Author Topic: ஷாஹி முந்திரி சப்ஜி  (Read 233 times)

Offline kanmani

ஷாஹி முந்திரி சப்ஜி
« on: October 07, 2013, 09:20:42 AM »


தேவையான பொருட்கள்:
முந்திரி - 1 கப்
தக்காளி - 3 (அரைத்தது)
வெங்காயம் - 2 (தோலுரித்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 3 மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4-5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

முதலில் 5-6 முந்திரியை எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வெங்காயம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லி, சீரகம், வரமிளகாய் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே எண்ணெயில் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் அரைத்த தக்காளி, கரம் மசாலா, மஞ்சள் தூள், மாங்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வெந்த இலையை கையால் நசுக்கி சேர்த்து, உப்பு, சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறினால், சுவையான ஷாஹி முந்திரி சப்ஜி ரெடி!!!