FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 28, 2018, 04:23:17 AM

Title: உதிரும் தனிமை
Post by: Guest on December 28, 2018, 04:23:17 AM
(https://i.postimg.cc/3yQvKgmr/FB-IMG-1545945308109.jpg) (https://postimg.cc/3yQvKgmr)




எனது அறையில் உறைந்து
உதிர்கின்றது தனிமை - என்னில்
ஆட்கொண்டுள்ளது ஏகாந்தம்
சில பல பொருட்படாத
சப்தங்களின் பிரதிபலிப்பும்.......

அவ்வப்போது திறந்து மூடும்
ஒற்றைக்கதவினூடே வெறுப்புகள்
தாங்கிய ஒரு கவளம் சோறும்
சூரியக்கதிர்களின் எரிச்சலூட்டும்
வெளிச்சமும்.....

என் மனப்பிறழ்சியில்
உறவுகளை இழந்தது நான்
மட்டுமல்ல என் அறையும்தான்
நான் பிரவேசித்தபின் என்
அறையில் மனிதர்கள்
வருவதில்லை......

ஜன்னல் கதவுகளை யார்
மூடினார் என தெரியவில்லை
திறக்கமுடியா வண்ணம்
வலைகளை கட்டியுள்ளன சிலந்திகள்
மனம்பிறழ்ந்தவனாயினும்
நான் கலைக்கமாட்டேன் எனும்
நம்பிக்கை சிலந்திக்கு.....

இருட்டறையில் என்
வாழக்கை புரண்டு
இருண்டுகொண்டிருக்க
யாரோ வெளியே மனங்களின்
வெளிச்சம் பற்றி
பேசக்கேட்கிறேன்.....

யோசித்து யோசித்து
நடக்கிறேன் நான் - என்
அறைகளுக்குள் விழிகளை
திறக்கவேண்டியதில்லை
எனினும் எனை கடந்து
செல்கின்றன எனது
பொருட்படாத உலகும்
மைல்கற்களும்.........

எப்போதாவது கண்களை
என் கதவின் சிறு தூவாரங்களில்
செலுத்துகிறேன் - ஏதோ
பேசிச்செல்லும் மனிதர்களில்
நான் காண்பதென்னவோ
புரிபடாத அவர்களின்
மனப்பிரழ்ச்சிகளை மட்டுமே....

காற்றும் சில்லூறுகளும்
தனித்தனியே ஓசை
தருகின்றன - நான்
தனித்தனியே பதில்
சொல்லிக்கொள்கிறேன்....

யாருமற்ற உலகு
இப்பிரபஞ்சத்தில் ஏராளம்
பரிவும் இரக்கமும்
பஞ்சமாகிப்போனபின்
இப்பிரபஞ்சம் யாருமற்றவர்களால்
அழகாக்கப்படலாம்....
Title: Re: உதிரும் தனிமை
Post by: Guest 2k on December 28, 2018, 09:51:58 AM
Wonderful நண்பா. திரும்ப திரும்ப படிச்சிட்டே இருக்கேன்
Title: Re: உதிரும் தனிமை
Post by: Guest on December 28, 2018, 12:28:07 PM
நன்றி சிக்கு....

நான் திரும்ப திரும்ப அந்த புகைபடத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.......
Title: Re: உதிரும் தனிமை
Post by: RishiKa on December 28, 2018, 02:42:18 PM


உதிர்ந்த தனிமையும்  ஏகாந்தமும் ...
உள்ள பிறழ்ச்சிகளின் பிரதிபலிப்பே !
பூட்டிய  கதவை திறந்து வந்தால் ..
வெளிச்சங்கள் விளக்கம் கொடுக்கும் !
புகைப்படமும் வரிகளும் ...
ஓர் இருண்ட உலகின் ...
திகிலை கிளப்புகின்றன !
ஆழ்ந்த பாராட்டுக்கள்!
அருமையான கவிதை !டொக்கு நண்பரே !

Title: Re: உதிரும் தனிமை
Post by: சாக்ரடீஸ் on December 29, 2018, 12:58:54 PM
எப்போதாவது கண்களை
என் கதவின் சிறு தூவாரங்களில்
செலுத்துகிறேன் - ஏதோ
பேசிச்செல்லும் மனிதர்களில்
நான் காண்பதென்னவோ
புரிபடாத அவர்களின்
மனப்பிரழ்ச்சிகளை மட்டுமே....
                dokku machi sema sema sema joooperuuuu
Title: Re: உதிரும் தனிமை
Post by: Maran on January 10, 2019, 04:28:32 PM


அருமையான கவிதை...  :)

அழகான கருவும், அதை மிக அழகாய் கவிதையாக்கி வரிகளில் கட்டமைத்துள்ளீர்கள்!. வாழ்த்துக்கள்!!  :)




மனப்பிரழ்ச்சிகளை - மனப்பிறழ்ச்சிகளை (அல்லது) உளப்பிறழ்ச்சி