Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 285  (Read 1675 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 285

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰

🥰கட்டி இழுக்கும் விழி உனக்கு👁️

🥰கவிழ்ந்து விட்டேன் அதை பார்த்து👁️

🥰கருப்பு வெள்ளை நிறம் மட்டும்👁️

🥰அது இரவும் நிலவும் போல் இருக்கும்👁️

🥰உன் இதழ் பேச தொடங்கும் முன்னே👁️

🥰உன் விழி பேசி முடிக்கிறதே👁️

🥰உன் இமை மூடி திறக்கும்போது👁️

🥰ஆகாயம் விழி மாறிப்போகிறதே👁️

🥰கேட்பதா பார்ப்பதா தெரியவில்லை👁️

🥰பார்வையால் நீ பேசுகிறாய்👁️

🥰கவியா கலையா புரியவில்லை👁️

🥰கடை விழியால் அம்புகள் வீசுகிறாய்👁️

🥰விலை இல்லை ஆனால் விளைவு உண்டு அவள் பார்வைக்கு👁️

🥰சுமை இல்லை ஆனால் சுகம் உண்டு அவள் பார்வைக்கு👁️

🥰வித்தைகள் இல்லை வியப்புகள் அவள் விழி தந்தது👁️

🥰அதிசயங்கள் இல்லை அதில் அர்த்தங்கள் பல உள்ளது👁️

🥰கடந்து சென்றது சில முறைதான்👁️

🥰அதில் கடத்தி சென்றது அவள் கடைவிழி தான்👁️

🥰காயங்கள் தீர வேண்டும் அன்பே சற்று உற்றுப்பார் வேதனைகள் மறையட்டும்👁️

🥰விடியாமல் போய்விடப்போகிறது👁️

🥰அன்பே சற்று விழித்துப்பார்👁️

🥰சூரியன் உதிக்கட்டும் 👁️

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

மறைந்திருந்து பார்க்கும் மங்கையின் மர்மம்?
கடைகண்ணின் ஓர பார்வையால் காதல் வலை வீசினாள்!

மதி மயக்கும் மங்கையின் காந்த கண்கள்,
அவள் பார்வையின் அர்த்தம் அதை கண்டு பிடிக்க மனம் ஏங்குதே!

மங்கையின் விழி ஒரு புதிய பாஷை எனக்கு கற்பித்ததே!
அந்த  விழி பாஷையின்  புரிதல் கொண்டு பதில் சொல்லவா!

அல்லது உன் விழி அழகின் ரகசியம் சொல்லவா!
கன்னியின் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே!
 காதலனின்  கோப தாபம் தீர்க்க.

உனது பார்வை கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ!
தேவலோக மங்கையின் மகளோ இவள்!
ஒரே பார்வையில் என்னை சாய்த்து விட்டாள்!

மை தீட்டிய மங்கையின் மான் விழி,
வில்லை போல் வளைந்து இருக்கும் உனது புருவ அழகில்!
சொக்கிதான் போனேன் என்னை நான் உன்னிடம் தந்தேன்!

அதில் நான் ஏற்றி காதல் அம்பு தொடுக்கவா உந்தன் மீது!
உந்தன் புன் சிரிப்பு முகம் கண்டு நீ வீசிய காதல் வலையில் விழுந்தேன் என்னை நானே மறந்து!

காதலில் விழுந்தேன் !
கடைகண்ணின் உந்தன் பார்வையால் அன்பே!!
« Last Edit: November 29, 2021, 02:41:26 AM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline PreaM

வீச்அருவாள் புருவக்காரி
வெட்டும் விழி கண்ணுக்காரி
உன் கூரான பார்வையிலே
என்னைக் குத்திக் கிழிக்குறியே...

கதவோரம் மறைந்து நின்னு
காதல் அம்பு வீசுறியே
நீ கண் இமைத்தால் போதுமடி
உன்னைக் கண்ணுக்குள்ள காத்திடுவேன்...

உன் விழி ஈர்ப்பினிலே
புவியீர்ப்பு விசையும் தோற்றிடுமே
ஒளிந்திருந்து பார்ப்பவளே உன்
பார்வையால் வலை வீசுறியே...

உன் காந்த விழியின் அழகைக் கண்டு
காதல் எனும் எண்ணம் கொண்டு
உன் கண்ணிலே கலந்து
என்னை நான் மறந்து
சிறைபட்டு நிற்கிறேன் ...

உன் கண்களால் கைது செய்யப்பட்டு...
உன் கண்கவர்ந்த காதலனாக...


« Last Edit: November 28, 2021, 04:02:42 PM by PreaM »

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
எனதுயிரே என்னவளே
என் காதலை பற்றி - ஓர்
கவிதை கூற நினைத்தேன்
இருந்தும் வார்த்தைகள் எல்லாம்
மௌனம் ஆகின்றன- காரணம்
ஆறு வரிகளில் அடங்குமா
நான் உன்மேல் கொண்ட காதலும்
அளவில்லா அன்பின் ஆழமும்
இருந்தாலும் முயற்சிக்கிறேன்....

கல்யாண வைபோகத்தில்
கதவிடுக்கின் மறைவினிலே
உன் இரு மான்விழிகளில்
இடறி விழுந்தேன் - பொட்டு வைத்த
நெற்றிச் சுவட்டினிலே போக வழியின்றி
திசை மாறி திணறிக் கிடந்தேன்....
முதல் பார்வையில் மலர்ந்த காதலை
முன்மொழிந்தேனே உன்னிடம்
மறுத்தாய் முதலில் - பின்பு
நானே உந்தன் மணவாளன் என்றாய்...

சிலபொழுது சிக்கித் தவிக்கின்றேன்
உன் குரல் கேளாத நிலையில்
அதுதான் என்னவோ - அடிக்கடி
சண்டையிட்டுக் கொள்கிறேன் உன்னோடு...
நூலளவு அன்பு கூட குறையவே இல்லையே
பிணக்குகள் கூடினாலும் நம்மிடையே
அந்த ஊடல் கூட சுகமானது தான்
நான் இறந்தாலும் என் சுவாசம்
உனக்கே உனக்காய் என் இனியவளே....

உள்ளங்கையில் எடுத்த நீராக
காதலை நான் எண்ணியிருந்தேன்
உன்னைப் பார்த்த பின்பு - அது
உள்ளடக்க முடியாத -ஒப்பற்ற
அமிர்தம் என்று உணர்ந்து கொண்டேன்...
அதிகாலை சூரியனாய் - உன்
ஞாபகங்களோடு விழித்தெழுகின்றேன்
முழு நிலவில் உன் முகம் பார்த்து
உனைச் சேரும் நாளை -நம்மிரு
கைகளும் ஒன்றிணையும் நொடியை
கனவுகளில் தினம் சுமந்து
கண்மூடி உறங்குகின்றேன்
கரைந்து செல்லும் இராப் பொழுதுகளில்....

ஏழேழு ஜென்மம் வேண்டாம் எனக்கு
இந்த ஒரு ஜென்மம் போதுமடி
உந்தன் அன்பில் உருகி விட்டேன்
உனதுயிரில் எனதுயிரை கலந்து விட்டேன்
நானும் உன் அன்னை தானடி
முப்பொழுதும் உனை மனதில் சுமப்பதனால்
என் காதலே எனை ஆள்பவளே
காந்தக் கண்ணழகே காவியப் பேரழகே......

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !

ஜன்னலில்  ஒருபாதிமறைத்து
எட்டி பார்க்கும் நிலவு நான்...
என்  புறத்தோற்றவெளிபாடு
வெண்ணிறஒளியும் குளுமையுமாய்
ஒருபாதி முகம்தான்...
சேற்றில் மலர்ந்த செந்தாமரை...
வானம் விரித்த வண்ணகுடை
வானவில் தான் என் பெயர்...
காற்றில் அசைந்தாடும் ஊஞ்சலிலே
கார்மேக கூந்தலின் பின்னலிலே
ஊர்பறவை வந்து கூடு வசிக்கும்..

யாரும் அறிந்திடா மறுபாதி...
இடிமழையில் பொழியும் நெருப்பு...
எரிமலையின் குழம்பினிலே
தீமையை எரிக்கும் அனலாக...
செந்தேக  நெருப்பினிலே
விருப்பங்கள் யாவும் சாம்பலாக..
மின்னி‌மறையும் வைரங்களாக
மண்ணுள் மறையும் ஆசைதீ..

நிழலும் சொந்தமில்லா உலகில்
நினைவுகளையே உரமாக போட...
பழகிய நாட்களின் பார்வையில்
ஓர் சூழ்நிலை கைதியின் நாட்குறிப்புகள்....
கண்மூடி திறக்கும் நொடியில்
காற்றாய் பறந்த மனகுதிரைக்கு
ஊற்றாய் பெருகும் உணர்வுகளை
ஊழிகனலுக்கு உணவாக போட்டால் என்ன?

இவையாவும் உன்னை கண்டதால்
சுவையாகி‌ போன‌ எண்ணங்கள்..
நகையாகி போன‌ நரகவாழ்வில்
மிகையான‌ வீண்கற்பனைகளோ?
நான் அறியேன்...
காலங்களும் கனவுகளும்
கொள்ளை போன ஒரு நேரத்தில்
நேசங்களுக்கும் பாசங்களுக்கும்
வாசமில்லா பாதை தானே?



Offline AK Prakash

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
உந்தன் ஒற்றைப் பார்வையில்
எனை தாக்கும் என் அழகு தேவதையே.
 பார்ப்பதற்கு முன்பு ஒரு வார்த்தை சொல்லிவிடக்கூடாதா ? ...

நான் என்னை முழுவதுமாய்  தயார்படுத்தி
உன்  விழிகளில்  விழுந்துவிட.  ..


என்னை பன்முகத்தன்மை எடுக்க வைத்த பிரம்மன் நீ...
உந்தன் கூந்தலைக் காண்கையில் விவசாயி முகம் கொண்டேன்
உந்தன் நெற்றியை காண்கையில்
பழரச வியாபாரியாய் ஒரு முகமாய்,
உந்தன் கண்களைக் காண்கையில்
விண்வெளியாளனாய்  உருக்கொண்டேன் ,

உந்தன் கழுத்தைக் காண்கையில்
சிலை வடிக்கும்  ஒரு சிற்பியும் ஆனேன் ,

உந்தன் விரல்கள் காண்கையில்
முரசொலி  கொட்டும்  நட்டுவனானேன்

காற்றோடு பறக்கும்  உன் கருங்கூந்தலுடன் 
சேர்ந்தே  பார்க்கிறதே என்  இதயமும் 
பாவை உன்  பரந்த விழிகளில்   தெரிந்த
காதல் என்னும் பள்ளத்தில் தெரிந்தே விழுந்துவிட்டேன்  நான்...


என்னுள் இருக்கும் கவிஞனுக்கு பிறப்பிடம்
நீதான்  என தெரிந்தும்     தெரியாத பிள்ளைபோல்
அலட்டி கொள்கிறாய்   என்னை
கண்டும் காணாதவள்போல்  அல்லவா நடிக்கிறாய்
கதவின் பின்னே ஒளிந்து என்னை ரசிக்கிறாய்
போதுமடி  உன்  இந்த திருட்டு  விளையாட்டு ..

நட்பிற்க்கு அப்பாற்பட்டதான
உன் ஒற்றைப் பார்வையால்
பூமியை இரண்டாய்,
துருவங்களை மூன்ற
பிறைகளை நான்காய்,
திசைகளை ஐந்தாய்,
புலன்களை ஆறாய்,
அறிவை ஏழாய்
மாற்றியமைத்தாய் நீ...
இன்னும் என்னவெல்லா
« Last Edit: December 01, 2021, 12:30:42 AM by AK Prakash »

Offline MoGiNi

இதழ் கடந்தும்
இனிக்கிறது உன் முத்தம்
இயல்பிழந்து
தவிக்கிறது இதயம் ..

உன் விரல்களின் விளிம்பில்
விரகம் தடவி
விளைகிறாய நகம் தீண்ட
கணுக்கள் தோறும்
ஊற்றெடுக்கிறது
பன்னீர் நதிகள் ..

விளங்க முடியாத
உன் பார்வைக்கும்
விரசம் கொள்ளவைக்கும்
உன் புன்னகைக்கும்
விலாகத உன் அன்புக்கும்
இடையில் பாய்கிறது
ஒரு மிதமான சுகந்தத்துடன் அது ..

கைசேர முடியாத காதலுடன்
கண நேரம் பிரியா நேசமுடன்
ஒரு மின்னலென
பூத்து மறைகிறது
கண்ணீர் புஷ்பங்கள் ...

அணைத்து அர்ச்சிக்க
அணுவளவு வாய்ப்பு
அற்றுப் போனாலும் - என்
கண்ணீரால் அர்ச்சிப்பேன்
மறைந்தாலும்
உனக்காய் மலர்ந்து மறையும்
உன் பாசமெனும்
பன்னீர் நதியில் அலர்ந்த
கண்ணீர் புஷ்ப்பங்கள் .

Offline Dong லீ

என் விரல்கள் இப்போது
வண்டுகளின் ஆக்கிரமிப்பில் .
தேன் துளிகளை தேடும்
அவ்வண்டுகளிடம்
எப்படி அறிவிப்பேன்
"இது பூவல்ல ..
அவள் கூந்தலை கலைத்து
ஓடி வந்த காற்றின்
 ஈரம் உரசியதால்
அவளின் பூவாசத்தை
சுமக்கும் என் விரல்கள் என்று "

என் தோள்கள் இப்போது
ஆன்மாக்களின் ஆக்கிரமிப்பில்
சொர்க்க வாசலை தேடும்
அந்த ஆன்மாக்களிடம்
எப்படி அறிவிப்பேன்
"இது சொர்கமல்ல
அவள் முகம் சாய்த்து
கண் இமையின் ஒரு
சிறு முடியின்
முடிவிலிருந்து உதிர்ந்த
நீர்த்துளி பட்டு
புண்ணியம் பெற்ற
என் தோள்கள் என்று "

பூக்கள் தேசமும்
பூக்கள் வாசமுமாய்
நேற்றிரவின்  என் கனவுகள் .!
தூசி விழுந்த என் கண்ணில்
அவள் ஊதி சென்ற மூச்சுக்காற்று
 பூவாசமாய் கண்ணில் கலந்து
கனவில்  ஊடுருவியதால் .!

மழலைக்கு அவள் முத்தமிட
குவிந்த அவள் உதட்டின்
வரி பள்ளத்தில்
விழுந்தது என் இதயம்

செல்லமாய் அவள் புன்னகைக்க
விரிந்த அவள் உதட்டின்
வரி பள்ளங்கள்
இடம் மாறி
இரு கன்னங்களில்
குழியாக குடியேற
என் இதயமும்
தடம் மாறி சிக்கிக்கொண்டது
அவள் கன்னக்குழியில்
« Last Edit: November 30, 2021, 11:31:25 PM by Dong லீ »

Offline SweeTie

சூரியனைக் கண்ட  தாமரைபோல் 
உன்னை காணுகையில் நான்  வெட்கித்து போகிறேன்
நேருக்கு  நேர்   கண்ணோடு கண்  நோக்க  ஆசைதான்
பெண்ணுக்கே  உரித்தான நாணம் தடுக்கிறதே

வெட்கித் தலை குனிந்து
மறைந்திருந்து  உனை ரசிக்கையில்   
மனதில்   பறக்கும்  பட்டாம் பூச்சிகளைவிட   என் 
கண்களில் தேங்கி நிற்கும்  காதல் துளிகள்தான்  அதிகம் 

உன் கண்ணில் பட்டுவிட வேண்டுமென நினைப்பேன்
ஆனால் தொட்டுவிடுவாயோ  எனும்  பயமும் 
விட்டு விட்டு  அடிக்கும்  என்  இதயமும்   என்னை
  கட்டிப்போட்டு  தடுக்கிறதே 

அந்த   காந்த  விழி  மடலில்    அரைமணி நேரம்
அந்தரங்கமாக    படுத்துறங்க   ஆசைதான்    ஆனால்
அங்கு  நீ  பதுக்கி வைத்திருக்கும்   காதல்  அம்புகள் 
என்னை  குத்திவிடுமோ    என்னும் பயத்தோடு இருக்கிறேன்

மின்வெட்டுபோல்  நீ என்னை தாண்டுகையில் 
உன் கண்ணில்  கொழுந்துவிடும்  காதலில்   நான்
அனலில்  துடிக்கும்  புழு போலாகிறேன்   என் அன்பே
அதனாலேயே  என்னை  மறைத்துக்கொள்கிறேன்

வான் சிந்தும்  பனித்துளிகளில்  புற்கள் சிலிர்ப்பதுபோல்
உன் கடைக்கண் பார்வையில்  என் உள்ளமும்  சிலிர்க்கிறது
தென்றலாய் வந்து  என்னை   தழுவிச் செல்வதுமேனோ ?
மெல்லிசையாய்  வந்து  என் இதயத்தை  வருடுவதுமேனோ?

.கண்ணனின்  குழலோசை இனிதென்று  நினைத்தேன்
உன் குரலோசை  கேட்கும்   முன்னர்
என் கொடியிடை  படர்ந்திட  கொழுகொம்பு தேடினேன்
வரமென  உனை அடைந்தேன்

காதல்  என்ற  சொல்லுக்கு  அர்த்தமில்லை தான்
அதற்காக காதலே  இல்லையென்றாகிவிடுமா  என் அன்பே  !
மறைந்திருந்து   உன்னை   பார்த்தாலும்     என்றும்   
உன் மனதில் வாள்பவளும்    நான்தானே!!!