Author Topic: ஃப்ரைடு இட்லி  (Read 429 times)

Offline kanmani

ஃப்ரைடு இட்லி
« on: August 29, 2013, 04:33:22 PM »
என்னென்ன தேவை?

இட்லி - 1,
தேங்காய் எண்ணெய் - சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு,
மாப்பிள்ளை பொடி (செய்முறை தனியே) - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

ஒரு இட்லியை 6 துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டியவற்றைச் சேர்த்து, இட்லித் துண்டுகளையும் சேர்த்துப்  பிரட்டவும். கடைசியாக மாப்பிள்ளை பொடி தூவி மறுபடி பிரட்டியெடுத்துப் பரிமாறவும்.

மாப்பிள்ளை பொடிக்கு...

கொப்பரைத் தேங்காயுடன், சிறிது தனியா, உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெறும் கடாயில் நன்கு வறுத்து அரைத்து எடுத்தால்  மாப்பிள்ளை பொடி தயார்.