத்தான் தெரியும்
கண்களின்  அருமை
குழந்தைகள் இல்லாதவர்களுக்குத் தான் தெரியும்
குழந்தைகளின் அருமை 

மூன்றுக்கு மேல் பெறமுடியாத நிலை
தொடர் பிரவசம் அறுவை சிகிச்சை என
உடல் நலிவுறத் தொடங்கியது
என் இளமை குன்றியது
உன் அன்பும் குறையத் தொடங்கியது

வீட்டில் இருப்பதும் குறையத் தொடங்கியது
ஓவர் டைம் ஆபீஸ் டூர் என
காரணங்கள் பல
உன்  கருத்தினில் உதித்தன
குழந்தைகள் மேல் எரிந்து  விழுந்தாய்
தொட்டதுக்கெல்லாம்  குறை கண்டாய்

குடும்பத்தின் மேல் உண்டான வெறுப்பு
குடிக்கு நண்பன் ஆனாய்
குடியை கெடுக்குமாம் குடி
நம் வாழ்வில் அது உண்மை ஆகியது

உலை வாயை மூடினாலும்
ஊர் வாயை மூட முடியுமா
என் காதுக்கும் வரத் தொடங்கியது
உனக்கும் வேறு பெண்ணுக்கும் தொடர்பு
இருக்கிறது  என்ற செய்தி

என் வாழ்வில் விழுந்த இடி
அந்த செய்தி
ஒரு நாள் என் கண்ணால்  கண்டேன்
அவளும் நீயும் கை கோர்த்து சொல்வதை

நீ இப்படி செய்வது நியாயமா
இதை கேட்கப் போய்
பூகம்பம் வெடித்தது எங்கள் வாழ்வில்
சண்டை சச்சரவு அடிதடி என
எங்கள் குடும்பம் இரண்டு பட்டது

ஒரு நாள்
சொல்லாமல் கொள்ளாமல்
பிரிந்து சென்றாய் எங்களை விட்டு
அப்பா எங்கேம்மா
எனும் குழந்தைகளின் கேள்விகளுக்கு
பதில்  சொல்லத்  தெரியாமல் 
தவித்து நிற்கிறேன்  நான்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: Guest 2k on December 09, 2018, 11:07:01 AM
பிரிதல் நிமித்தம்

மரத்திலிருந்து
இலை உதிர்வது போல
எளிதாக உதிர்கிறது
ஒரு உறவு
மறந்து கொண்டே இருப்பது
நம் இயல்பெனினும்
நினைவுறுத்திக் கொண்டே இருப்பது
இப்பிரபஞ்சத்தின் கடமைப் போல
இந்த கூட்டின் நினைவுகள்
அறுக்க அறுக்க
புதியதொரு நினைவு பிறக்கிறது

நதியின் இருகிளையென
பிரிந்து
வெவ்வேறு பாதைகளில்
நாம் நின்றிருந்தாலும்
எப்பொழுதோ ஒரு நாள்
தாய்நிலத்தின் மடியில்
நாம் இணைந்திருந்த கணம்
சத்தியம் தானே

சரிவிலிருந்து மேலேறும்
ஒவ்வொரு நொடியும்
சிதைந்து கிடைக்கும் இக்கூடு
மீண்டும் உள்ளிழுக்கிறது
எதிர்காலத்திற்காகவேனும்
இந்த இறந்த காலத்தை
ஏமாற்ற
நினைத்து
அச்சுழலில் மீண்டும் சிக்கிக் கொள்கிறேன்
ஒவ்வொரு புரிதலும்
ஒரு வெறுப்பாகியிருக்கிறது
ஒவ்வொரு உன்மத்தமும்
காரணமற்றதாகியிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்
ஒரு சாபமாகியிருக்கிறது

போகும் இடமும் தெரியவில்லை
இந்த பாதையின் நீளமும் அறிந்திருக்கவில்லை
கூட வரவும் யாருமில்லை
வழிகாட்டவும் நீயில்லை
நீ விட்டுச் சென்ற கால்தடங்களின்
வழிகொண்டு இப்பயணத்தை
தொடர்ந்தாக வேண்டும்
ஏனெனில்
பறக்கவொரு சிறகும்
விரிக்கவொரு வானமும் கொண்ட
இந்த சிறு பறவைகளின் கனவை
சிதைக்க நாம் யார்?

சட்டத்திற்கு என்ன தெரியும்?
சாட்சியங்கள் என்ற
தோற்றப் பிழைகளைத் தான்
தெரியும்
நம் வாழ்வின் நீட்சியென
விரல் கோர்த்து நின்றிருக்கும்
இக்குழந்தைகளுக்கு
சட்டதிட்டங்களை விடவும்
உன்னுடன் கழிந்த
உன்னதமான தருணங்களைத் தான்
தெரியும்
நம்மிடையே
ஆயிரம் குற்றப் பட்டியல்கள் இருப்பினும்
இந்த குழந்தைகளுக்காகவாவது
சிறு முத்தத்தை
நீ விட்டுச் சென்றிருக்கலாம்

மீண்டும் மீண்டுமென
நினைவுகளைக் கிளறிக் கொண்டிருக்கும்
கிழிந்து போன
இந்நிழற்படத்தில்
மிச்சம்
ஒட்டிக்கொண்டிருப்பது
உன் சுண்டுவிரலா அல்லது
உன் நினைவுகளா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: பொய்கை on December 09, 2018, 02:04:03 PM
அண்ணனையும் தம்பியையும்
அப்பனையும் ஆத்தாளையும்
வம்புக்கிழுத்து வசைபொழிந்து
போனதனால் , சிறுக்கி மகள்
கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

பத்து சவரன் நகை கேட்டா
சொத்த வித்தா வாங்குறது?
பத்து நாளு பொறுடி என்றேன்
பாதகத்தி கேட்கலையே!
பணம் புரட்டி திரும்பும் முன்னே
சிறுக்கி மகள்கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

அன்பான தங்கை ஒன்று
அருமருந்தாய்  எனக்கிருக்க
அவளுக்கு சீர் செனத்தி
செய்வதெல்லாம் கண்ணுறுத்தி
கோபம் கொப்பளிக்க ,
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

மணமான என் மாமா பொண்ணு
குணமான என் குரங்கு பார்க்கையிலே
நலமான்னு கேட்டாளே! அய்யா
நான் வீடுவந்து சேரும்முன்னே
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

கோபத்தில் கிழித்ததெல்லாம்
குப்பைக்கு போனாலும்
சாந்தமாக இப்போவெல்லாம்
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
முத்தம் தினம் தாராளே!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: Guest on December 09, 2018, 03:52:50 PM
நான் புரிதலைப்பற்றி
பேசுகிறேன் - நீதான்
அதனை பிரிதல் என்று
எடுத்துக்கொண்டாய்.....
*
துரோகங்களின் வரலாறு
சொல்கிறாய் - நான்
துரோகித்ததாய் சொல்லவே
இல்லையே...
புரிந்துகொள் நீ...
*
நியதிகள் வகுத்த
வகுப்பறையில் நீயும் நானும்
நிசப்தம் கொண்டமர்ந்தோம்
பிறந்து விழுந்ததுதானே
உனதும் எனதுமான இது....
*
நீதி கேட்டுச்செல்வதெங்கே
நியதிகள் வகுத்த நாமேதான்
நீதியறியவேண்டும்....
*
புரிந்துகொள் நீ
நான் பிரிவதைசொல்லவேயில்லை
புரிந்துகொள்ளச்சொன்னேன்
என்னை
புரிந்துகொள்ளச்சொன்னேன்....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: Grand Max on December 09, 2018, 04:56:20 PM
ராத்திரியில்
கண்ணயர்ந்து நான்
உறங்கும் வேளை- திடிரென்று
விழித்தெழுந்தேன்
உன் நினைவால்....
படபடத்தது மனது
என்னவளுக்கு என்னானது என்று..
எழுந்து நானும்
வெளியில் சென்று - அந்த
ஆகாயத்தை பார்த்த போது
அந்த முழு நிலவில்
உன் முகம்.........
பதறிய என் மனம் கண்டு
திங்கள் அது....

"உன் அவள் தூதாக
அனுப்பினாள் எனை அழைத்து
என்னவன் ஏங்குகிறான் அங்கு
கவலையொன்றும் வேண்டாம்
உன் கன்னியவள்
நலமாக உள்ளாள் இங்கு என்று..."

நன்றி பயத்தேன்
அந்த செம்மதிக்கு - என்
இல்லாளின் இனிய செய்தி
இடரின்றி கொண்டு வந்ததற்கு....
"உன் செய்தியும்
நான் கொண்டு போகின்றேனே
உன்னவள் இன்னும்
உறங்கவில்லை -என்
வருகைக்காய் என்று
விடை பெற்று
நகர்ந்தது அந்த வெண்ணிலவு....

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: RishiKa on December 10, 2018, 06:25:46 PM


இருமனம் இணையா திருமண..
ஒப்பந்தங்கள் !
வாழ்க்கையை வழக்காகும் ..
நிர்பந்தங்கள் !

கரை சேர்ப்பான் என்று எண்ணி ..
கால கடலில் பயணித்தால்....
ஆழ்கடல் சூறாவளியில் ..
தனியே தவிக்க விட்டு ...
தான் மட்டும் தப்பித்து ஓடும்....
நம்பிக்கை துரோகிகள் !

மண்ணில் விதைத்த விதைகளை...
பயிராகும்முன்னே ...
வேரோடு பறித்து ...
உயிர் கரி சமைக்கும் ...
கொடூரமானவர்கள் !


உறவு கொண்டு உயிர்கள் கொடுத்து ..
உள்ளம் உலர இரக்கம் இல்லாமல்
சுமைகளை மட்டும் தள்ளி விட்டு
சுகங்கள் தேடி ஓடும்
கோழைகள் ..

பிஞ்சுகளை கொடுத்துவிட்டு ...அதன்
நெஞ்சங்களை பிய்த்து....
வல்லூறுகள் பறக்கும் ..
உலகில் தனியே தவிக்க விட்டு
சென்ற கொலையாளிகள்!

பெண் என்பவள் உங்களை போல்
பேடி அல்ல ...
அவள் எத்தனை துன்பம் வந்தாலும்
எதிர் கொண்டு  காக்கும் ...
ஆண்மை கொண்ட வீராங்கனைகள் !

வாலிப திமிரில் திரியும் ...
உங்கள் காலங்கள் யாவும் ..
காத்து கொண்டு இருக்கின்றன ..
எப்போது அதையெல்லாம் .....
வட்டியோடும்...வியாதியோடும் ..
வயோதிகத்தில் திருப்பி தர ..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: regime on December 10, 2018, 07:07:06 PM
நாங்கள் பிறந்தபொழுது
எங்கள் உயிரின் பொருட்டு
மருத்துவரின் கைபிடித்து
நீ அளித்த பணம்
யாரோ வட்டிக்காரனிடம் அடமானமாய்
வைத்த உன் கைகளின் விலை

நாங்கள் வளர்ந்தபொழுது
எங்கள் கல்வியின் பொருட்டு
ஆசிரியரின் கைபிடித்து
நீ அளித்த பணம்
யாரோ வட்டிக்காரனிடம் அடமானமாய்
வைத்த உன் கைகளின் விலை

எங்கள் தேவைகளின் பொருட்டு
எங்கள் ஆசைகளின் பொருட்டு
இத்தியாதி இத்தியாதிகளின் பொருட்டு
நீ அளித்த பணம்
யாரோ வட்டிக்காரனிடம் அடமானமாய்
வைத்த உன் கைகளின் விலை

யாரோ வட்டிக்காரன் வலையில்
எங்களின் பொருட்டு
உனையே விலை வைத்த நீ
எழமுடியாமல் எமனின் கைகளில்
வீழ்ந்து கிடக்கிறாய்
எங்களை கரைசேர்க்கும் வழியில்
தொலைந்து போனது நீ தான்
நல்வாழ்வென நீ அளித்த
இவ்வுலகில்
உன் துணையின்றி தவித்திருக்கிறோம்
விலை வைத்த உன் கையினை
ஒருமுறையேனும் அன்புடன்
பற்றிடும் நிலையில்லை இனி
இந்த கைகளைப் பற்றி
உலகை சுற்றி வரும் பேறு இல்லை இனி
இந்த கைகளைப் பற்றி
கடுமைகளை கடந்திடும் வழி இல்லை இனி
கிழிந்து கிடைக்கும் இந்த புகைப்படத்தில் கூட
உன்னுடைய கைகள்
எங்களுக்கு சொந்தமில்லை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: SweeTie on December 10, 2018, 10:32:55 PM

அத்தை பெத்த ஒத்தை  மவன்
ஊரெல்லாம்  கெட்ட  பேரு   உருப்படமாட்டான்  என்று
என்ன கட்டிவைச்ச பெரியவங்க  காடேறி  போயாச்சு
செத்தாலும் உன்ன விட்டு போக மாட்டேண்டி என்று
சத்தியமும் செஞ்சுதான் கைபுடிச்சான் - இப்போ
 கொண்டவள  விட்டு கண்டவள நம்பி
எங்கள  கிளிச்செறிஞ்சு  போய்ட்டானே 

ஆசைக்கு  ஒரு புள்ள  ஆஸ்திக்கு ஒரு பொண்ணு
அளவோட  பெத்து  அன்போட வாழ்ந்திருந்தோம்
ஊரோட கண்ணு   நாய்கண்ணு  பேய்கண்ணு
அத்தனையும்   பட்டிருச்சோ எங்கமேல
வெளங்காம  போச்சு   என் வாழ்க்கை
இப்ப திண்டாடித்  தவிக்கிறனே
எங்கள கிழிச்செறிஞ்சு  போய்ட்டானே

ஆரோ பாதகத்தி  அடு த்த ஊரு சிங்காரி
ஒத்த பார்வையில  கவுத்துப்புட்டா  இவன் மனச
ஆறு முழம் சேலையில  என் அழகு தெரியலயாம்
காலில  கிழிஞ்ச கால்சட்ட போட்ட புள்ள
பாத்ததுமே பத்திருச்சாம்  பாவி மவன் இவனுக்கு
விழுந்தவர்தான்  சீமத் தொர எந்திரிக்க முடியாம
எங்கள கிழிச்செறிஞ்சு  போய்ட்டானே


புள்ள பொறுப்பும்   போச்சு பொண்டாட்டி நினைப்பும் போச்சு
புதுப்பொண்ணு மயக்கத்துல மச்சான்
கதி கலங்கி நிக்கிறாரு 
தொண்ணூறு நாள் போனா    புத்தி நிலைக்கு வரும்
புதுப்பொண்ணு மயக்கம்  தணியும்
புத்தி நிலைக்கு வந்தா புள்ள நினைப்புவரும் 
புத்திகெட்ட  சண்டாளன்
எங்கள கிழிச்செறிஞ்சு  போய்ட்டானே
 

பச்சைக்கிளிபோல   வீட்டுக்காரி இருந்தாலும்
குரங்கு போல  ஒன்னு கூடவே இருக்கும் ஏன்னு
பாட்டி சொன்ன கதை ஞாபகம்தான் வருது இப்போ
பெண்ணாக  பொறந்தா  பொறுக்கணுமாம்
பொறுத்த காலம் போய் டிவோர்ஸ் காலம் வந்தாச்சு
கிழிச்செறிஞ்சு போனவன கோடேத்த
நாங்களும் கெளம்பியாச்சு
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207
Post by: NiYa on December 11, 2018, 04:21:51 PM

உனக்காக   ஏங்கும் என் மனம்


என் கரம் கோர்த் த நாளில் இருந்து
உன்னை விட்டு பிரிந்ததில்லை
உன் மார்புப் படுக்கை இல்லமல்
என்றும் உறங்கியதும் இல்லை

வருடங்கள் கடந்திட
இரு குழந்தைகளுடன் நம் வாழ்வு
எவ்வளவு பாசம் இருந்தாலும்
காகிதத்திற்கு தான் மதிப்பு இவ்வுலகில்

பணம் எனும் காகிதத்தை தேடி
என்னை பிரிந்தாய் அன்பே
உன் மூச்சுக் காற்று இல்லாத இடத்தில்
நானும் நடை பிணமானேன்

எவ்வளவு தொலை தொடர்பு இருந்தாலும்
உன் தொடுகை எதிலும் கிடைக்கவில்லை
எத்தணை முத்தத்தின் சத்தம் கேட்டாலும்
என்  இதழால் அதை சுவைக்க முடியவில்லை

மகளின் முகத்திலும் மகனின் குரலிலும்
அடிக்கடி உன்னை காண்கிறேன்
இப்பிரிவு நிரந்தரம் இல்லை என்றாலும்
ஏனோ உனக்காக  எங்கும் என் மனம்