Author Topic: இவ்ளோ யோசிச்சேன் தலைப்பு யோசிக்கல...  (Read 1522 times)

Offline vedhalam

இறைவன் வெறும் இரவைத்தான் அனுப்புகிறான், உன் குறுஞ்செய்திதான் அதை இனிய இரவாக மாற்றுகிறது...

ஊர்ல இருக்க பெரிய பணக்காரன்களோட பொண்டாட்டிங்க பெயர் எல்லாம் ஒன்னுதான் # பினாமி

மூத்தோர் சொல்லும், முழூ ஹெல்மெட்டும் முன்னே கனக்கும்! பின்னே காக்கும்!

'பசி'ங்கறது மட்டும் இல்லைனா 'பிஸி' ங்கற வார்த்தைக்கு தேவையே இருக்காது...

போத்திஸ்ல உண்டியல் தராங்களாம். பேசாம திருவோடு தரலாம்...

5000 ரூபாய்க்கு துணி எடுத்துட்டு உண்டியல் வாங்கிட்டு வரதுக்கு 10 ரூபாய்க்கு நாம அதை வாங்க மாட்டமா? கிஃப்டாமா...?

சிறுவயதில் அர்த்தம் தெரியாமல் தினமும் செய்த வேலைகளில் ஒன்று,பள்ளியில் தேசியகீதம் பாடுவது...

 பெண் - நுகர்பொருளா? தெரியவில்லை.!!! ஆனால் நேசம் என்னும் நாசி கொண்டு நுகர வேண்டிய 'பொருள்'.!!!

பள்ளிப்பருவத்தில் பாட்டி தாத்தா சொன்ன கதைகளுக்கு ஏங்குகிறது நெஞ்சம்... பாடாய்படுத்தும் சீரியல்கள் பார்க்கையிலே...

பெண்களின் அலங்காரத்தை கிண்டலடிக்கும் எல்லா இளவட்டங்களின் பின் பாக்கட்டிலும் குடி இருக்கிறது ஒரு குட்டி சீப்பு.!!!

இபெல்லாம் ப்ளாக் அண்ட் வொயிட்ல ஒரு போட்டோ புடிச்சு போ ட்டா நம்மள பெரிய போட்டோக்ராபர்னு நெனச்ச ுக்கிறாங்க..:)

உன்னை தவிர்த்து யதார்த்தமாய் ஏதேனும் எழுத நினைக்கிறேன்... உன்னை விட யதார்த்தமான விஷயம் என் உலகில் இல்லையென உணர்கிறேன்!

நன்றியும், மன்னிப்பும் எதிர்பார்க்காத/தேவைப்படாத உறவு தாயன்பாக மட்டுமே இருக்கிறது...

நீ விரும்புவது நானில்லாத தனிமை எனில், அதை அளிக்கவும் உன் மீதுள்ள காதல் தலையாட்ட வைக்கிறது...

ரசிக்கப்படுவோம் என்பதை அறியாமலே தினமும் அழகாய்தான் பூக்கிறது பூக்கள் !

குழந்தைகளுடன் விளையாடும் பொழுதெல்லாம் கற்றுக்கொடுக்கிறார்கள் 'விட்டுக்கொடுப்பது' எப்படி என்று!

உன் பெயர் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.... குறையாமல் கூடுகிறதென் பெண்(PEN)'மை'

எப்பொழுதும் மறக்காமல் இருப்பதில் ஒன்றும் சிறப்பில்லை... எது வந்தபோதும் வெறுக்காமல் இருக்க முடிந்தால் அதுவே அன்பு!

'என்' கணிதவியலில்... உன்னிடம் 'பற்று'.... நீ கொடுத்த அன்பெல்லாம் 'வரவு' !

எட்டுத்தொகை; பத்துப்பாட்டு, பதினொன்கீழ்க்கணக்கு; எதுவும் ஈடில்லை நேற்று பேச ஆரம்பித்த மகளே உனக்கு.!!!

கருப்பு அழுக்கு என விரட்டி விட்டது வானம் பொங்கி அழுகின்றது மேகம் # மழை

Offline kanmani

vedha really superb ovoru variyum hmm  ...
chanceay illa

athum

போத்திஸ்ல உண்டியல் தராங்களாம். பேசாம திருவோடு தரலாம்...

5000 ரூபாய்க்கு துணி எடுத்துட்டு உண்டியல் வாங்கிட்டு வரதுக்கு 10 ரூபாய்க்கு நாம அதை வாங்க மாட்டமா? கிஃப்டாமா...?

நன்றியும், மன்னிப்பும் எதிர்பார்க்காத/தேவைப்படாத உறவு தாயன்பாக மட்டுமே இருக்கிறது...

பெண்களின் அலங்காரத்தை கிண்டலடிக்கும் எல்லா இளவட்டங்களின் பின் பாக்கட்டிலும் குடி இருக்கிறது ஒரு குட்டி சீப்பு.!!!

intha 3vari matum illa yealla varigalilum oru  yethartham unmai ippadi sollitae pogaalam
« Last Edit: July 25, 2011, 10:42:23 PM by kanmani »

Offline Yousuf

Quote
'பசி'ங்கறது மட்டும் இல்லைனா 'பிஸி' ங்கற வார்த்தைக்கு தேவையே இருக்காது...

நன்றியும், மன்னிப்பும் எதிர்பார்க்காத/தேவைப்படாத உறவு தாயன்பாக மட்டுமே இருக்கிறது...

எதார்த்தமான வார்த்தைகள் மட்டும் அல்ல உண்மையான வார்த்தைகளும் கூட...!!!

சிந்திக்க கூடிய பல செய்திகளை நகைச்சுவையாய் தருகிறீர்கள் வேதாளம்...!!!

உங்களுடைய நகைச்சுவை கலந்த முற்ப்போக்கு சிந்தனை எங்களுக்கு தேவை...!!!

தொடரட்டும் உங்கள் பனி...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

 பெண் - நுகர்பொருளா? தெரியவில்லை.!!! ஆனால் நேசம் என்னும் நாசி கொண்டு நுகர வேண்டிய 'பொருள்'.!!!

உன்னை தவிர்த்து யதார்த்தமாய் ஏதேனும் எழுத நினைக்கிறேன்... உன்னை விட யதார்த்தமான விஷயம் என் உலகில் இல்லையென உணர்கிறேன்!

எப்பொழுதும் மறக்காமல் இருப்பதில் ஒன்றும் சிறப்பில்லை... எது வந்தபோதும் வெறுக்காமல் இருக்க முடிந்தால் அதுவே அன்பு! :-* :-* :-* :-* dis linesku

super vethalam.... rompa nalla erukku unga pathivukal.. ;)