Author Topic: முகத்தில் உள்ள துவாரங்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்...  (Read 439 times)

Offline kanmani

சருமப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகத்தில் ஆங்காங்கு சிறுசிறு ஓட்டைகள் காணப்படுவது. இத்தகைய ஓட்டைகளை சருமத்துளைகள் என்று அழைப்போம். சாதாரணமாக இது கண்ணுக்கு தெரியாதவாறு இருக்கும். ஆனால் அத்தகைய சருமத்துளைகளானது கண்ணுக்கு தெரியாத அளவு இருக்கும் வரை ஒரு கவலையும் இல்லை. அதுவே பெரிய அளவில் உருவாகும் போது முக அழகானது பாதிப்படைகிறது.
இவ்வாறு முகத்தில் உள்ள பெரிய துவாரங்களை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை முகத்திற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் இருக்கும் படியாக வைத்தல், சருமத்தை சரியாக பராமரிக்கால் இருத்தல் போன்ற பல உள்ளன. பல பேருக்கு இந்த துவாரங்களின் அளவை சுருக்க முடிவதில்லை. பதிலாக அதை சின்னதாக மட்டுமே காட்டிக் கொள்ள முடியும். மேலும் வயது அதிகரிக்க அதிகரிக்க, தோல்களின் மீட்சி குறைவதால், இந்த துவாரங்கள் பெரிதாகும்.

முகத்தில் ஏற்படும் துவாரங்கள் கண்டிப்பாக நம்மை பாதிக்கும். இது முழுநிறைவுடன் இருக்கும் நம் தோற்றத்தை குறைக்கச் செய்வதுடன் மட்டுமல்லாது, சருமத்தை பார்ப்பதற்கு சொரசொரப்பாகவும் மந்தமாகவும் வெளிப்படுத்தும். பொதுவாக இந்த துவாரங்கள் மூக்கில், நெற்றியில் மற்றும் தாடையில் இருந்தால் மிகவும் பளிச்சென்று தெரியக்கூடும். நிரந்தரமாக இதனை குறைப்பதற்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இருந்தாலும் இந்த பெரிய துவாரங்களின் அளவு குறைந்ததைப் போல தோற்றம் அளிக்க முடியும். இப்போது அது எப்படியென்று பார்ப்போமா!!!

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை ஒரு காட்டன் துணியில் சுருட்டி, முகத்தின் மேல் தேய்ப்பது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். ஐஸ் கட்டிகள் துவாரங்களை இறுக்கமாக்கும். இதனை தினசரி காலை முகத்தில் தடவ வேண்டும். மேலும் இது சரும மெழுகின் உற்பத்தி அளவை இயல்பு நிலையில் வைத்திருக்க உதவும்.

தேன்

தேன், துவாரங்களின் அளவை சுருக்க உதவும். மேலும் எண்ணெய் சருமமும் துவாரங்களின் பிரச்னையை போக்கும். 2-3 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மூலிகைத் தேனை, முகத்தில் நன்றாக தடவிக் கொண்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்தப் பின், 5 நிமிடங்கள் காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தக்காளி சாறு

தக்காளியை சாறு எடுத்து முகத்தில் தடவினால், துவாரங்கள் சுருங்கும். அதற்கு நன்றாக முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உட்கார்ந்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று முறை செய்தால், சீரான சருமம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் சாறு

சரும பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய்கள் ஒரு சிறந்த நிவாரணியாக கருதப்படுகிறது. இது பெரிய துவாரங்களுக்கும் பொருந்தும். வெள்ளரியை சாறு எடுத்து முகத்திலும் தடவலாம் அல்லது உடம்பிலுள்ள நச்சுத் தன்மையை எடுக்க குடிக்கவும் செய்யலாம். குறிப்பாக துவாரங்களைப் போக்குவதற்கு, வெள்ளரியிலிருந்து சாறு எடுத்து உப்பு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் அமர வேண்டும்.

ட்ஸ் கஞ்சி

5 டீஸ்பூன் தேனையும், 2 டீஸ்பூன் ஓட்ஸ் கஞ்சியையும், 2 டீஸ்பூன் பால் பொடியுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சமமாக முகத்தில் தடவி, வட்டமான முறையில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இறுதியில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தவறாமல் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தை கழுவுதல்

முகத்துக்கு போட்ட கெமிக்கல் கலந்திருக்கு க்ரீம்களை இரவு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்

எண்ணெயில்லா மாய்ஸ்சுரைசர்

வறண்ட சருமத்தை எண்ணெய் பதமாக்குவதற்கு உபயோகிக்கப்படும் எண்ணெய் அதிகம் இல்லாத மாய்ஸ்சுரைசரைத் தடவிக் கொள்ள வேண்டும். அதற்கு முன் இது சருமத்திற்கு அலர்ஜி ஏற்படுத்துகிறதா என்பதை சோதித்து கொள்ள வேண்டும். ஏனெனில் சாலிசிலிக் அமிலம் இந்த திரவத்தில் கலந்திருப்பதால் சிலருக்கு சரும எரிச்சலை ஏற்படுத்தும்.

சாலிசிலிக் சோப்பு

 முகத்தை சாலிசிலிக் அமிலம் உள்ள சோப்பை வைத்து கழுவுங்கள். இந்த அமிலம் துவாரங்களை அடைத்திருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை நீக்கும். மேலும் சருமத்தையும் பாதுகாக்கும்.