Author Topic: சுவையான உப்பு சீடை  (Read 560 times)

Offline kanmani

சுவையான உப்பு சீடை
« on: February 29, 2012, 12:14:51 PM »
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை: முதலில் அரிசியை களைந்து உலர்த்தவேண்டும். நன்றாக காய்ந்ததும், மாவாக அரைத்து , சலித்து வைக்கவும். எள்ளை சுத்தமாக எடுத்து வைக்கவும். தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.

அகலமான ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.வெண்ணை நன்கு கலந்ததும், லேசாக தண்ணீர் விட்டு பிசையவும் .

மாவு நல்ல கெட்டி பதமாக இருக்கவேண்டும். பின்னர் அந்த மாவினை லேசாக எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ‘சீடை’ யாக உருட்டிவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான ‘உப்பு சீடை ‘ ரெடி . எளிதில் தயாரிக்கலாம்.

சீடை தயாரிப்பதில் முக்கியமாக மாவு சுத்தமாக இருக்கவேண்டும். அதில் கல், மண் எதுவும் இல்லாமல் சுத்தமாக அரைத்த மாவினை பயன்படுத்தவேண்டும். எள் போடும் போதும் சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சீடை வெடிக்கும் ஆபத்து உள்ளது.