Author Topic: 3டி பிரிண்டரில் தயாராகும் உடல் உறுப்புகள்!!!  (Read 1167 times)

Offline SowMiYa

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • Gender: Female
  • உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு.
    • http://www.friendstamilchat.com/chat/
வாழ்க்கை முறை மாற்றத்தால் மனிதனுக்கு புதிது புதிதாக நோய்கள் வருகின்றன. இவற்றால் சிறுநீரகம், கணையம், கல்லீரல், இருதயம் என உள்ளுறுப்புகள் பாதிககப்படுவோர் ஏராளம். பழுதான உறுப்புகளை மாற்றி அறுவைச் சிகிச்சை செய்தால்தான் இவர்களில் பலர் உயிர் பிழைக்க முடியும். ஆனால் மாற்று உறுப்புகள் எளிதாகக் கிடைப்பதில்லை.
உரிய காலத்தில் உறுப்புகள் கிடைக்காதவர்கள் மரணத்தைத் தழுவுகின்றனர். எஞ்சியிருப்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மாற்று உறுப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

நாளுக்கு நாள் காத்திருப்போர் பட்டியல் பெரிதாகிக் கொண்டே போவதால், இவர்கள் அனைவருக்கும் பொருத்தமான மாற்று உறுப்புகள் கிடைப்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். பற்றாக்குறையைப் போக்குவதற்காக செயற்கை உறுப்புகளைச் உருவாக்கும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. ஆய்வகங்களில் மனித உறுப்புகளை வளர்க்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் வேகம் குறைவு. துல்லியமும் இல்லை.

இந்தக் குறைபாடுகளைப் போக்கி, மனித உறுப்புகளைத் தயாரிப்பதில் புதிய உத்வேகம் கொடுக்க வந்திருப்பது 3D-பிரிண்டிங் என்று அழைக்கப்படும் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம்.

கணினியில் வடிவமைக்கும் மாதிரிகளை, 3D பிரிண்டர்கள் அப்படியே வடிமைத்துத் தருகின்றன. கட்டடங்கள், கார்கள், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் போன்றவற்றைக்கூட முப்பரிமாண பிரிண்டர்கள் வடிவமைத்துவிடும்.

கட்டட மாதிரிகளைப் போல, மனித உறுப்புகளின் மாதிரிகளையும் தயாரித்துவிடலாம். யாருக்கு மனித உறுப்பு தேவையோ, அவரது உடல் செல்களை எடுத்து, கணினியில் உருவாக்கப்படும் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய உறுப்புகளை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

காது, விரல்கள் போன்ற வெளியுறுப்புகள் முதல் சிறுநீரகம், இருதயம் போன்ற முக்கியமான உள்ளுறுப்புகள் வரை உருவாக்குவது 3D பிரிண்டிங் (Printing) தொழில்நுட்பத்தில் சாத்தியம். கடிதங்களையும் ஆவணங்களையும் அச்சிடுவதுபோல, வீட்டிலேயே நுரையீரலையும் கணையத்தையும் அச்சிடும் காலம் வரத்தான் போகிறது. கடைகளில் காதுகளும் கண்களும்கூடக் கிடைக்கலாம். ஆனால், இதெல்லாம் இன்றைக்கோ நாளைக்கோ நடந்து விடக்கூடியதல்ல. செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.