FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: KS Saravanan on December 27, 2022, 01:23:47 PM

Title: படித்ததில் பிடித்தது..!
Post by: KS Saravanan on December 27, 2022, 01:23:47 PM
ஐம்பூதங்கள்..!

நிலமகளின்
நித்திய வேலி
நீர்.!

நீங்கிடும் உயிர்களை
தாங்கிடும் தாயன்பு
நிலம்.!

சுகங்களும் உன்னில்
சுடுதலும் உன்னில்
நெருப்பு.!

ஆகாயம் வியாபித்து
பெருங்காயம் உயிர்பிக்கும்
காற்று.!

அண்ணாந்து பார்க்க அதிசயம்
ஆராய்ந்து பார்க்க அறிவியல்
ஆகாயம்.!