Author Topic: காதல்வயப்படுதலும் வீட்டின் அமைப்பும்  (Read 797 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

காதல் வலையில் விழுகிறவர்கள் எல்லாம் ஓடிப் போவது இல்லை. பலர் சுதாரித்துக் கொள்கிறார்கள். சிலர் பாழுங்கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார்கள். காரணம் வீட்டு அமைப்பு!

வடக்கு வாயவியத்தில் வாசல் இருந்தால் அந்த வீட்டில் உள்ள யாராவது ஒருவர் காதல் வசப்படுவார். ஆனால் மேற்படி ஒரு வாசலை வைத்து மட்டும் நாம் எதையும் முடிவு செய்து விடக்கூடாது. ஆக்கினேய பகுதியின் நிலைமைகளையும் நாம் ஆராய வேண்டும்.

வீட்டில் கிழக்கு ஆக்கினேயம் எல்லைவரை வளர்ந்து கிழக்குச் சுவர் பக்கத்து வீட்டுடன் ஒட்டியிருந்தால். வீட்டின் முத்த மகன் காதல் வயப்படுவார். அதே சமயம், வடக்கு ஈசானிய உச்சப் பகுதியில் ஜன்னல் இல்லையென்றால். வயதில் முத்தபெண்கள் அந்த இளைஞனை சூழ்வர்.

வீடு, வடக்கு மற்றும் மேற்கு சார்ந்த சாலைகள் உள்ள வாயவிய மனையில் அமைந்து ஈசானியத்தில் சமையல் அறை இருந்தால், அந்த வீட்டின் இரண்டாவது வாரிசு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, காதல் வயப்படுவார்கள். ஆனால் அந்த காதல் வெற்றிகரமாக இருக்காது.

கிழக்குத் திசையில் இடம் குறைந்தோ அல்லது பிறர் வீட்டுடன் இணையும் பொதுச் சுவராகவோ உள்ள வீட்டின் ஆண்கள் நிலைமை பரிதாபகரமானது. தாய், சகோதரி அல்லது மனைவி போன்ற எல்லா பெண்களாலும் அடக்கி ஆளப்படுவார்கள். இது பெண்களின் மீதே ஓர் வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

வாயவிய மூலையில் சமையல் அறை இருந்து வடக்கில் வாயவிய வாசலும் இருந்துவிட்டால், அந்த வீட்டுப் பெண்களின் கருப்பை பலவீனமாகிவிடும். அடிக்கடி கரு கலைதல், குழந்தை இறந்து பிறத்தல் போன்ற சம்பவங்கள் தொடரும். ஆணுக்கு வேலை விஷயமாக வெளியூர் போவதும், வெளியூரில் தங்கி வேலை பார்ப்பதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். அப்பொழுது அந்த வீட்டுப் பெண் தன்னை பாதுகாப்பு அற்றவளாக நினைத்து மனம் புழுங்கும் நிலை ஏற்பட்டு பிறரிடம் தன்னை இழக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

வாயவிய தோஷங்களே காதலித்து ஓடிப்போதல் என்னும் நிலையை ஒரு குடும்பத்தில் உருவாக்குகிறது. வாயவிய தோஷங்களுடன் வாயவியத்தில் கிணறோ அல்லது நிலத்தடிநீர் தொட்டியோ இருந்தால், காதல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இதுபோன்ற அமைப்புகள் இருந்தும் காதலிக்காதவர்கள் இருக்கிறார்களே என்று கேட்கிறீர்களா? அதெப்படி உறுதியாக உங்களுக்கு தெரியும்?