Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 283  (Read 1615 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 283

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
பெண்,
தரணியின் நாபிக்கமலம்
தாய்மையின் உருவம்
தமக்கையாய் தாயின் அருவம்
தங்கையாய் அன்பின் அருவுருவம்
பூப்போன்ற மென் மனது
புன்னகையே இவள் அழகு

மாதரே
மண்ணுலகில் உன் ஜனனம்
அது குற்றமில்லை -மாறாக
கற்பகத் தாயே உன்னில்
காம வேட்டையாடி
பெண் சதை சுவைக்கும்
பொல்லாக் கழுகாய் நடமாடும்
காமுகர் தம்மில் - முள்ளில்லா
மலராய் நீ, அதுதான் குற்றமடி....

ஆடவரே,
பெற்றவளும் பெண்ணடா - உடன்
பிறந்தவளும் பெண்ணடா
பொண்டாட்டியும் பெண்ணடா
பொறக்கும் சிசுவிலும் ஓர் பெண்ணடா
இதை உணரா மாய மோகம்
மனதில் இன்னும் ஏனடா...
காம இச்சை உனை ஆட்கொண்டால்
கட்டியவளோடு கட்டிலை பகிர்ந்துகொள்- அன்றி
கானாக்களோடு பறந்து செல்லும்
பட்டாம்பூச்சிகளை - உந்தன்
படுக்கையறைக்கு இரையாக்கல் தகுமோ...
போதுமடா இந்த அடக்குமுறையும்
பொல்லாத பெண்தேக பசிக்குணமும்...

மங்கையரே,
சாது மிரண்டால் காடு கொள்ளாது
மாது மிரண்டால் நாடு தாங்காது
மகப்பேறு வலியும் கொண்டாய்
மாதவிடாய் துயரும் கண்டாய்
செய்யுளில் மட்டுமே பெண்ணியம்- இங்கே
செய்கையில் அது இல்லையடி
காலம் காலமாய் நாலு சுவற்றுக்குள்ளே
கண்ணீர் சிந்தியதும் போதுமடி
கவரிமானாய் உயிர்மாய்த்தலும் ஏனடி...

பாரதி தேடிய புதுமைப்பெண் நீயே
பாரினில் வாழும் பராசக்தியும் நீயே
அச்சம் கொண்டு அடங்கியது போதும்
துச்சம் என நீயும் துணிந்து வா
காமப் பசியில் உன் மேனி நெருங்கும்
கோர அரக்கன் சிரசு நொருங்கும்
வன்புணர்வு கொள்ள நினைத்தால்
வம்சவிருத்தியை அறுத்தெறிவேன் என்று
எட்டுத் திசையும் முழங்கி அதிர
கொட்டிடு பெண் முரசே
கொட்டிடு பெண் முரசே........

« Last Edit: November 16, 2021, 10:20:42 AM by Dear COMRADE »

Offline AK Prakash

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
                         வாடா மலரே !!!

இவ்வுலகில் பிறக்கும் ஓர் உன்னத பிறப்பே,
தாய்மை என்னும் ஓர் உன்னத நிலையை அடையும் உறவே...
வழிகாட்டியாய் இம்மண்ணுலகில் வாழும் ஓர் அற்புதமே...
தாயாக  தாரமாக  உடன் பிறப்பாய்   புதல்வியாய்  அனைத்துக்கும்
ஒரே தொடக்கம்  பெண்மைதானே

சகோதரி பாசம்கிடைக்காமல் போகலாம்
மகளின் அன்பு கிடைக்காமல்  போகலாம்
,தாரத்தின் அரவணைப்பும் இல்லாமல் தவிக்கலாம் ....ஆனால்
தாயன்பு  இல்லாமல் வையகத்தில் யாருமுண்டோ?

இவ்வுலகில் வாழக் கற்றுக்கொடுக்கும் நீ
எப்படி வாழ வேண்டும் என்று   கற்றதை  மறந்தனையோ?..
உன் பிள்ளைகளின் கண்ணீரை துடைக்க நீ இருக்கிறாய்
உன்  கண்ணீரைத் துடைக்க இங்கு யார் இருக்கிறார்?

இவ்வுலகில் உன்னைப் பாதுகாக்க சட்டங்கள் பல இருக்கலாம்,
ஆனால் அதை மதிப்பவர்களோ மிகக்  குறைவு.
காரியங்கள் நடப்பதற்கு முன்பே காக்க வேண்டிய சட்டம்,
 காரியம் முடிந்த பின் அல்லவா கண் விழித்துப்பார்க்கிறது ?

என்னவொரு பாவப்பட்ட பிறவியோ நீ
கருவறையிலிருந்து பிணவறை செல்லும் வரை
பாடுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
கருவறையில் கருச்சிதைவாய்
வகுப்பறையில் மனச்சிதைவாய்
வேலை செய்யும் இடத்திலோ உடல்சிதைவாய்
இறுதியில் வீட்டிலோ உயிர்ச் சிதைவாய்.

இம்மண்ணுலகில் நீ துன்பங்களை அனுபவித்ததாலோ என்னவோ
விண்ணுலகில் தேவதையாய் பிறப்பெடுக்கிறாய்.
தேவதைகளை விண்ணுலகில் மட்டுமே தேடும் ஆண்களுக்கு
 தன்னோடு இம்மண்ணுலகில் வாழும் தேவதைகள்
கண்ணுக்கு  தெரியாதது  எனோ   ?

தன்னோடு இருக்கும் ஆண்களை உறவாக பார்க்கும் பெண்களை
இ ந்த ஆண் இனம் வெறும் இச்சைப் பொருளாய் பார்க்கின்றது.
ஆண்களின் ஆசை எந்த இடத்தில் முடிகின்றதோ  , அந்த இடத்தில்
பெண்ணின் வாழ்க்கையே  முடிகிறது.

ஓர் பெண்ணை இச்சைப் பொருளாய் பார்க்கும் ஆண் சமூகமே
 ஓர் நிமிடம் அவளின் ஆழ் மனதைப் பார்
அப்போது புரியும் நீ செய்யவிருக்கும் தவறின் அளவு.

தாரமாய்  இருந்தாலும் அவள் விருப்பின்றி தொடுதல்
சட்டப்படி குற்றம்  என்கிறது  இந்த நாடு ' ...ஆனால்
பிஞ்சுகளை கூட வேட்டையாடும்  சமூகமும்  இங்குதான்

வன்கொடுமை செய்யும் ஆண் இனமே
உன் பிறப்பின் பெருமையை உணர்ந்தால்
 உன் தாரத்தை தவிர மற்றொரு பெண்ணை  தொட அஞ்சுவாய்  .
பாதுகாவலனாக  இருக்க வேண்டிய ஆண் இனமே
பசிதீர்க்க  அவள் மீது பாய்ந்தால்
தற்கொலை செய்து கொள்வதைத் தவிர
வேறு என்ன செய்யும் இந்த பெண் இனம்...

இப்படிக்கு,
பெண்மை தீயில் கருகுவதை  கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் கையறு நிலையில் இருக்கும் சராசரி மனிதன்....
« Last Edit: November 17, 2021, 01:24:30 PM by AK Prakash »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பெளர்ணமியாய் ஜொலிக்க வேண்டிய
நிலவொன்று இன்று
பிறைநிலவாய் தன் வாழ்வை
முடித்துக் கொண்டதே...

மலர்ந்து மணம் வீச வேண்டிய
பூவொன்று இன்று
அரும்பிலேயே தன் ஆயுளை
கருக்கிக் கொண்டதே...

எத்தனைக் கனவுகள்
எத்தனைக் கற்பனைகள்
கொண்டு வாழ்ந்தாயோ பெண்ணே..?
அனைத்தும் கடலில் கரைத்த
பெருங்காயமாயிற்றே...
காற்றில் கரைந்த கற்பூரமாயிற்றே...

அன்று பெய்த மழையில்
முளைத்த காளான்களாய்
நிர்பயாக்களின் துயரச் செய்தி
ஓர்நாளில் மடிந்து விட,
இன்று பெய்த மழையில்
முளைத்த காளானாய்
பொன் தாரணியின் துக்கச்செய்தி
இன்னும் எத்தனைநாள் உயிர் வாழ்ந்திடுமோ?

தெரிந்த சில நிஜங்கள் மட்டும்
வாயில் போட்ட அரிசியாய்,
வெற்றுப் பேச்சுகளாகி
மென்று தீர்க்கப்பட...
தெரியாத பல நிஜங்கள் நம்
கண்களைக் கட்டிவிட்டு
சுதந்திரமாய் வலம் வருகின்றன
சமுதாயமெங்கும்...

குமரியாயினும் கிழவியாயினும்
பச்சிளங் குழவியாயினும்
பெண் என்ற ஒற்றை வார்த்தையே
போதுமானதாய் இருக்கிறதே
தன் வெறி தீர்த்துக்கொள்ள
காத்திருக்கும் காமுகர் கூட்டத்திற்கு...

எங்கு தான் தன்னை ஒளித்துக்
கொள்வாள் பெண்?
ஏழுகடல் தாண்டி ,ஏழு மலை தாண்டி
சென்றாலும் அங்கும் ஒரு காமுகக் கயவன்
இருக்கத்தானே செய்வான்?
தன் சுயரூபம் மறைத்து.....
தன் கொரூரம் மறைத்து...
எங்கு தான் தன்னை மறைத்துக்
கொள்வாள் பெண்?

பெண்மையின் மேன்மையையும்
பெண்மையின் மகத்துவத்தையும்
எடுத்துக் கூறி,
இனியேனும் சொல்லி வளர்ப்போம் பிள்ளைகளை....!
மாதர்களை மதிக்கவும், மாதர்களை பாதுகாக்கும் கடமையையும் வலியுறுத்தி இனியேனும் சொல்லி வளர்ப்போம்
நாளைய விதைகளை...!

பெண்மை வாழ்க! பெண்மை வளர்க!

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰

இது என் உருக்கமான வார்த்தைகள் பொன்தாரணி நேர்ந்த கொடுமையை கேட்டு மிகவும் வருந்துகிறேன்👎🏻😔

இந்த கவிதையை எல்லா பெண்களுக்கு சமர்ப்பணம் 👍💪


பெண்ணே நீ கலங்காதே 💪

உன் பக்கத்தின் நியாயத்தை யாரும் பேச முன் வரவில்லை என வருந்துகிறாய  நீ 😔

நீதான் இந்த உலகத்தில் வாசல்..!!💪

நீ இன்றி இந்த உலகத்திற்குள் யாராவது நுழைய முடியுமா???

உன் அரவணைப்பு இன்றிதான் இந்த பூமியில் யாரும் வாழ முடியுமா 👍

உன்னை தன் சுயநலத்திற்காக  போற்றுபவரும் உண்டு, உன்னை தூற்றுபவரும் உண்டு.

நீ எதற்கும் கலங்காதே..!

எல்லோரும் உன்னை புரிந்து கொள்ளும் காலம் வெகு விரைவில்..!!👍

நீ தோல்வியை கண்டு ஓடுபவள் கிடையாது 👍

எதிர்கொண்டு நடப்பவள் நீ 💪

நீ யாருடைய ஆணவத்திற்கும் அடிபணிபவள்  அல்ல..!!👍

அன்புக்கு மட்டும் அடிபணிபவள் நீ..!!👍

நீ யாருடைய துணையும் இன்றி வாழ்ந்து காட்டுவாய்..!!💪

ஆனால் உன் துணை இன்றி யாருமே இங்கு வாழ முடியுமா..??

இந்த பூமியில் உனக்கு கிடைக்கும் பட்டங்கள் ஏராளம்👍

குழந்தை பெற்று கொடுக்கவில்லை என்றால்..?? மலடி என்ற பட்டம் 😔

கணவனுக்கு பயந்து வாழவில்லை என்றால்..? அடங்காதவள் என்ற பட்டம்

நீ முன்னேறி கொண்டே சென்றால் உன்னை அடைத்து வைக்க ஒரு பட்டம்..!!

இதுபோல ஏராளம் உனக்கு கொடுக்கும் பட்டங்கள்..!!

எதையும் கண்டு கலங்காதே பெண்ணே 💪


உன்னை காயப்படுத்தும் மனதிற்கு தெரியுமா..?? நீயும் ஒரு உயிர்தான் என்று..!!

புத்தகம் சுமக்கும் வயதில் குடும்ப பாரத்தை சுமக்க பழகிகொண்டவள் நீ 👍

பூ போல் மலர்ந்து சிரிக்கும் வயதில் ஆண் என்ற ஆதிக்கத்திற்குள் மாட்டிக்கொண்டவள் நீ...!!

எங்கும் எதிலும் உனை பாதுகாக்க காலம் காலமாக

நீ ஓடிக் கொண்டே தானே இருக்கின்றாய் 🏃‍♀️

பூவே நீ பெண்ணாக பிறந்து விட்டோமே..!! என வருந்தும் நிமிடங்கள் ஏராளம் அல்லவா..??

வருந்தாதே உனக்கு எதையும் தாங்கும்  மன உறுதியை கொண்டு  இருப்பதால் தான், இந்த பூமியின் பாரம் உன்மேல் இருக்கிறது...

எத்தனையோ உன் ஆசைகள் மறந்து உன் எண்ணங்களை துறந்து...

தன் சுற்று சூழலுக்குகேற்ப உன்னை நீ மாற்றி கொண்டுதானே வாழ்கிறாய்..!!👍

தாய் தந்தை சொன்ன ஒரே காரணத்திற்காக முன் பின் அறியாதவரையும் உன் துணையாக ஏற்றுக்கொண்டாய்..!!💪

அதனால் வரும் வலிகளையும் நீ தாங்கிக் கொண்டாய்..!!👍

இனி வரும் காலங்கள் அதுபோல இருக்காது பெண்ணே...!!👍

உன் தியாகங்களும் சாதனைகளும் வெளியில் வந்த வண்ணம் தந்து வெளிச்சம்  இருக்கு போகிறது..!!💪

இரும்பு மனம் கொண்ட இனியவளே..!!

நாளை உன் நாள் பிறக்கும் கலங்காதே👍💪

Offline Anbudan Natpu

  • Newbie
  • *
  • Posts: 4
  • Total likes: 19
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
                  பெண் என்றாலே பெருமை தானே
          ‌‌‌‌.                    நீ என்ன கலங்குவதா
உனக்கு நிகர் நீயே பெண்மை போற்றிடா புலவனும் உன்டோ
             அம்மா உனக்கு நிகர் நீயே! என் சுவாசமும் நீயே!
    2ஐந்து திங்கள் கருவிலே சுமந்து என்னை சிற்பமாய் வடித்தவளே
                                   உன் அன்பிற்கு நிகர் நீயே!
                           என் நாவிலே தமிழை வளர்த்தாய்
                           எந்தன் வாய்மொழி யின் ஒலி நீயே!
என் சுவாசம் நீயே! என் சிந்தனையும் செயலும் நீயே!
           இன்னும் எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும்,
உன் மகனாக பிறந்திட‌வரம் தருவாயோ என் தாயே
            உன்னை போற்றிட வார்த்தைகளும் உன்டோ உலகிலே!                         
                   உனக்கு நிகர் நீயே உன் அன்பிற்கு நிகர் நீயே
            ‌‌                உ‌‌ன்  சுவாசமும் பாசமும் அன்பும்
               ஆதரவும் கிடைத்தது என் பாக்கியமே
                  ‌‌          உன் அன்பிற்கு நிகர் நீயே!
            பெண்மையேன பிறந்து தாயேன வளர்ந்து ,
                                 என்னை ஈன்றவளே ,
            உன்னை போற்றிட வார்த்தைகளும் உன்டோ !
       எம்மொழியாயினும் வார்த்தைகள் ஒன்றும் ஈடாகாது
       ‌‌‌          எம் அன்னையே ,
           பெண்மையே கலங்காதே என்றும்
       பெண்மை போற்றிடா புலவனும் இல்லை
              அன்னை தமக்கை காதலி மகள் என்று
            எத்தனை எத்தனை பெயர்கள் உள்ளன
      மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம்
           என்றான் மகா கவி பாரதி
        பெண்மை கலங்காதே கயவர்களை களைந்து
              உன்னை போற்றிடவும் பாதுகாகத்திடம் 
       பெண்மையே  தேசமென  வாழ்த்திடவும் போற்றிடவும்
               பாரினில் தீரம் கொண்ட காளைகளும் உண்டு
        வண்ணசித்திரம் ஒன்று தீட்டினேன் அது அழகு அல்ல !
      சிறகடித்து பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் அழகு அல்ல!
      அந்தி சாயும் நேரம் செங்கதிரும் அழகு அல்ல!
     மொட்டு விரியும் வண்ண பூக்களும் அழகு அல்ல !
       புல்வெளி தன்னில் விழும் பனித்துளியும் அழகு அல்ல!
              வானத்தின் நீலமும் அழகு அல்ல !
       வான் மாறி பொழியும் மழையும் அழகு அல்ல!
                  என் கண்ணின் மணிகள்
          பெண்மை ஒன்றே அன்பின்மிகுதி 
                  தாயாகவும் சேய்யாகவும் முகம் மாறும்
             பெண்மை ஒன்றே அன்பின்மிகுதி அழகின் மிகுதி
                    ஒளியின் மிகுதி ஒலியின் மிகுதி
            பெண்மையை போற்றுவோம் தாய்மையே
             ‌‌             என்றும் உன் சிறப்புக்கு முன்னால்
             எதுவும் இல்லை ,ய எவையும் அழகு அல்லய         
                             பெண்ண்மையே கலங்காதே
         தேசமென காப்போம் பெண்மையை போற்றுவோம்
                 ‍‌              தா‌‌ய்மையை காப்போம்
         ‌‌
‌‌                                                            என்றும் அன்புடன்
                                                         உங்கள் " அன்புடன் நான் "
« Last Edit: November 16, 2021, 03:26:09 AM by Anbudan Natpu »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

பெண்ணே எத்தனை பிறவி நீ பிறந்தாலும் உனக்கு நிகர் நீயே!
பெண்ணின் பெருமை தெரியாமல் மூடர் கூடம் ஒன்று உன்னை சீரழிக்க வழி வகை செய்தனவே!!
ஆணாதிக்க சமூகம் கண்டு பயம் கொள்ளாதே!!!
உன்னை வேட்டையாட கழுகை போல் ஈன பிறவிகள் மோப்பம் கொண்டனவே!!!!

அதை எதிர் கொண்டு தலைதனை கிள்ளி எறி பெண்ணே!
காமுகர் கண்ணில் படாதவாறு உன்னை எப்படி நான்  பாதுகாப்பேன்!!
வேலியே பயிரை மேய்ந்த கதையாய் ஆகி விட்டதே!!!

பெண்ணே பயம் கொள்ளாதே எதையும் வீட்டில் சொல்ல தயங்காதே!
நீ முறையிட்ட பெண்ணும் பெண் தானோ!
உனக்கு உதவ ஆயிரம் கைகள் இருந்தும் அனைத்தும் செயலற்று போனதே!!
உன்னை காக்க யாரும் முன்வரவில்லையே!!!

இந்த சமூகத்தில் உன்னை வாழ விடாமல் செய்யவே! அரக்கன் போலவே வந்தான்  ஈன பிறவி ஒருவன்
அவனை காத்த இந்த சமூகம் உன்னை கை விட்டுவிட்டதே!!

கவலை கொள்ளாதே உன்னை போல் தேவதைகளுக்கு பூமியில் வாழ வழி செய்ய இயலாத இந்த சமூகம் என்றாவது ஒருநாள் உனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்!

உன்னை போல ஒரு பெண்ணல்லவோ
ஆரம்பத்தில் கிள்ளி எறியாமல் சதி செய்தாளே!
உன் வாழ்வு தொடங்கும் முன்னே காலனின் அடி பற்றினாய்!!
மொட்டு ஒன்று மலரும் முன்னே காமுகனின் விதி வசத்தால் மடிந்து போனதே!!!

பெண் தான் இந்த நாட்டின் கண் என்பதை எழுத்தளவில் அல்ல செயலளவில்  நடை முறை படுத்த முயல்வீர்!!!
எத்தனை  துன்பம் தான் தாங்குவாள் இந்த பெண்!!!
இனியாவது திருந்துங்கள் மானம்கேட்ட சமூகத்தின் பிரதிநிதிகளே!!!


உனக்கு சதி செய்தவர்கள் நீதி தேவதையின் முன் மண்டியிட்டு தீர்ப்பை எதிர்பார்த்து செய்த தவறை உணர்ந்து இனி எவரும் செய்யா வண்ணம் நீதி தேவதையின் தீர்ப்பை எதிர்பார்க்கும் கையாலாகாத
சமூகத்தில்

 நானும்  ஒருவன் 😒
#Justice For Pontharani

« Last Edit: November 16, 2021, 05:12:36 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline SweeTie

நாட்டின்  கண்கள் பெண்கள் என்றார்   அது 
ஏட்டில்   எழுதிய  கதை  மட்டும்தானோ ?
வீட்டின்  வண்ணக் குத்துவிளக்குகள்   தூக்கி
வீசப்படுவதும்  எனோ

கள்ளிப்பாலை  கரைத்துக் கொடுத்து
கருவிலே  பெண்ணை  கொன்றனர்  அன்று
பள்ளிப் பருவ கற்பகதருக்கள் 
கறைகளைச்  சுமந்து   வாழ்கிறார்  இன்று

 பெண்ணின் வயிற்றில்  கரு ஆனவனே 
பெண்ணோடு   கூடப்  பிறந்தவனே '
பெண்ணுக்கு  தந்தை  ஆனவனே   மற்ற 
 பெண்களில்    இச்சை கொள்வதும் எனோ

சிற்பி செதுக்காத  பொற்சிலையை
தீண்டி  உடைப்பது  அநியாயமன்றோ 
சோலைக்குயில்களை  சாலையோரம் 
தூக்கி எறிவதும்  அநியாயமன்றோ

பெண்கள்  சுதந்திரம்  பேசுகிறார் 
வீட்டுப்  பெண்களை  மதியாத ஈனர் 
நல்லதே செய்வோம்  நன்மையே செய்வோம்
என வீராப்பு வேறு  போகிறார்

ஆணும்  பெண்ணும்  சமனென  கொள்வோம்
அன்பினால் உலகம் ஓங்கிட செய்வோம்